றேடியோஸ்புதிர் 19 – இது எந்த மொழிமாற்றுப் படம்?

இப்பவெல்லாம் மலையாளத்தில் வந்த நல்ல படங்களை மீண்டும் தமிழில் எடுத்துப் பழிக்குப் பழிவாங்கும் சீசன். எனவே இந்தப் போட்டி ஒரு மலையாளப்படத்திலிருந்து வருகின்றது.

ஹலோ ஹலோ, மலையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.

இந்தப் மலையாளப்படத்தின் கதை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு அமைக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகரின் தயாரிப்பில் வந்தது. மீண்டும் தமிழில் எடுத்துக் காயப்படுத்தாமல் அப்படியே மொழிமாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தின் இயக்குனரை இப்போது ஹிந்தி பீல்டில் தான் தேடவேண்டியிருக்கு.தமிழில் ஒரு பாடலாசிரியரை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் கூட. இங்கே கங்கை அமரன் பாடும் ஒரு பாட்டுத் துண்டத்தைக் கொடுத்திருக்கின்றேன். நல்ல பிள்ளையாட்டம் தமிழில் மொழிமாற்றப்பட்ட இந்தப் படம் என்னவென்று சொல்லுங்க பார்ப்போமே.

தமிழில் கங்கை அமரன் பாடும் பாட்டுத் துண்டம்

மலையாளத்தில் இளையராஜா பாடும் பாட்டுத் துண்டம்

நிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008

கடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க “நிறைவான நல்லூர்ப்பயணம்”.

இந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.

இந்தவேளை நண்பர் விசாகனின் “நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா” என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.

நம் தாயகத்தில் இருந்து வரும் “நல்லூர் கந்தசுவாமி கோயில்” என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இருக்கின்றது.


நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்

“சிவனருட் செல்வர்” திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை

தேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி

நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.

கடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:

காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு

Get this widget Share Track details


ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது

Get this widget Share Track details

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய “தேர்த் திருவிழாவின் சிறப்பு” என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு

அல்லது இங்கே சொடுக்கவும்

சப்பரத் திருவிழா – முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)


நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் இன்று சப்பரத்திருவிழாவில் எம்பெருமான எழுந்தருள இருக்கும் இவ்வேளை, கடந்த ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நல்லைக் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நாளன்று அதிகாலையில் படைத்த சிறப்பு வானொலிப்படைப்பைப் பேணிப் பாதுகாத்து இங்கே தருகின்றேன் உங்களுக்கு.

இருபத்திரண்டாந் திருவிழா – ஞானதேசகனே சரணம்!


இன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான “ஞானதேசிகனே சரணம்” என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.

இருபத்தோராந் திருவிழா – வள்ளி மணவாளனையே பாடுங்கள்


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

கவிஞர் மு.மேத்தாவின் “தென்றல் வரும் தெரு”

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.”இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த “தென்றல் வரும் தெரு” திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. “தென்றல் வரும் தெரு அது நீ தானே” என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு “சிறையில் சில ராகங்கள்” திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த “தென்றல் வரும் தெரு” ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் வந்து படம் வெளிவந்த சுவடே தெரியாமல் வந்த வேகத்தில் ஓடிய படம் அது.

கடந்த றேடியோஸ்புதிரில் பலருக்கு தாவு தீர வைத்த கேள்வியின் விளக்கம் தான் மேலே சொன்னது.

“தென்றல் வரும் தெரு” திரைக்காக மனோ, மின்மினி பாடும் “தென்றல் வரும் தெரு அது நீ தானே”

“சிறையில் சில ராகங்கள்” திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் “தென்றல் வரும் தெரு அது நீ தானே”

இருபதாந் திருவிழா – குருநாதனைப் பாடியே கும்மியடி…!


நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலச் சிறப்புப் பதிவுகளில் இன்று கும்மியடி பெண்ணே கும்மியடி குருநாதனைப் பாடியே கும்மியடி என்னும் நற்சிந்தனைப் பாடல் இடம்பெறுகின்றது.

பத்தொன்பதாந் திருவிழா – புள்ளி மயில் ஆடுது பார்!


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

பதினெட்டாந் திருவிழா – அழகுனது காலடியில் அடைக்கலம், முருகா !


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்