Archive for December, 2008
புதுவருஷ வாழ்த்துக்களுடன் சிறந்த இசைக்கூட்டணி வாக்கெடுப்பு முடிவுகள்
Wednesday, December 31st, 20082008 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சாதனைகளை விடை வேதனைகளையும், சோதனைகளையும் சம்பாதித்த ஆண்டு. உலகெங்கும் ரத்த வெறி பிடித்து அலையும் போர் அரக்கனின் கோரத்தாண்டம் இந்த ஆண்டிலும் தன் ஈடு இணையற்ற கொடுமையைக் காட்டியது. பிறக்கப் போகும் 2009 ஆம் ஆண்டு ஒரு சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். வீட்டுக்கும், நாட்டுக்கும் நிரந்தர நிம்மதியை ஒரு இனிய இசை கொடுக்கும் திருப்தியை வழங்க வேண்டும் […]
றேடியோஸ்புதிர் 32 - பாடலைப் படமாக்காது அடம்பிடித்த இயக்குனர்?
Monday, December 29th, 2008றேடியோஸ்பதியின் வாக்கெடுப்புக்கு இதுவரை வாக்களிக்காதவர்கள் ஒரு எட்டு இங்கே நடந்து போய் வாக்களித்து விட்டு இந்த ஆண்டின் நிறைவாக வரும் றேடியோஸ்புதிருக்கு வாருங்களேன்.
ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் இவர். அதனாலோ என்னவோ அளவுக்கு அதிகம் படங்களை இயக்கித் தள்ளி இப்போது சரக்கில்லாமல் நகைச்சு வைக்கிறார். இவருடைய உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த போது அவர் சொன்ன தகவலை இங்கே புதிராகவே போடுகிறேன்.
ஒரு படத்துக்கான பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி […]
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?
Tuesday, December 23rd, 2008இந்த ஆண்டின் நிறைவை எட்டிப் பிடிக்க சில நாட்களே எஞ்சிய நிலையில், 2008 இல் இதுவரை திரைப்படமாக வெளிவந்து பிரபலமான பாடல்களை முன்வைத்து ஒரு இசை குறித்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. எந்த ஒரு நல்ல இசையமைப்பாளருக்குமே அவரோடு இணையும் இயக்குனரின் வேலை வாங்கும் திறன் தான் பல சந்தர்ப்பங்களில் நல்ல பல பாடல்களுக்கு வழி வகுத்திருக்கின்றது. அந்த வகையில் 2008 இல் சிறந்த இசைக்கூட்டணி யார் என்பதே இந்த ஜாலியான வாக்கெடுப்பின் நோக்கம். உங்கள் ரசனையில் பிடித்த […]
பாடகர் யுகேந்திரன் ஸ்பெஷல்
Friday, December 19th, 2008கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு பாடலின் இடைக்குரலை ஒலிபரப்பி அந்த மழலைக் குரல் யார் என்று கேட்டிருந்தேன். மனோஜ் கியான் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான “உழவன் மகன்” திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய “செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா” என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.
அதன் பின்னர் இவர் வளர்ந்த பின்னர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த “பூஞ்சோலை” திரைப்படத்தில் இளையராஜா இசையில் […]
றேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ!
Wednesday, December 17th, 2008கடந்த றேடியோஸ்புதிரும் இலகுவாக அமைந்ததில் பலருக்கு கொண்டாட்டமாம். எனவே ஒரு புதிரோடு வந்திருக்கிறேன், ராஜா இல்லாமல்
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் இடைக் குரலைப் பாடியிருக்கும் மழலை பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். அவர் யார் என்பதே கேள்வி. இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இவர் முதலில் பாடியதே இங்கே கொடுத்த பாடல் தானாம். அதனைத் தொடர்ந்து பெரியவரானதும் ராஜாவின் இசையில் ஒரு வாரிசை வைத்து அவரின் அப்பா […]
றேடியோஸ்புதிர் 30 - மரத்தின் கீழே இருந்து யோசிச்சு பாருங்க
Tuesday, December 9th, 2008மீண்டும் “ராஜ”பாட்டையோடு வந்திருக்கின்றேன் இங்கே கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படம் 28 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. ஒரு முன்னணி இயக்குனர் இயக்கத்தில் வந்த இப்படம் ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பேசுகின்றது. இதே ஆண்டு இதே காலப்பகுதியில் இன்னொரு முன்னணி இயக்குனரும் கூட இதே சமுதாயப் பிரச்சனையை வைத்தே ஒரு படம் பண்ணி இரண்டும் ஒரே ஆண்டில் வெளியாயின.
இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படத்தின் கதையை எழுதியவர் பின்னாளில் ஒரு முக்கியமான […]
இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்
Friday, December 5th, 2008கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்த “மனசுக்குள் மத்தாப்பு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இப்பதிவு அமைகின்றது.
ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் “சின்னப்பூவே மெல்லப்பேசு” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் […]
றேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ
Wednesday, December 3rd, 2008இந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண்பதுகளில் கலக்கிய இன்னொரு பாடல் இது. சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் 90 களில் ஆரம்பவரை ஒலித்துக் கொண்டே இருந்தது.
இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆரம்பத்த்தில் ஒரு குண்டான நடிகர் நடித்து வந்தது. பின்னர் தமிழில் ஒரு குண்டான நடிகர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் ஹிந்தியிலும் மான் வேட்டை நடிகர் நடித்து […]