றேடியோஸ்புதிர் 40 – இளையராஜா எழுதிய கதை

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.
இந்த வாரம் இடம்பெறும் இந்தப் புதிர் இசைஞானி இளையராஜாவின் இனியதொரு ஆரம்ப இசை கொடுத்து வருகின்றது. இந்த இசை வரும் படம் எது என்பதே கேள்வி.

குறித்த இந்தப் படத்தின் கதையை எழுதி, முழுப்பாடல்களைக் கூடத் தானே எழுதியதோடு இசையமைத்திருக்கின்றார் இசைஞானி இளையராஜா. இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும். இந்தப் படத்தின் நாயகன் நடித்த இன்னொரு படம் கூட இந்தப் படத் தலைப்பின் முதற்பதியோடு இருக்கின்றது. இசைஞானியின் கதைக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி, மணியம் செல்வன் கைவண்ணம் ஓவியப் போஸ்டர்கள் தீட்டுவது புதுமை என்றால், இந்தக் காவியத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இன்னாள் குணச்சித்திரம் இளவரசு.

இப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, இயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர். அலைந்து திரியாமல் கண்டு பிடியுங்களேன் 🙂