Recent Posts

Archives

Topics

Uncategorized

« Previous Entries

ஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு

Monday, July 12th, 2010

ஒரே ஆண்டில், ஐந்து மாத இடைவெளியில் ஒரு முழுமையான ஆர்ப்பாட்டமில்லாத காதல் படத்தைக் கொடுத்து விட்டு இன்னொரு பரிமாணத்தில் ஒரு முழு நீள அதிரடித்திரைப்படத்தைக் கொடுத்துத் தன் சினிமா பயணத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய பெருமை நாகார்ஜீனாவுக்கு வாய்த்தது. முன் சொன்ன காதல் படம் நாம் சிலவாரங்களுக்கு முன் றேடியோஸ்பதியில் பார்த்த கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) , பின்னது முழு நீள அதிரடித் திரைப்படமாக வந்த ஷிவா என்ற தெலுங்குப்படம் தமிழில் “உதயம்” என்ற பெயரில் வெளியானது. […]

றேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும் வச்சாச்சு

Saturday, July 10th, 2010

தெலுங்கில் அதிரடியாய் வந்த திரைப்படங்களில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இந்தப் படத்தின் நாயகனுக்கும் சரி, வில்லனுக்கும் சரி பெரும் திருப்புமுனையாக அமைந்து விட்ட படம் இது. படம் கொடுத்த பெரு வெற்றி அப்படியே இயக்குனருக்கும் பெரும் அங்கீகாரம் கொடுத்து விட்டது. இவர்கள் எல்லோருக்கும் மேல் இந்தப் படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி அடி பின்னிவிட்டார் இசைஞானி. இல்லாவிட்டால் 21 வருஷங்களுக்குப் பின்னர் பின்னணி இசையை ஞாபகம் வைத்து அதை நேயர் […]

சிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்)

Sunday, July 4th, 2010

திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய “வைரத்தில் முத்துக்கள்”. […]

இளையராஜா இசையமைப்பதைக் கேளுங்கள்

Friday, July 2nd, 2010

இளையராஜாவின் பாடல்கள் நண்பர் ரவிசங்கர் ஆனந்த் போன்ற இனிய நட்புக்களைத் தந்திருக்கின்றது. அந்தவகையில் அவர் தந்த ஒரு அரிய பொக்கிஷத்தை இங்கே தருகின்றேன்.
ஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ், சுமித்திரா நடிக்க இசைஞானி இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “பாவையர்கள் மான் போலே” என்ற பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கும் போது ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவையே பகிர்கின்றேன். இன்றைக்கு எத்தனையோ தொழில்நுட்ப […]

கீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு

Friday, June 18th, 2010

எல்லோரும் ராவணன் படம் பார்த்துக் களித்துக்/களைத்துக் கொண்டிருக்கும் சமயம் கீதாஞ்சலி (தெலுங்கு) இதயத்தைத் திருடாதே (தமிழ்) இரண்டையும் இணைத்த டிவிடி ஒன்றை ஓடவிட்டு வழக்கம் போலப் பின்னணி இசைப்பிரிப்பு வேலைகளை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக மெல்ல மெல்ல இசைஞானியின் இதயத்தைத் திருடிய இசை மீண்டும் திருட வைத்துக் கொண்டே பூவினை அதன் காம்பிலிருந்து காயம்படாது எடுப்பது போலப் பிரித்தெடுத்தேன். மொத்தமாக 19 இசைக்குளிகைகள் வந்தன. கூடவே கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பி.சி.ஶ்ரீராமின் காமிராக் கண் வழியே […]

றேடியோஸ்புதிர் 56: தமிழில் வந்த அதே தலைப்பு தெலுங்கில்; ஆனால் வேறு வேறு

Friday, June 11th, 2010

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்து தமிழில் வந்த ஒரு படத்தின் அதே படத்தலைப்புடன் சில வருஷங்களுக்குப் தெலுங்கில் வந்த இந்தப் படம் இத்தனை புகழை அள்ளிக் குவிக்கும் என்று ராஜாவே அந்த நேரம் எண்ணியிருப்பாரோ தெரியவில்லை. ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளோடு தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் புகழப்பட்ட இந்தப் படத்தை வாரியணைத்துப் போற்றிப் புகழத் தமிழ் ரசிகர்களும் தவறவில்லை. இன்று எத்தனை பேருக்கு இந்தப் படம் ஒரு மொழி மாற்றுப் […]

பின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து

Tuesday, June 1st, 2010

ஜீன் 2 ஆம் திகதி, இசைக்கு இலக்கணம் வகுத்த பண்ணைப்புரத்தில் பிறந்து உலகை ஆளும் எங்கள் இசைஞானி இளையராஜாவுக்குப் பிறந்த நாள். இன்பம், துன்பம், காதல் , பிரிவு, கல்யாணம், துறவு எல்லாவற்றுக்குமே தன் இசை நாதத்தால் இலக்கணம் வகுத்து இன்னும் எம்மை ஆள்பவர். பட பூஜைகளில் பிரமாண்டமான நோட்டீஸ், பதாதைகள் பட வெளியீடுகளில் நாயகனை மிஞ்சும் கட்அவுட் விளம்பரங்கள், இளையராஜா பேரைச் சொன்னாலே முழுதும் விற்றுப்போகும் படப்பெட்டிகள், இவையெல்லாம் இதுவரையும் இனிமேலும் யாருக்கும் கிட்டாத […]

றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து

Thursday, May 27th, 2010

அந்தப் பெரிய நடிகரின் தீராத ஆசை குறித்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று. அந்த ஆசையை நடிகரின் குருநாதரே தயாரித்து இன்னொரு இயக்குனரை இயக்க வைத்து குறித்த நடிகரின் இலட்சிய பாத்திரத்தில் நடிக்க வைத்து மனம் நிறைந்ததே மிச்சம் கல்லா நிறையவில்லை.
மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். இயக்குனர் சிகரம் தயாரிப்பு, அதே நடிகர் நடிப்பு, இயக்கம் கூட அதே முந்திய இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் […]

அனுராதா ரமணனின் “சிறை” - ஒலிப்பகிர்வு

Thursday, May 20th, 2010

பிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.
இவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை […]

பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்

Sunday, May 9th, 2010

தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது “காயத்ரி” என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் […]

« Previous Entries
server monitoring