Archive for January, 2009
நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி
Saturday, January 31st, 2009“நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you” நடிகர் நாகேஷ் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காக
தற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை […]
றேடியோஸ்புதிர் 34 - படம் சொன்னா பாட்டு சொல்லுவீங்களா?
Monday, January 19th, 2009இந்த வாரம் மீண்டும் ராஜா வாரம்.
ஒரு நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சொன்னதையே புதிரா போட்டு வைக்கிறேன். ஆனால் அந்தக் குறிப்பிட்ட பாடலை சொன்ன பாடகர் பாடவில்லை.
மெல்லிசை மன்னரை எப்போது பார்த்தாலும் “அண்ணே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும்ணே” என்று சொல்வாராம் இளையராஜா. அந்த நல்வாய்ப்பு ஏவிஎம் தயாரித்து ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “மெல்லத் திறந்தது கதவு” ரூபத்தில் வந்தது.
மெல்லிசை மன்னர் மெட்டுப் போட இளையராஜாவின் இசையருவி கலக்க, பாடல்கள் எல்லாம் தேன் மாரியாய். […]
மை டியர் குட்டிச்சாத்தான் பின்னணிஇசைத்தொகுப்பு
Saturday, January 10th, 2009தமிழில் வெளிவந்த முதல் முப்பரிமாணத் (3D) திரைப்படம் என்ற பெருமையைப் பெறுவது “மை டியர் குட்டிச்சாத்தான்”. மலையாளத்தின் மிகப்பெரும் தயாரிப்பாளர் அப்பச்சனின் தயாரிப்பில் ஜிஜோவின் இயக்கத்தில் வெளி வந்தது. டிவிடி வடிவில் அண்மையில் இப்படம் எனக்குக் கிடைத்ததும், இந்த சாதனைப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.
மூன்று ஏழைச் சிறுவர்களுக்கு வாய்க்கும் குட்டிச் சாத்தானின் நட்பும், அந்தக் குட்டிச் சாத்தான் மூலம் இவர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு எவற்றையெல்லாம் சாதிக்கின்றார்கள், இறுதியில் இந்தக் குட்டிச் சாத்தானை […]
றேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)
Wednesday, January 7th, 2009இசைஞானியின் “நான் கடவுள்” பாடல்கள் வந்து பட்டி தொட்டி, ஜீசாட், டிவிட்டார் எங்கும் அதே பேச்சுத்தான் இப்போது. “நான் கடவுள்” படம் வந்தால் பின்னணி இசையிலும் அவர் பின்னி எடுத்திருப்பது தெரியும். அதுவரை காத்திருப்போம்.
இந்தவேளை சற்றே சிறிய இடைவெளிக்குப் பின் இளையராஜாவின் கலக்கலான பின்னணி இசையோடு ஒரு புதிர். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இசை வரும் படத்தில் நடித்த சின்ன பொண்ணை இப்போது சின்னத் திரையில் தான் அதிகம் பார்க்கமுடிகிறது. சிறுவர்கள் அளவுக்கு மீறிப் படுத்தினால் இந்தப் […]
பாடல் எடுத்து படம் பெற்ற பாலு ஆனந்த்
Friday, January 2nd, 2009கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட புதிருக்கான பதிலோடு இந்தப் பதிவு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்.
அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களைத் தயாரித்த தூயவன் தயாரிப்பில் ஆர்.சுந்தரராஜன் இவர் இயக்கிய “வைதேகி காத்திருந்தாள்” பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி அவை ஒலிப்பேழைகளிலும் வந்து வெகு பிரபலம் அடைந்தன. அபோதெல்லாம் வழக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து ஒரு பாடலாவது தரும் ராஜா அந்தப் படத்தில் அவரை உபயோகிக்காமலேயே பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டன. அதில் வரும் “ராசாத்தி […]