Archive for March, 2009
இளையராஜாவும் ரஹ்மானும் இணைந்த படம்
Tuesday, March 31st, 2009அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கித் துடித்த இசைரசிகர்களுக்கு இனிப்பான நிகழ்வாக வந்தது ரஹ்மானும் இளையராஜாவும் இணைந்த இந்தப்படம்.
இனிய ஏப்ரல் 1 தின வாழ்த்துக்கள்
றேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ
Monday, March 30th, 2009மீண்டும் ராகதேவனின் பின்னணி இசையோடு மலரும் புதிர் இது.
மெல்லிய மயிலிறகாய் வரும் அற்புதமான இந்த இசையோடு ஆரம்பிக்கிறது இப்படம். சாதாரண பாமரத்தனமான காதல் கதை தான் ஆனால் எடுத்த விதம் அழகு. இந்த இயக்குனர் மலையாளத்தில் பெரும் இயக்குனர்களில் ஒருவர். இவரின் இன்னொரு படம் இரண்டு பெரும் தலைகள் நடித்த பிரமாண்டமான படம். இரண்டுக்குக்குமே ராஜா தான் இசை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரை இரட்டை எழுத்தாலேயே கூப்பிட்டால் போதும், இந்தத் தயாரிப்பாளரும் பின்னாளில் இயக்குனர் ஆனவர்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் […]
ஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்
Thursday, March 19th, 2009கடந்த றேடியோஸ்புதிரில் கடிகாரம் திருகும் ஓசையோடு ஆரம்பிக்கும் பாடலைப் புதிராகத் தந்திருந்தேன். இன்றைய இசைப் படையலில் புற ஒலிகளை வைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் நான்கைத் தருகின்றேன். இவற்றை விட ஏராளம் பாடல்கள் தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடந்தாலும் இன்றைய பதிவில் நான்கு வித்தியாசமான களங்களில் இருந்து இந்தப் பாடல்கள் வருகின்றன.
முதலில் வரும் பாடல் பணக்காரன் திரையில் இருந்து “இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது” என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் காதற் பாடலாக அமைகின்றது. கடிகாரத் திருகல் சத்தத்தோடு […]
றேடியோஸ்புதிர் 38 - கடிகாரக் காதல் பாட்டு்?
Tuesday, March 17th, 2009தொடர்ந்து இரண்டு புதிர் கொஞ்சம் தாவு தீர வைத்ததால் இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். பொதுவாக பாடல்காட்சிகளுக்கு பின்னணி ஒலிச்சத்தங்களை இலாவகமாகப் புகுத்தி கலக்கியிருப்பார் இசைஞானி இளையராஜா. இங்கே நான் தந்திருக்கும் ஒலிச்சத்தம் கடிகாரத்தை சாவி கொடுப்பதோடு ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பாட்டு. சின்ன முள் காதலியாம், பெரிய முள் காதலனாம், காட்சி கூடக் கலக்கல் தான், பாடலைக் கண்டு பிடியுங்களேன் டிங்டாண்டாங்:)
38.mp3 -
ஒகே புதிர் இத்தோடு முடிவடைந்து விட்டது, ஏகப்பட்ட க்ளூக்கள் […]
“பிரேமா - அன்புச்சின்னம்” பின்னணிஇசைத்தொகுப்பு
Wednesday, March 11th, 2009றேடியோஸ்பதியில் இடம்பெறும் முதல் தெலுங்கு மொழித் திரைப்படமாக இசைஞானி இளையராஜவின் “பிரேமா” இடம்பெறுகின்றது. 1989 இல் வெளிவந்த பிரேமா தமிழில் அன்புச் சின்னம் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
20 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் படம் கைக்கு வந்தது. எவ்வளவோ நல்ல படங்கள் என்றாலும் கால ஓட்டத்தின் பின் அவற்றை மீண்டும் பார்க்கும் போது ரசிக்கும் வண்ணம் இருக்காது ஆனால் இப்படத்தை இப்போது தான் பார்த்தபோது அதே புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது.
தமிழிலும் பெயர் வாங்கிய இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் […]
றேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்
Monday, March 9th, 2009றேடியோஸ்புதிரில் முதல்முறையாக தெலுங்குப் படமொன்றின் பின்னணி இசையோடு புதிர் அமைகின்றது.
1989 ஆம் ஆண்டு தெலுங்குப் படங்கள் பல ஒரே சமயத்தில் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெற்றி வாகை சூடிய காலம். காதல் படங்களில் இருந்து அதிரடிப் படங்கள் என்று மொழிமாற்றப்பட்ட பெரும்பான்மைப் படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தன. கீதாஞ்சலி, இதுதாண்டா போலீஸ், நான்தாண்டா எம்.எல்.ஏ, இதோ இன்னொரு தேவதாஸ், உதயம், அன்புச் சின்னம், மன்னிக்க வேண்டுகிறேன், ஆம்பள, வைஜெயந்தி ஐ.பி.எஸ், இந்திரன் சந்திரன் போன்ற […]
றேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா
Monday, March 2nd, 2009றேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப்பு படத்தில் சேர்த்துட்டேன்
முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிப் பெருமை சேர்த்த ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு ( அதான் ராஜாவே சொல்லிட்டாரே , வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி)போட்டிக்குச் செல்வோம்.
கீழே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் மிளிர்ந்த ஐந்து படங்களில் இருந்து பின்னணி இசைத் துண்டங்களைப் புதிராகக் கொடுக்கின்றேன். ஐந்துக்கும் சரியான விடை […]