பிரபல பத்திரிகையாளர்
ராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தருகின்றேன்.
இப்பகுதியில் மெல்லிசை மன்னரோடு இயக்குனர் ஸ்ரீதர், பந்துலு, பீம்சிங் இணைந்து பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்களோடு நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து “நெஞ்சம் மறப்பதில்லை”, கர்ணன் படத்திலிருந்து “ஆயிரம் கரங்கள்”, பாவமன்னிப்பு படத்திலிருந்து “வந்த நாள் முதல்” ஆகிய பாடல்கள் பிறந்த கதையும் இடம்பெறுகின்றது.
தகவற் குறிப்புக்கள் நன்றி : ராணி மைந்தன்
புகைப்படம் நன்றி: MSV Times