சிறப்பு நேயர்கள் ஆஷிஷ் & அம்ருதா

கடந்த வாரம் ஷைலஜாவின் சிறப்பு வாரம் வந்து போனது. இந்த வாரம் வலம் வர இருப்பது குழந்தைகள் சிறப்பு பதிவு. இவர்களின் பெற்றோரும் கூட முந்திய சிறப்பு நேயர்களாக வந்து சிறப்பித்தவர்களே. புதுகைத் தென்றல் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர்களின் அம்மா மற்றும் தந்தை ஸ்ரீராம் ஆகியோரே அவர்களாவர். வலைப்பதிவில் பல குட்டிப் பதிவுகள் வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வார சிறப்பு நேயர்களாக வரும் ஆஷிஷ் அம்ருதாவும் கூட ஆஷிஷ் – அம்ருதா பக்கங்கள் என்ற பெயரில் சொந்த வலைப்பதிவு வைத்திருக்கின்றார்கள். ஆனால் பாருங்க பொதுவா குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் ஹோம் வேர்க் செய்ய சொன்னா அவங்க அப்பா/அம்மாவே செய்து கொடுத்து அனுப்புவது போல இந்தப் பதிவுகளின் பின்னணியில் இருக்கும் அந்த உதவிக்கரம் அம்மாவா, அப்பாவா? ஆஷிஷ் அம்ருதாவுக்கே வெளிச்சம் 😉

ஆனாலும் என்ன குழந்தைகளுக்கான நல்ல வாசிப்புத் தீனி கொடுக்கும் பதிவுகள் பல இங்கே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சரி, இனி ஆஷிஷ் அம்ருதா சொல்வதைக் கேட்போமா.



வணக்கம் மாமா,

நலமா?

எங்களுக்கு பிடித்தமான பாடல்களை இங்கே கொடுத்திருக்கோம்.

அதை சிறப்பு நேயர் விருப்பத்தில் கொடுக்க முடியுமா மாமா?

1. ராஜா சின்ன ரோஜா படம்

ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனானாம் – பாடல்

இந்தப் பாட்டு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பாடலில் வரும் கதை,

தரும் மெசெஜ் அருமை.

“நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.

தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது”

கார்ட்டுன் வடிவங்களுடன் ரஜினி அங்கிள்

நடித்திருப்பாங்க நல்லா இருக்கும்.எங்களுக்கு மிகவும்

பிடிக்கும்.

வீடியோவில் பார்க்க

அமர்க்களமான இசையமைப்பாளர் பரத்வாஜ்

சரணுடன் இணைந்து கூட்டணி அமைத்து காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பரத்வாஜ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்கறிஞர். காதல் மன்னன் முதல் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ரோஜா வனம், பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் என்று இவரின் பெரும்பாலான படங்களில் தனித்துவமான இவரிசையை ரசித்திருக்கின்றேன். பல படங்களின் மண்டலின் இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தியிருப்பார் இவர். இளைராஜா – வைரமுத்து காலம் ஓய்ந்த பின் வைரமுத்துவை சிறப்பாக அதிகம் பயன்படுத்தி வருபவர் இவர். பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் போன்ற பசுமை நினைவுகளை மெல்லிசையால் வருடியவர்.

இன்றைக்கு முன்னுக்கு இருக்கும் இளம் இசையமைப்பாளர்களை விட நுணுக்கமாக மெட்டும், இசைக்கலவையும் கொடுக்கக் கூடிய சில நல்ல இசையமைப்பாளர்கள் இன்னும் அதிகம் பேசப்படவில்லையே என்று நான் நினைப்பதுண்டு. அதில் ஒருவர் ரமேஷ் விநாயகம் (அழகிய தீயே), மற்றவர் பரத்வாஜ்.

நேற்றைய றேடியோஸ்புதிரில் ஜே ஜே படத்தில் வரும் உனை நான் பாடலினை நினைவுபடுத்தும் வயலின் இசை கொடுத்திருந்தேன்.

றேடியோஸ்புதிர் 8 – இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும் பாட்டு

கடந்த சில வாரங்களாக இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பின்னணி இசை கொடுத்துப் புதிரைக் கொடுத்திருந்தேன். யூகேஜி, எல்கேஜி பசங்க அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து புதுசா வந்த இசை கொடுங்க, கலக்குவோம் என்றார்கள். எனவே இந்த வாரம் ஒரு புது இசை. கடந்த சில ஆண்டுகளுகளுக்கு முன் வந்த படத்தின் இசை இது. இந்த இசையமைப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து தொடர்ந்து பல படங்களில் இயங்கியிருக்கிறார்கள். இந்த இசையமைப்பாளர் அடிப்படையில் ஒரு சார்டட் எக்கவுண்டண்ட்.

ஒரேயொரு படத்தை மட்டும் இப்பட இயக்குனர் வேறு இசையமைப்பாளரோடு இணைந்து பணியாற்றியிருந்தார், அந்தப் படத்தையும் கண்டு பிடித்தால் போனஸ் வாழ்த்து.

இங்கே நான் தரும் இசை, இப்படத்தில் வரும் ஒரு பாடலை நினைவுபடுத்தும். மிகவும் சுலபமானது. கண்டு பிடியுங்களேன் படத்தை.

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜா



கடந்த வாரம் சர்வே மன்னரின் பதிவு வந்தாலும் வந்தது அதன் புண்ணியத்தில் சர்வேசர் ஒரு வாக்கெடுப்புப் பதிவும், ஜி.ரா ஒரு சுசிலா – ஜானகி கதம்பமாலைப் பதிவும் இட்டு விட்டார்கள். ஆக ஒன்று மூன்றாகியது 😉

சரி, இந்த வாரம் வலம் வரும் சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம். இந்த வார சிறப்பு நேயர் ஒரு வானொலிப் படைப்பாளியும் கூட. அதனாலோ என்னவோ சற்று வத்தியாசமாகத் தன் தேர்வுகளைப் பாடி, அப்பாடல்களைச் சிலாகித்து ஒலி வழி தந்திருக்கின்றார். அவர் தான் கர்நாடகாவில் இருந்து சைலஜா.



எண்ணிய முடிதல் வேண்டும் என்பது இவரின் தனித்துவமான வலைத் தளமாகும். கூடவே கண்ணன் பாட்டு, தமிழ்ச் சங்கம் போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதி வருகின்றார். வலைப்பதிவில் கவிதை, கட்டுரை என்று படைத்து வரும் இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்.தமிழின் சிறப்பைத் தன் பதிவுகளில் இட்டு வரும் இவரின் படைப்பு ஒரு எட்டு பார்த்து விட்டுத் தான் வாருங்களேன்.

தொடந்து சைலஜா படைக்கும் குரல் வழிச் சிலாகிப்பும் முத்தான பாட்டிசையும் கேட்போம்.



“அத்திக்காய் பாடலுக்கு” (படம்: பலே பாண்டியா) இத்திக்காய் ஷைலஜாவிடமிருந்து சிறு விளக்கம்.கண்ணதாசனின்

கற்பனை வளம் தமிழின் அழகு ஆளுமை எல்லாம் இப்பாடலில் தெரியவருகிறது…

இரண்டு தம்பதிகள் நிலவை நோக்கிப்பாடுவதான பாடலிது

முதல் ஜோடி சொல்வது ஆண்…முதல் வரி நிலாவுக்கு

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணீலவே

அத்திக்காய் ஆலங்காய் போல தன் வெண்ணிலாமுகக்காதலி கோபத்தில் சிவந்திருக்கிறாள்

என்றும் அர்த்தம் கொள்ளலாம்

அந்த திசை நோக்கி ஒளிவீசு நிலவே (ஏனெனில்

இந்தப்பெண்ணுக்கு நீ என்னைப்பார்ப்பதாய் லேசாய் பொறாமை!)

ஆல் போல பலகாலமாய் வானில்வாழும் வெண்ணிலவே (இப்படியும் சொல்லலாம்)

2ஆம் வரி தன்னருகில் நிற்பவளுக்கு

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இந்த திசையில் கடிந்துகொள்ளாதே பெண்ணே என் உயிரே நீதானே?

பெண்—

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

இந்தப்பெண் உனீது ஆசைகொண்ட காதல்கொண்ட பாவை இப்போது கோபமாக

இருக்கிறாள்(பாகற்காய் கசப்பினை கோபமாகக்கொள்ளலாம்)

அங்கே

காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்

அங்கே திட்டு அவரைத் திட்டு மங்கையான எந்தன் மன்னனை(கோ) திட்டு

ஆண்..

மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ

மாதுளம்பழம் வெளியே காய்போல முரடாக இருக்கும்(உள்ளே பழம் முத்துக்களாய்)

பெண்ணே(மாது) உன் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்

இரவு காய் ஆனது உறவு காய் ஆனது அதற்கு ஏங்கும் இந்த ஏழையை நீ திட்டு

இரவுக்காக உறவுக்காக ஏங்குகின்ற இந்த ஏழைக்காக

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்

நீயும் திட்டு தினமும் திட்டு(எல்லாம்) நேர்ல நிற்கிற இவளால்

நீயும் ஒளிவீசு நிதமும் ஒளிவீசு நேரில் நிற்கும் இவள் மீது ஒளிவீசு

பெண்-

-உறவும் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ

கோபத்துல உறவு இப்போ காய் மாதிரி இருந்தாலும் என் பருவம் கனிந்ததல்லவா

அதுஇவரைக்கடிந்துகொள்ள அனுமதிக்குமா?

என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ?

என்னை நீ திட்டாதே நீயும் என்மாதிரி பெணல்லவா?

(நிலா சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுபோல் பெண் தன் கணவனின் மதிப்பினால்

ஒளிவீசுகிறாள் எனும் உள் அர்த்தம்!)

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு

(இதில்

இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)

ஜாதிக்காய் கெட்டது போல் தனிமை இனபம்கனியக்காய்

ஜாதிகளை ஒழித்ததுபோல் எங்களிடையே உள்ள பிரசசினைதீர்த்து தனிமையின் இனபம் கனிய

ஒளிவீசு

(ஜாதிக்காய் கெட்டாலும் மணம்வீசும் அந்த மணம் போல தனிமையில் இன்பம்

மணக்கட்டும் என இருக்கலாம்)

இரண்டாவது ஜோடி

ஆண்

சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணீலா

இவ்ளொ நேரம் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா போய் அவகிட்ட தூது சொல்லிவிளக்கு

சொன்னதெல்லாம் விளாங்காய் மாதிரி மேல் ஓடு கடினமானாலும் உள்ளே

கனிவானதுதான் (தூதுவழங்காய் ஏதோ மருத்துவ செடி?)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ

உள்ளம் என்ன காரமான மிள்காயா அதான் ஒவ்வொருபேச்சும் உரைப்பா?(காரமா)

உள்ளம் எல்லாம் இளகாதா உன் ஒவ்வொரு பேச்சும் உரைநடைமாதீரி இருக்கிறதே(ஐஸ் ஐஸ்!)

வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரித்தாயே

பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல)

கோதையெனைக்காயாதே கொற்றவரங்காய் வெண்ணீலா

கோதை என்னைதிட்டாதே கொற்றவர் (என் மன்னர்)அங்கே அவரைத்திட்டு வெண்ணிலா

கோதை என்மேல ஒளிவீசாதே நீ மெலிந்து கொத்தவரங்காய் ஆன வெண்ணீலா(கிண்டல்)

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

எங்க இருவரையும் திட்டாதே போய் தனிமையில் போய் ஏங்கிக்கொள்

இருவர் மேலயும் ஒளிவீசவேண்டாம் தனிமையிலே போய் ஒளிவீசிக்கொள்

(அதாவது ஜோடிகள் சமாதானம் ஆகிவிட்டார்கள் நிலாவுக்கு டாட்டா

சொல்லிவிட்டார்கள்

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு



என்னுயிர் தோழன் திரைப்படம் படமாக்கப்படும் வேளை கல்கியில் தொடராக வெளிவந்தது. பாரதிராஜாவின் எழுத்தில் வந்த இப்படம் இவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி அரசியல் வாழ்வில் ஒரு சாதாரண தொண்டன் எப்படி ஏமாற்றப்படுகின்றான் என்பதை நடப்பு அரசியலோடு பொருத்தி எடுத்திருந்தார்.

பாரதிராஜாவின் மனைவி முன்னர் ஒரு பேட்டியில் தன் கணவர் இயக்கிய படங்களிலேயே என்னுயிர் தோழனே பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளம் படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் எதிர்பாராத விபத்தில் சிக்கி இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் இருக்கின்றார்.

இளையராஜாவுக்கும் பாரதிராஜாவுக்கும் கடலோரக் கவிதைகள் படத்தைத் தொடர்ந்து இவர்கள் நட்பில் விரிசல் விழுந்தது. பாரதிராஜா அம்சலேகா, தேவேந்திரன் என்று பிற இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டார். அப்படங்களில் பாடல்கள் சிறப்பாக இருந்தும் படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. என்னுயிர் தோழனே இளையராஜாவையும் பாரதிராஜாவையும் மீண்டும் இணைத்த திரைப்படமாகும். வைரமுத்து மட்டும் சேரவில்லை. இப்படத்தில் கங்கை அமரனே பாடல்களை எழுதினார். ஆனால் இப்படமும் தொடர்ந்து வந்த புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் போன்ற இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.

என்னுயிர்த் தோழனில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி குழுவினர் பாடும்

“ஏ! ராசாத்தி…ரோசாப்பூ வா வா வா” பாட்டு

றேடியோஸ்புதிர் 7 – இந்தப் புல்லாங்குழல் இசை வரும் படம்?


கடந்த வாரம் நான் குறிப்பிட்டது போன்று திரையிசை அளவிற்கு பின்னணி இசை குறித்து அதிகம் நாம் கவனம் செலுத்தாது அதன் சிறப்பை ஒதுக்கிவிடுகின்றோம். இப்படியான புதிர்ப்போட்டிகள் மூலம் அவற்றின் சிறப்பைப் பகிர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். எனவே இன்றும் ஒரு பின்னணி இசை வரும் புதிர் ஒன்றைத் தருகின்றேன்.

இதுவும் இளையராஜாவின் இசையில் வந்த ஒரு திரைப்படமாகும். ஒரு பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் வந்த அரசியல் சாயம் கொண்ட கதைக்கரு கொண்டதாகும். இப்படத்தில் நடித்தவர்கள் நாயகன், நாயகி உட்பட புதுமுகங்களே. இப்படத்தின் நாயகன், இதே படத்தின் இயக்குனரின் உதவி இயக்குனராகவும் இருந்தவர். இப்படத்தின் கதை கல்கி வார இதழில் தொடராக வந்திருந்தது. இந்தப் படத்தின் மூலம் பரவலாகப் பேசப்பட்ட நாயகன் தொடர்ந்து பல படங்களில் நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் விதி யாரை விட்டது?

இப்படத்தில் காதற் காட்சிகளில் புல்லாங்குழலுக்கும் இடம் இருந்தது. அதனால் இசைஞானி புல்லாங்குழலை வைத்து ஒரு ராஜாங்கமே நடத்திவிட்டார். அந்தப் பின்னணி இசையில் ஒரு புல்லாங்குழல் ஒலித்துண்டத்தத் தருகின்றேன்.

சரி இனி இந்தப் படத்தைக் கண்டுபிடியுங்களேன்?

அல்லது இந்த இணைப்பு

சிறப்பு நேயர் “Surveyசன்”



கடந்த வார சிறப்பு நேயராக கயல்விழி முத்துலெட்சுமி வந்தாலும் வந்தாங்க, பதிவர்கள் தி.நகர் ஜவுளி நெரிசல் கணக்கா வந்து கு(ம்)மிஞ்சிட்டாங்க.

சரி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.

ஒரு இரண்டு வருஷங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தை வழக்கம் போல் உலாவலாம் என்று பக்கத்தைத் திறந்தால் எடுத்த எடுப்பிலேயே புள்ளிவிபர இலாகாவிலிருந்து கேட்குமாற் போல யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார். வழக்கமான பதிவுகளில் இருந்து விலகியிருக்கிறாரே என்று நினைக்கமுன்னரே சரசரவென்று ஒவ்வொரு நாளும் விதவிதமான கேள்விக் கொத்தோடு பதிவுகளைக் குவித்தார். பாராட்டு, விமர்சனம் என்று சம அளவில் இந்தப் புள்ளிவிபரப்பதிவுகளுக்குக் கிடைத்தது. ஆனாலும் விட்டாரா மனுஷன், நான் “ஆக்கியவன் அல்ல அளப்பவன்” என்று தொடர்ந்தும் தன் “பணியை” செய்து ராமராஜன் லெவலுக்கு திடீர் ஹீரோவாகிவிட்டார். அவர் தான் நம்ம சர்வேசன்.

ஆனால் இவருக்கு புள்ளி விபரம் தான் எடுக்கத் தெரியும் என்று கணக்கு போடுபவர்களின் நினைப்பை மாற்றி “நேயர் விருப்பம்” போன்ற கலக்கல் இசைத் தொடர்களையும் ஆரம்பித்தார். மனசு ரிலாக்ஸாக இருக்க சில பதிவர்களின் பதிவைத் தேடிப்படிப்பது வழக்கம். அதில் சர்வேசனும் ஒருவர். நச் சென்ற விமர்சனமும், குறும்புத்தனமும், கலந்த எழுத்தும் அளவான கஞ்சத்தனமான பதிவும் இவரின் தனித்துவம். தமிழில் புகைப்படக்கலை போன்ற கூட்டுவலைப்பதிவுகளில் கலக்கினாலும் Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்

என்ற இவரின் பதிவு தனித்துவமானது. எம்.எஸ்.வி ஐ வாழும் காலத்தில் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் இவரின் முனைப்பு இன்னும் ஒரு படி இவர் மேல் மதிப்பை ஏற்படுத்துகின்றது.

தொடர்ந்து நண்பர் சர்வேசனின் முத்தான ஐந்து பாடல்கள் பற்றி என்ன சொல்கின்றார் என்று கேட்போம்.



கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் புதுப்புது யுக்திகளை புகுத்தி வருகிறார்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிறப்பு நேயர்’ பதிவில், பதிவர்களின் டாப்-5 விருப்பப் பாடல்களை அருமையாக தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் திரைப்படங்களில் ஆயிரமாயிரம் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும் ரகம். அதிலிருந்து வெறும் ஐந்து பாடல்களை மிகவும் பிடித்தது என்று எடுத்துத் தருவது ரொம்பக் கஷ்டமான வேலை.கூட்டிக் கழிச்சுப் பாத்தாகூட ஒரு ஐநூறு பாட்டாவது மிகப் பிடித்த தர வரிசையில் இடம்பெறும்.

அதனால, இந்த ஈ.மடலை தொகுக்கும் இந்த ஞாயிறு மதியம், மனதில் உதிக்கும் ஐந்து பாடல்களை தரலாம் என்று முடிவு. (எழுதி அனுப்பின தினம் பெப்ரவரி 25)

பலப் பல பாடல்கள் பிடித்தாலும், சில பாடல்களின் ஆரம்ப இசை கேட்டதும், மனதில் ஒரு சிலீர் தோன்றும். அப்படிப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஆயிரமாயிரம் பாடல்களில் ஐந்து உங்கள் பார்வைக்கு.

1) ஒரே நாள் உனை நான்..

இளமை ஊஞ்சலாடுகிறது (இளையராஜா)

இந்தப் பாட்டு பாத்த ஞாபகம் இல்லை.

சின்ன வயசுல, ரேடியோல அடிக்கடி போட்டிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.

அதனாலத்தான் என்னவோ, எப்ப இந்த பாட்ட எங்க கேட்டாலும், நான் மேலே சொன்ன ‘சிலீர்’ அனுபவம் கிட்டும்.

ஆரம்ப, கிட்டார் strumming ம், அதைத் தொடரும் வயலினும் போதும், இது எப்பேர்பட்ட பாட்டு என்பதைச் சொல்ல.

ஒவ்வொரு interludeல் வரும் கிட்டாரும் சுண்டி இழுக்கும்.

Vow! what a song!

அந்த கால SPB குரல், சொல்லணுமா? கட்டியணைக்கும் ரகம்.

வாணி ஜெயராமின் கணீர் குரலும் அமக்களமா இருக்கும்.

வீடியோவில் பார்க்க

கேட்க

வருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு



நேற்று றேடியோஸ்புதிரில் ஒரு படத்தின் ஆரம்ப இசையை ஒலிபரப்பி சில தகவல்களையும் கொடுத்து அது என்ன திரைப்படம் என்று கேட்டிருந்தேன். வருஷம் 16 என்று சரியான விடையைப் பலர் அளித்திருந்தீர்கள்.

இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் “என்னென்னும் கன்னெட்டானே” (Ennennum Kannettante) என்ற பெயரில் 1986 இல் வெளிவந்து கேரள அரசின் “Best Film With Popular Appeal and Aesthetic Value” என்ற விருதைப் பெற்ற படமே பின்னர் தமிழில் “வருஷம் 16” என்று 1989 இல் வெளிவந்திருந்தது. மலையாளப்பதிப்பில் கதாநாயக நாயகிப் பாத்திரம் ஏற்றவர்கள் மிக இளம் வயது நடிகர்களாக இருந்தார்கள். மலையாளத்தில் இசை ஜெர்ரி அமல்தேவ்.அந்தப் படத்தையும் பாத்திருக்கின்றேன்.



வருஷம் 16 திரையில் கார்த்திக் நாயகனாகவும், குஷ்பு நாயகியாகவும் நடித்திருந்தார்கள். குஷ்புவிற்கு ஒரு திருப்புமுனை இப்படத்தின் மூலம் கிடைத்தது. புதிரில் நான் கேட்டது போன்று பூர்ணம் விஸ்வநாதன் பெரிய தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

பாசில் படங்களுக்கு இளையராஜாவின் தனிக்கவனிப்பு இருப்பது போல் இந்தப் படத்திலும் உண்டு. பாடல்கள் மட்டுமன்றி இப்படத்தின் பின்னணி இசையும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள்.

படத்தின் ஆரம்ப இசைக்கோர்ப்பு

றேடியோஸ்புதிர் 6 – இந்த முகப்பு இசை எந்தப் படம்?

கடந்த வாரம் ஒரு பாடலின் இடை இசையோடு புதிர் போட்டேன். இந்த வாரம் ஒரு படத்தின் முகப்பு இசையைத் தந்து அப்படம் எதுவென்று புதிர் போடுகின்றேன். காரணம் தமிழ்த் திரையுலகில் பாடல்களை விதந்து சிலாகிக்கும் அளவுக்கு அப்படத்தில் சிறப்பாக இருக்கும் பின்னணி இசை பேசப்படுவதில்லை. குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையமைத்த எழுநூற்றுச் சொச்சம் திரைப்படங்களில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ரசிகர்களால் கவனிக்கப்பட்டு நேசிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் போடும் புதிர் ஒரு பின்னணி இசையாகவே கொடுக்கப்பட்டு எவ்வளவு தூரம் அந்த இசையை நீங்கள் கவனித்திருக்கின்றீர்கள் என்பதை அறியும் ஒரு முயற்சியாக இருக்கின்றது. எனவே கஷ்டப்பட்டு இந்த இசையை படத்தின் காட்சியில் இருந்து பிரித்தெடுத்து இங்கே தந்திருக்கின்றேன்.

இங்கே நான் தரும் இந்த இசை எண்பதுகளில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முகப்பு இசையாக (Title music) இருக்கின்றது. இது வேற்று மொழியில் வந்து பின்னர் மீளவும் தமிழில் புதிதாக எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் தலைப்பில் இலக்கம் (number) இருக்கும். இப்பட நாயகன் எண்பதுகளில் அறிமுகமாகிப் பிரபலமான நாயகன். நாயகிக்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இன்று வரை இந்த நாயகி அதே புகழோடு இருக்கின்றார். இப்படத்தின் பாடல் ஒன்று பண்டிகை நாள் ஒன்றை நினைவுபடுத்தும். இப்படத்தில் தோன்றிய முக்கிய பாத்திரங்களில் ஒருவரான பூர்ணம் விஸ்வநாதனை இங்கே படமாகக் கொடுத்திருக்கின்றேன். சரி இனி இந்தப் பின்னணி இசையைக் கேட்டு இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.

சிறப்பு நேயர் “கயல்விழி முத்துலெட்சுமி”



கடந்த வாரம் கண்ண(னின்) தாசன் கண்ணபிரான் ரவி சங்கர் கலவையாக ஐந்து பாட்டுக் கேட்டுவிட்டுப் போனார். அவர் பக்திமார்க்கமாகத் தான் பாடலுக்குப் போவார்னு நினைச்சவங்க வாயில் மண் மன்னிக்கவும் அவல் 😉 தொடர்ந்து உங்கள் விருப்பத் தேர்வுகள் ஐந்தைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி உங்கள் பாணியில் எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் விருப்பத் தேர்வுகளும் இடம்பெறக்காத்திருக்கின்றன. நீங்கள் பதிவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, பதிவுலக வாசகராகவும் இருக்கலாம்.



இதோ இந்த வாரச்சுற்றுக்குப் போவோம். இந்த வார றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வருபவர் “கயல்விழி முத்துலட்சுமி“. கடந்த 2006 இல் தான் பதிவுலகிற்கு வந்தாலும் வகை வகையான பதிவு விருந்து கொடுத்து தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றார்.

சிறு முயற்சி என்பது இவரின் தனித்துவமான வலைப்திவாகும். கூடவே தேன் கிண்ணம், சாப்பிட வாங்க போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் இடம்பிடித்தாலும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இவரின் இன்னொரு பங்கு வலைச்சரத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி.

வலைச்சரம் என்னும் கூட்டு வலைப்பதிவில் ஒரு தேக்கம் களைந்து சமீப காலமாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த சகவலைப்பதிவர்களை ஒழுங்கமைத்து இப்பதிவில் எழுத வைப்பது இவரின் சிறப்பான பணிகளில் ஒன்று. இவரின் பதிவுகளிலேயே மிகவும் பிடித்தது “எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி” காரணம் தொழில்நுட்ப விஷயங்களை இலாகவமாக இவர் தந்திருந்த விதம்.

தொடர்ந்து கயல்விழி முத்துலட்சுமி தன் முத்தான ஐந்து தேர்வுகள் குறித்து என்ன சொல்கிறார், கேட்போமா?



பாட்டு பாட்டு ன்னு படிப்பைக்கூட கவனிக்காம பாட்டு கேட்கும் பழக்கம் சின்னவயசில் இருந்தே இருக்கிறது.

ரேடியோவை அணைக்காம ராத்திரி பாட்டை கேட்டுகிட்டே தூங்கி அப்பா வந்து பாத்து அணைப்பது கூட உண்டு. டிவியில் கூட படங்களை விட பாட்டு நிகழ்ச்சி வரும் நிகழ்ச்சிகள் தான் பிடிக்கும்.. முன்பு etc ஒரு சேனல் வந்துது இந்தி பாட்டு மட்டும் பாடும் .. அதே ஓடும் சில நேரம். தமிழ்நாடு வந்தா டிவியில் எப்ஃஎம் போடறாங்களே அதுவோ இல்லாட்டி சன்ம்யூசிக்கோ தான் போட்டுப்பாப்பேன் அந்த அளவு பாட்டு தான் பிடிக்கும். இப்படி இருக்கும் போது அஞ்சு பாட்டுன்னா எதை சொல்றது எதை விடறது கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யறேன்..

“அன்புள்ள மான்விழியே”

” மெதுவான இசை , அழகான அந்த கண்களோடு ஜமுனா உதட்டை சுழித்து ” ஆசையில் ஒர் கடிதம் அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் ” பெரிய கண்ணை அங்கயும் இங்கயும் உருட்டி பாட்டை கண்களால் நாட்டியம் ஆடி பாடுவதும் என்று தனி அழகு..

நலம் நலம் தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் ” ரசித்து கேட்கலாம் ரசித்து பார்க்கலாம்