Archive for February, 2008
சிறப்பு நேயர் “ஜிரா என்ற கோ.இராகவன்”
Friday, February 29th, 2008கடந்த வாரம் அப்பாவித்தங்கை துர்கா வந்து பல மொழிப்பாடல்களோடு வித்தியாசமான தன் ரசனையை வெளிப்படுத்தினார். இந்த வாரம் ஆண் நேயர் என்ற வகையில் ஐந்து முத்தான பாடல்களுடன் வந்து கலக்குகின்றார் “ஜிரா என்ற கோ.இராகவன்“.
கோ.இராகவனின் பதிவுகள் இலக்கியம், சமயம், இசை, அனுபவம் என்று பலதரப்பட்ட பரப்பில் அகல விரிந்தாலும் அவரின் எல்லாப் பதிவுகளிலும் எஞ்சி நிற்பது அவரின் உயரிய ரசனைச் சிறப்பு. எதையும் அனுபவித்து எழுதும் இவர், பதிவுகள் மட்டுமன்றி பின்னூட்டங்களிலும் அதே சிரத்தையைக் காட்டுவார். பதிவுகளிலும், […]
சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது….!
Thursday, February 28th, 2008எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது “பிரிவோம் சந்திப்போம்” பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், […]
வரவிருக்கும் வாரங்களின் சிறப்பு நேயர்கள்
Tuesday, February 26th, 2008 றேடியோஸ்பதியின் புதுத் தொடராக வலம் வந்து கொண்டிரும் இவ்வார சிறப்பு நேயர் தொடர் ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான எதிர்பாராத சந்தர்ப்பத்தில். நண்பர் ஜீவ்ஸ் நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நான்கு பாடல்களைக் கேட்டிருந்தார்.
சரி இவ்வளவு நல்ல பாடல்களைக் கேட்கின்றீர்களே, ஒரு தொடரை ஆரம்பித்து அதில் நீங்களே உங்களுக்குப் பிடிச்ச ஐந்து பாட்டுக்களைச் சிலாகித்து எழுதி அனுப்புங்களேன் என்றேன். சொன்னதும் தான் தாமதம், சில மணி நேரத்திலேயே பதிவோடு மனுஷன் வந்து விட்டார். […]
சிறப்பு நேயர் - “அப்பாவி சிறுமி” துர்கா
Friday, February 22nd, 2008
போன வாரம் எங்கள் அன்புக்குரிய தல “கோபி” வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்க இருப்பவர் எங்கள் பதிவுலகத்தின் பாசத்துக்குரிய தங்கை அப்பாவி சிறுமி “துர்கா“.
இந்தத் தங்கை அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் “ஆப்பாவி” யாக மாறி பின்னூட்ட ஆப்பும் வைப்பார். பதிவர்கள் பலர் இவர் பின்னூட்ட வரும் போது குலை நடுக்கத்தோடு நகம் கடித்தபடி இருப்பார்கள். பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் […]
சிறப்பு நேயர் - “கோபிநாத்”
Friday, February 15th, 2008 கடந்த வாரம் மை பிரண்டின் சிறப்புப் பாடல் தொகுப்போடு மலர்ந்த சிறப்பு நேயர் விருப்பத்தை ரசித்திருப்பீர்கள். ஆக்கங்களை அனுப்பி வைத்த பல நேயர்களின் தொகுப்புக்கள் இன்னும் வர இருக்கின்றன. புதிதாக அனுப்பவிரும்புபவர்களும் தொடர்ந்து அனுப்பலாம் என்று கூறிக்கொண்டு இந்த வார சிறப்பு நேயர் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்.
இந்த வாரம் சிறப்பு நேயராக முத்தான ஐந்து பாடல்களோடு வந்திருப்பவர் எங்கள் அன்புக்குரிய பாலைவனத்துச் சிங்கம் “கோபி” என்ற கோபிநாத்.
இந்த றேடியோஸ்பதி வலைப்பதிவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளுக்கு […]
சிறப்பு நேயர் “.:: மை ஃபிரண்ட் ::.”
Thursday, February 7th, 2008இந்த றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வர இருப்பவர் “.:: மை ஃபிரண்ட் ::.”.. இதெல்லாம் சொல்லியா தெரியணும்? பதிவில் இருக்கும் “சித்து” வின் படத்தைப் பார்த்தாலே புரியும்னு சலிக்காதீங்க
மலேசியத் திருநாட்டில் இருந்து பதியும் ஒரு சில பதிவர்களில் .:: மை ஃபிரண்ட் ::. தனித்துவமானவர்.
THe WoRLD oF .:: MyFriend ::. என்ற பிரத்தியோகத் தளத்தில் தன் எண்ணப் பகிர்வுகளையும்,
ஜில்லென்று ஒரு மலேசியா என்ற கூட்டுத்தளத்தில் மலேசியாவின் வரலாறு, பண்பாடு, சுற்றுலா குறித்த […]
என்னைக் கவர்ந்தவை 1 - “என் அருகில் நீ இருந்தால்”
Tuesday, February 5th, 2008இந்த றேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களையும் கூடவே ஒரு சில என் விருப்பப் பாடல்களையும் கொடுத்து வந்த நான் இந்தப் பதிவின் மூலம் எனக்குப் பிடித்த சில அரிய தேர்வுப் பாடல்களைத் தரலாம் என்றிருக்கின்றேன்.
அந்த வகையில் இந்தப் பதிவில் “என் அருகில் நீ இருந்தால்” திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களத் தருகின்றேன். என் பள்ளிக்காலத்தில் ரசித்த பாடல்களில் என்றும் நீறு பூத்த நெருப்பாய் இருப்பவற்றில் இவையும் ஒன்று. ஆனால் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. […]