சிறப்பு நேயர் “நித்யா பாலாஜி”கடந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பித்திருந்தவர், தனது திருமணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிய நண்பர் “அய்யனார்”. றேடியோஸ்பதியின் இசைப்பதிவுகள் பதிவர்களை மட்டுமன்றி பதிவுலக வாசகர்களையும் ஈர்த்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரம் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நேயர் “நித்யா பாலாஜி” பதிவுலகிற்குப் புதியவர். அத்தோடு வலைப்பதிவை இன்னும் ஆரம்பிக்காதவரும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய சிறப்பு நேயர் தொடரால் கவரப்பட்டுத் தனது ஆக்கத்தை முத்தான ஐந்து பாடல்களுடன் அழகாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார் இவர். தொடர்ந்து நித்யா பாலாஜி பேசுவதைக் கேளுங்கள்.

நான்

வலைப்பதிவுகளுக்கு புதியவள்.

றேடியோஸ்பதியின் “சிறப்பு நேயர் தொடர்” ரொம்பவும் சுவாரஸ்யம்.

எனக்கு பிடித்த ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறேன்.

இந்த பாடல்களை வழங்கினால் மகிழ்வேன்.

அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாடல்

: சங்கீத மேகம்

படம்: உதய கீதம்

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ்.பி.பி

இளையராஜா

, எஸ்.பி.பி கூட்டணியில் உருவான பாடல்களில் மிக அற்புதமான பாடல் இது.

எந்த மனோநிலையில் இருந்தாலும் கேட்ககூடிய பாடல்.

“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”

சிறப்பு நேயர் “அய்யனார்”“தனிமையின் சிறகுகளை

விடுவித்துக் கொண்டது

காலம்

பாலை மணலுதறி

பசுஞ்சமவெளியில் தடம் பதிக்கிறேன்

நெடுகிலும் நின்று கொண்டிருக்கும்

துளிர்க்காத மரங்களிலெல்லாம்

நேரடியாய்ப் பூக்களைப் பிரசவிக்கின்றன

நானொரு பெண்ணின் விரல்களை

இறுகப் பற்றிக்கொள்கிறேன்…….”

மேற்கண்ட கவிதையையே தன் திருமணச் செய்தியில் கொடுத்திருந்த நம்ம நண்பர் அய்யனார் விஸ்வநாதன் இன்று கல்பனாவை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கின்றார்.

இவர்கள் இருவரும் மணமேடையில் இருக்கும் இந்த நேரம் சரியாக இந்தப் பதிவும் போடப்படுகின்றது.

முதலில் அய்யனார் – கல்பனா தம்பதிகள் நீடூழி காலம் நிலைக்கும் இன்பம் பொங்கும் இல்லற வாழ்வில் இனிதாய்க் கழிக்க வாழ்த்துகின்றோம். இவர்களுக்காக நாம் தரும் சிறப்புப் பாடல்

“நூறு வருஷம் இந்த

மாப்பிளையும் பொண்ணுந்தான்

பேரு விளங்க இங்கு வாழணும்”

பாடகர் கமல்ஹாசன்….!

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் “போட்டு வைத்த காதல் திட்டம்” பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இன்றைய பதிவில் கமல்ஹாசன் பாடிய அருமையான, ஏராளம் பாடல்களில் தேர்ந்தெடுத்த சில முத்துகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், அவர் அந்தரங்கம் திரையில் பாடிய “ஞாயிறு ஒளி மழையில்”, அவள் அப்படித்தான் திரையில் இருந்து “பன்னீர் புஷ்பங்களே”, குணாவில் இருந்து “கண்மணி அன்போடு காதலன்”, தொடர்ந்து தேவர் மகனில் “இஞ்சி இடுப்பழகி”, நிறைவாக சிகப்பு ரோஜாக்களில் இருந்து “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களோடு இடம்பெறுகின்றது இத்தொகுப்பு.

சிறப்பு நேயர் “துளசி கோபால்”

ஸ்ரீராமின் விருப்பத்தைத் தாங்கி முத்தான ஐந்து பாடல்களோடு கடந்த வார சிறப்பு நேயர் விருப்பம் அமைந்திருந்தது. அவர் கேட்ட பாடல்கள் வரும்போது அவர் இலங்கையை விட்டு குடும்பமாக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார். புது இடம் அவர்களுக்கு செளகரிகமான வாழ்வைக் கொடுக்கட்டும்.

சரி, இனி இந்த வார நேயர் பகுதிக்குச் செல்வோம்.

இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கவிருப்பவர் கடந்த நான்காண்டுகளாக வலையுலகில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கலக்கலான பதிவுகளை அளித்துவரும் டீச்சரம்மா “துளசி கோபால்”.

நகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.

துளசி தளம் என்பது இவரின் தனித்துவமான வலைத்தளமாகும்.சாப்பிட வாங்க, விக்கி பசங்க,சற்று முன் ஆகிய கூட்டுத் தளங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தொடர்ந்து துளசிம்மாவின் முத்தான ஐந்து தெரிவுகளைப் பார்ப்போம்.

நேயர் விருப்பமாக சில பாட்டுகளைக் கேட்டுருக்கேன். விருப்பமான பாட்டுக்கள்னு பார்த்தால் நூத்துக்கணக்கில் வருது. அதில் சமீபத்தியக் காலப் பாட்டுக்களை நண்பர்கள் ஏற்கெனவே விரும்பிக்கேட்டு, அதையெல்லாம் அனுபவிச்சாச்சு.

தமிழ்ப்பாட்டுக்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலைன்னா தமிழ்த்துரோகியா நினைச்சுக்குவாங்களோ என்ற ஒரு பயத்தில்(???) ரெண்டு தமிழ்ப்பாட்டுக்கள், ஒரு மலையாளம், ஒரு ஹிந்தி & ஒரு கஸல்னு என் தெரிவு இருக்கு இப்போ:-))))

இரைச்சலான இசைக்கருவிகள் ஓசையும், என்னென்றே புரிபடாத சொற்களும் நிறைஞ்சிருக்கும் பாட்டுக்களை எப்போதுமே விரும்பியதில்லை.

அழகா…மெல்லிய இசையில் மனசுக்குப் பக்கத்துலே வந்து பாடும் பாட்டுக்களைத்தான் மனம் விரும்புது.

1.விஜய் ஆண்ட்டனி இசையில் ‘டிஷ்யூம்’ என்ற படத்தில் எங்களுக்கு(!!) பிடிச்சது இது. பாடியவர்: ஜெயதேவ் & ராஜலக்ஷ்மி

பாடல்: “நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்”

திரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்பேட்டி


கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களையும், திரையரங்கங்களை அடித்து நொருக்குவதையும் கண்டித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தொழில்நுட்ப உதவியாளர் சங்கம் உட்பட்ட அமைப்புக்கள் இன்று நடத்திய உண்ணா நோன்பு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.இராம நாராயணன் அவர்களை சற்று முன்னர் குறுகிய நேரடிப்பேட்டி ஒன்று கண்டிருந்தேன். அதன் ஒலி வடிவம் இதோ:

நடிகர் ரகுவரன் நினைவாக….!

கடந்த மார்ச் 19 இல் நடிகர் ரகுவரன் அகால மரணமடைந்த நாளுக்கு அடுத்த நாள் சிங்கப்பூரில் இருந்து பஸ்ஸில் மலாக்கா நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். எப்.எம் ரேடியா என் காதை நிறைத்துக்கொண்டிருந்தது. சிங்கப்பூர் எல்லை வரை சிங்கப்பூர் ஒலி 96.8 கேட்கும் போது இடையில் ரகுவரனுக்காய் ஒரு மனிதனின் கதை தொலைக்காட்சித் தொடரில் இருந்து “மங்கியதோர் நிலவினிலே” என்ற இனிமையான எஸ்.பி.பாலா பாடும் பாடலோடு அஞ்சலியைக் கொடுத்திருந்தது. மலேசியாவை அண்மித்த போது சிங்கப்பூர் ஒலி வானொலி இரைச்சலை அதிகப்படுத்த, மலேசிய எம்.எம் றேடியோவான ரி.எச்.ஆர் ராகாவைச் சுழட்டினேன். அதில் புன்னகைப் பூவே கீதா, ரகுவரனுக்காக ஒரு அஞ்சலிப்பாடலைப் போடக் கேட்டேன்.

மரணம் எல்லோர்க்கும் பொதுவானது தான், ஆனால் திரையில் தோன்றி மறையும் விம்பங்களாய் இருந்தாலும் எமது வாழ்வில் ஏதோ இணைந்துவிட்ட பிடிப்போடு தொடர்ந்தே நினைவில் இருத்தி வைத்திருக்கும் கலைஞர்கள் சொற்பமே. அந்த வகையில் ரகுவரனும் கூட இந்தப் பட்டியலில் வந்து விட்டார்.

ஏழாவது மனிதன் வந்தபோது எனக்கு அவ்வளவாக நடிப்பை ரசித்துப் பார்க்கும் வயதில்லை. ஆனால் சம்சாரம் அது மின்சாரம் திரையில் மூத்த பையனாகவும், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் புத்திபேதலித்த மனைவியைச் சமாளித்து அதே வேளை தொலைந்த குழந்தையை மீட்கும் பாத்திரத்திலும், மந்திரப்புன்னகையில் கொல்லப்பட்ட காதலியில் நினைவில் வாடும் வில்லனாகவும், கலியுகம் திரையில் அப்பாவி இளைஞனாகவும், மைக்கேல் ராஜில் பீடிக்கட்டு முரடனாகவும், குற்றவாளியில் இன்னொரு வகை நடிப்பிலும், பாட்ஷாவில் மார்க் ஆண்டனியாகவும், புரியாத புதிரில் சந்தேகக் கணவனாகவும், இப்படி நான் பார்த்த அந்தந்தக் காலகட்டத்துத் திரைப்படங்களில் ரகுவரனுக்கு மாற்றாக இன்னொரு நடிகரை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

ஜீனியர் விகடன், குமுதம், நக்கீரன் என்று ரகுவரனின் மரணத்தின் பின் ஒவ்வொரு வார இதழ்களிலும் இந்தக் கலைஞனின் நிஜப்பரிமாணம் குறித்து சககலைஞர்கள் பேசும் போது வியப்பாக இருக்கின்றது. அத்தனை உலக ஞானமும் தெரிந்துகொண்டே, அடக்கமாக இயக்குனர் செதுக்கிய சிலையாகவே இது நாள் வரை இவர் இருந்திருக்கின்றார். ஒரு வாரப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள் இப்படி ” ஹாலிவூட் தரத்தில் அடக்கமாக நடிக்கத் தெரிந்த நடிகர் ரகுவரன்” உண்மைதான், ஆனால் இவருக்கு இப்படியான கச்சிதமான பாத்திரத்தில் முறையான தீனியை முழு அளவில் எந்தப் படமுமே கொடுக்கவில்லை என்பது கசப்பான நிஜம்.

நண்பர் பாரதிய நவீன இளவரசன் தன் பதிவின் மூலம் , ரகுவரனுக்காக நினைவுப்பதிவைப் பாடலோடு இடக் கேட்டிருந்தார். காலம் கடந்து அவரின் கோரிக்கையோடு ரகுவரனுக்கு அஞ்சலியாக இப்பாடல் தொகுப்பு அரங்கேறுகின்றது.

“ஒரு ஓடை நதியாகிறது” திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடும் தலையை குனியும் தாமரையே”

Get this widget | Track details | eSnips Social DNA

ஏழாவது மனிதன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள்

YouTube இல் thecrowresurrect ஒளியேற்றிய காட்சித்துண்டங்கள்