மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் – 1

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் என்ற புதிய தொடர் றேடியோஸ்பதியில் புதிதாய் ஆரம்பிக்கின்றது. தமிழ்திரையுலகில் ஒரு சில படங்களுக்கே இசையமைத்தாலும் நல்ல சில பாடல்களை விட்டுச் சென்ற இசையமைப்பாளர்கள் குறித்த சிறு அறிமுகமும் அவர்களின் இசையில் மலர்ந்த இனிய பாடல்களும் இப்பகுதியில் அரங்கேறுகின்றன.

அந்த வகையில் இன்றைய முதற்பாகத்தில் “சேரன் பாண்டியன்” திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமான இசையமைப்பாளர் செளந்தர்யன், அவரின் இசையமைப்பில் “காதல் கடிதம் வரைந்தேன்” என்ற பாடல் ராஜ்குமார், சுவர்ணலதா குரல்களிலும்,

“தலைவாசல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் “பாலபாரதி”, அவரின் இசையில் வந்த “அமராவதி” திரைப்பாடலான “தாஜ்ஜுமஹால் தேவையில்லை அன்னமே” என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களிலும் ஒலிக்கின்றன.