சிறப்பு நேயர் “ஸ்ரீராம்”

கடந்த வாரம் சினேகிதியின் வாரமாக அமைந்து இனிய பாடல்களோடு மகிழ்வித்தது. தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு நன்றி கூறி இந்த வார சிறப்பு நேயர் விருந்துக்குச் செல்வோம்.

முத்தான ஐந்து பாடல்களுக்கு சுருக்கமான விளக்கம் தந்து இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கின்றார் பதிவர் ஸ்ரீராம். இவர் பொதுவாகவே பதிவுகள் எழுதுவது அரிது, ஆனால் என்ன? வட்டியும் முதலுமாக இவரின் துணைவி புதுகைத் தென்றலே தொடர்ந்து பதிவுகளை அள்ளி விடுகின்றாரே.

Triplicane என்பது இவரின் தனித்துவமான தளமாகும். தொடர்ந்து ஸ்ரீராம் தரும் ஐந்து முத்தான பாடல்கள் குறித்த விளக்கங்களோடு பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.

தங்களுடைய சிறப்பு நேயர் விருப்பத்திற்கு எனது பாடல் தெரிவுகள்.

1. மன்னன் படத்திலிருந்து ” அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே”.

இசை: இளையராஜா

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

பாடல் ஏன் விருப்பம்: பாடலின் வரிகளே சொல்லும். அன்னையைப் போல் வேறு தெய்வமில்லை. பாடலைக் கேட்கும் போதெல்லாம் அன்னையின் அருகாமை தந்த சுகம் தென்றலாய் வீசும்.

சிறப்பு நேயர் “சினேகிதி”



கடந்த வாரம் ரிஷான் ஷெரிப்பின் தேர்வுகளோடு வந்த சிறப்பான நேயர் விருந்து பலரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது போல, அரைச்செஞ்சரி பின்னூட்டங்கள் வரை வந்து அவரைக் கெளரவித்தது. போதாதற்கு அவரின் தனிமடல் விபரம் கேட்டு விண்ணப்பங்கள் வேறு 😉

இந்த வாரம் வந்திருக்கும் சிறப்பு நேயர், எங்கட யாழ்ப்பாணத்துத் தங்கச்சி, உளவியல் நிபுணி “சினேகிதி“. நான் வலைபதிய வந்த காலத்தில் எங்கட ஊர்த்தமிழிலேயே ஊர் நினைவுகள், மற்றும் மண் சார்ந்த இடுகைகளைச் சிறப்பாக அளிக்கமுடியும் என்பதற்கு சினேகிதி போன்றோரின் பதிவுகளையே உதாரணமாக எடுத்துக் கொண்டேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் சார்ந்த பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கும் இவர் இடுகைகள் இன்னவை தான் என்று வகைப்படுத்த முடியாதவை. நட்சத்திர வாரத்தில் கூடத் தன் தனித்துவமான உளவியல் சார்ந்த படைப்புக்களைக் கொடுத்துச் சிறப்பித்தவர். சேதுவா இருந்தவையை சாதுவா ஆக்கினவ இவ 😉

தத்தக்க பித்தக்க என்பது இவரின் பிரத்தியோக தளமாகும். கூடவே தேன் கிண்ணம் என்ற கூட்டு இடுகையிலும் இணைந்திருக்கின்றார். இனி சினேகிதியின்ர பாட்டுத் தெரிவுகளை உவ என்ன மாதிரிக் கொடுத்திருக்கிறா எண்டு பாப்பம்.

பிரபாண்ணா 5 பாட்டு தெரிவு செய்து தரச்சொன்னதும் ஓம் ஓம் என்று மண்டைய ஆட்டிட்டன் ஆனால் ஏன் அந்த 5 பாடல்களும் பிடிக்கும் என்றும் சொல்லோணும் என்று சொன்னதும் அடடா காரணம் வச்சுக்கொண்டா பாட்டெல்லாம் பிடிச்சுப்போகுது என்று கேக்கத் தோணிச்சு. சில பாடல்கள் முதல் தரம் கேட்கும்போது என்ன லூசுப்பாட்டெண்டு நினைப்பன் ஆனால் திரும்ப திரும்ப அந்தப் பாடலைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது புதுசா புதுசா அர்த்தம் விளங்குற மாதிரியிருக்கும் 🙂

“நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து

செய்வேன் அன்பே ஓர் அகராதி

நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்

பார்ப்பேன் தினம் உன் தலை கோதி”

படம் : கிரீடம்

பாடியவர் : சாதனா சர்க்கம்

இசை : ஜீ.வி.பிரகாஷ்

கிரீடம் படம் பார்க்கும்போது வழமைபோல பாட்டை fwd பண்ணிப்பார்த்திட்டன். ஒருநாள் தோழியொருத்தி பாடி record பண்ணி வைத்திருந்ததைக் கேட்டதும் பாடலின் வரிகள் பிடித்தது. அதன்பிறகுதான் இந்தப்பாடலை முழுமையாகக் கேட்டேன் பிறகு பார்த்தேன். சாதனா சர்க்கமின் குரல் எனக்கும் பிடிக்கும். இசை நன்றாக இருந்தால்தான் பாடலின் வரிகளைக் கவனிக்கத்தோணும் என்று நான் நினைக்கிறேன் அந்த வகையில் ஜீவி பிராகாஷ் இசை நன்றாக வந்துள்ளது. இந்தப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரன்/காரி யாரென்று தெரியவில்லை. (ஆனால் எனக்கு ரொம்பநாளாவே இந்த சந்தேகம்…தெரிஞ்சாக்கள் பதில் சொல்லுங்கோ. இந்த தலை கோதிறதில அப்பிடி என்ன கிக் இருக்கு?? அநேகமான பெடியங்களுக்கு தங்கள் காதலி மனைவி அம்மா சகோதரம் இப்பிடி யாரோ ஒரு பெண் தங்கள் தலை கோத வேண்டும் என்ற ஆசை இருக்கு…ஏன் என்று அல்லது இந்த ஆசைக்கு ஏதாவது காரணம் இருக்கா? )

சிறப்பு நேயர் “எம்.ரிஷான் ஷெரிப்

போன வாரம் பாலைவன தேசத்துப் பதிவர் “பாசமலர்” வந்து ஐந்து விதமான ரசனைகளை அழகாகக் கொடுத்திருந்தார். தொடர்ந்தும் நீங்கள் இந்தத் தொடருக்கான ஆக்கங்களை அனுப்பி வைப்பது உண்மையில் இந்த முயற்சிக்கான வெற்றியாகவே கொள்கின்றேன். அரங்கேறாத உங்கள் படைப்புக்களையும் தொடர்ந்தும் நீங்கள் அனுப்பிவைக்கலாம்.அடுத்த சில நாட்களில் பயண அலுவல்கள் இருப்பதால் இந்த வாரம் சீக்கிரமாகவே இப்பதிவைத் தருகின்றேன்.

சரி இந்த வாரம் அரங்கேறும் சிறப்புப் பதிவர் யாரென்று பார்ப்போம்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை வாழ் பதிவர்கள் பலரை வலைப்பதிவுலகம் வசீகரித்து உள்வாங்கிக் கொண்டது. அப்படி வந்த ஒரு பதிவர் தான் எங்கள் அன்புக்குரிய எம்.ரிஷான் ஷெரிப். தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கும் தனித்தனியான வலைத்தளம் வைத்து, சிறுகதை, கவிதை, உலக நடப்புக்கள், சிந்திக்கச் சில படங்கள், எண்ணச் சிதறல்கள் என்று வகை வகையான விருந்து படைக்கின்றார். எல்லாமே விலத்தி வைக்கமுடியாத சிறப்பான தொகுப்புக்கள். இவரின் வலைப்பதிவுகளைப் பார்வையிட எம்.ரிஷான் ஷெரிப்

ரிஷான் பாடல்களை அனுப்பி வைத்தபோது முழுதும் படித்து வியந்து போனேன். சாதாரணமாக எல்லோரும் கேட்காத, ஆனால் விலக்கி வைக்க முடியாத தெரிவுகள் இவை. காதலை ஐந்து முத்தான பாடல்கள் ஒவ்வொன்றுமே மயிலிறகாய் வரும் மெல்லிசை கலந்து வருகின்றன. தெரிந்தோ தெரியாமலோ இவர் எடுத்த ஐந்துமே ஐந்து வேறுபட்ட இசையமைப்பாளர்கள். இந்தப் பாடல்களுக்கு இவர் கொடுக்கும் விளக்கமே ஒரு காதல் கடிதத்தைப் படித்த ரசனையை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து ரிஷான் சொல்வதைக் கேளுங்கள். பாடல்களை அனுபவியுங்கள்.

நண்பர் கானாபிரபா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏராளமான பாடல்கள் விருப்பத்திற்குரிய பாடல்களாக இருந்தும் 5 பாடல்களை மட்டும் இங்கு தருகிறேன்.’காதல் மாதம்’ என்பதால் எல்லாப்பாடல்களுமே காதல் பாடல்களாக இருக்கின்றன. (ரிஷான் இப்பதிவை அனுப்பியது பெப்ரவரி காதலர் தின வாரத்தில்) மற்றப் படி வேறெதுவும் விஷேசமில்லை… 🙂

1. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்…

படம் : இதயத் தாமரை.

பாடியவர்கள் : எஸ்.பி.பி, சித்ரா.

இசை : சங்கர் கணேஷ்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலை வேளையில்…(2)

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா……..

பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா…

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?

தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது…

ஒன்றானது…….

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ……

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..

பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ….

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ…

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது….

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது…….

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலை வேளையில்…

மிக அழகிய காதல் பாடல்.

மழைத்தூறல் விழும் அல்லது இதமான மஞ்சள் வெயிலடிக்கும் மாலை வேளைகளிலும்,

யாருமற்ற நள்ளிரவிலும் மெல்லிசையாய் இப்பாடலைக் கேட்க மிக மகிழ்வாய் உணர்வேன்.

எஸ்.பி.பி கம்பீரக்குரல் காதலுக்காய்க் குழைகிறது இங்கு.

சித்ராவும் உணர்ந்து பாடி பாடலை அழகாக்கியிருக்கிறார்.

இசையும் அருமை.அதிகளவு ஆர்ப்பாட்டமில்லை.

இப்பாடல்காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அழகு.

சில பாடல்கள் கேட்க இதமாயிருக்கும்.ஆனால் காட்சிப்பதிவின் போது வீணடித்திருப்பார்கள் (உதாரணம் வசீகரா பாடல்).

இங்கு அப்படியில்லை.

இளமைக்கால ரேவதி மற்றும் கார்த்திக் காதல் ஜோடி மிகப்பொருத்தம்.

பின்புலக் காட்சிகளும் ஒளிப்பதிவு இடம்பெற்றுள்ள இடங்களும் பேரழகு.

சிறப்பு நேயர் “பாசமலர்”

கடந்த வாரம் றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வந்து தனக்கே உரித்தான ரசனையோடு சிறப்பித்திருந்தார் ஜீ.ரா என்னும் நம்ம ஜி.ராகவன். தொடர்ந்தும் இந்தத் தொடருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

இந்த வாரம் முத்தான ஐந்து பாடல்களோடு சிறப்பு நேயராக வந்திருக்கின்றார் “பாச மலர்“.

வளைகுடாவில் இருந்து சுனாமியாகப் படையெடுக்கும் பதிவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் இவர் ரியாத், சவுதியில் இருந்து தன் பதிவுகளைக் கொடுக்கின்றார்.

இந்த வாரம் வலைச்சரம் வாயிலாக தனக்கே உரித்தான பாணியில் ரசனை மிகு வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு.

குறிப்பிட்ட ஒரு துறையில் இல்லாது எல்லா வகையான பதிவாகவும் கலந்து கட்டித்தரும் இவர் கூடவே சக பதிவர்களையும் உற்சாகத்தோடு பின்னூட்டி வருகின்றார்.

பெட்டகம் என்பது இவரின் தனித்தளமாகும். கூடவே மதுரை மாநகரம், பேரண்ட்ஸ் கிளப் ஆகிய கூட்டுப் பதிவுகளிலும் எழுதி வருகின்றார்.



இவரின் முத்தான ஐந்து தேர்வுகளை எழுதியிருக்கும் வரி வடிவங்களிலேயே எவ்வளவு நேசித்திருக்கின்றார் என்று காட்டியிருக்கின்றார். இதோ தொடர்ந்து பதிவைப் படித்தவாறே பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.

1. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..(எஸ்.பி.பி.) (புதுப்புது அர்த்தங்கள்)

எஸ்.பி.பியின் பரமரசிகை நான். திருமண வாழ்வின் சாராம்சத்தைப் பாலுவின்குரலில் கேட்கையில் என்ன ஒரு இதம் மனதுக்கு…தன் சோகம் மறைத்துப் பிறர்க்காகப் பாடும் நாயகனின் மனதிலும் குரலிலும் இழையோடும் சோகம் ..பாலுவின் குரலில் இயல்பாக

வெளிப்படும் நேர்த்தி..

“நல்ல மனையாளின் நேசமொரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே..”

இப்பாடலை நான் விரும்புவது பாலுவின் குரலுக்காக, பாடல் தரும் செய்திக்காக..

Get this widget | Track details | eSnips Social DNA

2. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (எஸ்.ஜானகி) (அவர்கள்)

ஜானகி, என் அபிமானப் பாடகி. ஜானகியின் குரலில் பட்டுத் தெறிக்கும் உணர்ச்சித்துளிகள் , பாடும் கதாநாயகி முகத்தில் கூட இருக்குமா என்பது சந்தேகமே. இந்தப் பாடல் மட்டுமின்றி அவரின் பல பாடல்களுக்குப் பொருந்தும் இந்த வரிகள். கதாநாயகியின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைப்பின்னலும், குரலின் செழிப்பும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும்.

“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது

மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?”

இப்பாடலை நான் விரும்புவது ஜானகியின் குரலுக்காக, மனதைத் துள்ளச் செய்து மகிழ்ச்சியில் திளைப்பதற்காக..

Get this widget | Track details | eSnips Social DNA

3. அந்தி மழை பொழிகிறது (எஸ்.பி.பி,ஜானகி) (ராஜபார்வை)

வைரமுத்துவின் வைரவரிகளில் இசைக்கும் காதல் காவியம். காதலை அணுஅணுவாக ரசிக்கும் காதலர்களின் மனநிலை இந்தப் பாடலில் வெளிப்படும் அழகு..அடடா!! என்ன வர்ணனனகள்…காதலனும் காதலியும் சளைக்காமல் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள், அடிக்குரலில் பாடும் அபிமானப் பாடகர்கள்..இந்தப் பாடல் அந்தி மழை பொழியும் நேரம், சூடான காபிக் கோப்பையைக் கையிலேந்திப் பருகியபடி சன்னலோரம் அமர்ந்து மழையை ரசிக்கும் சுகத்திற்குச் சமம்…

குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி அனைத்து வரிகளும் அருமை…

இப்பாடலை நான் விரும்புவது வைரமுத்துவின் வரிகளுக்காக, கமலின் பாவங்களைக் கண்முன் கொணரும் பாலுவின் குரலுக்காக.

Get this widget | Track details | eSnips Social DNA

4. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (சுசீலா) (பாகப்பிரிவினை)

சுசிலாவின் குரலில் குழையும் கம்பீரம் கலந்த சோகம், ஆறுதல் கலந்த நிறைவு..ஒரு பெண்ணுக்கு நல்ல மனம் படைத்த கணவனைத் தவிர வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று அடித்துச் சொல்லும் பாடல்..எந்தக் குறையையும் பொருட்படுத்தாத

காதல் மனைவி பாடுகையில் சுற்றுச் சூழல் அறியாது பாடலில் லயிக்கும் மனது…

“சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ.”

இப்பாடலை நான் விரும்புவது, ஒரு நல்ல கணவன்-மனைவியின் கம்பீரக் காதலின் அடையாள வெளிப்பாட்டுக்காக..