Archive for July, 2009
றேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை?
Friday, July 31st, 2009“…. ….” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் “காளி” வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் […]
சிறப்பு நேயர் “கைப்புள்ள” புகழ் மோகன்ராஜ்”
Wednesday, July 29th, 2009கைப்புள்ள என்று வலைப்பெயர் வைத்துக் கொண்டு பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் பரந்துபட்ட விஷய ஞானங்களுடன் எழுதிக் குவிக்கிறாரே என்று இவரைப் பற்றி அடிக்கடி நான் வியப்பதுண்டு. அக்டோபர் 2005 இல் இருந்து எழுதி வரும் இவர் இன்று வரை வலையுலக சர்ச்சைகளுக்குள் விழுந்து விடாமலும், தன் எழுத்துகளைச் சேதாரப்படுத்தாமலும் எழுதி வருவதுண்டு. எழுத்து வன்மையுடன், காமிராக் கண்களாலும் கைது செய்பவர் இவர். கைப்புள்ள காலிங் என்ற இவரின் வலைப்பதிவு சமீபத்தில் டபுள் செஞ்சுரி போட்டிருக்கு, இந்த வேளை […]
“வண்ணத்துப்பூச்சி” இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி
Saturday, July 25th, 2009“பெற்றோர்கள் குழந்தைகளுக்காகத் தான் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு நாள் முழுவதும் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த சம்பாதித்த பணம் எல்லாம் வாழ்க்கைக்கு பயன்படுகிறதா என்று சொன்னால் பெற்றோர்களின் பார்வையில் ஆமாம், குழந்தைகளின் பார்வையில் இல்லை என்று தான் எனக்குக் கிடைத்த பதில். ஒரு தோல்வியான வாழ்க்கையை வாழும் பெற்றோரை கண்டேன். குழந்தைகளின் பார்வையில் ஏன் இந்த உலகத்தைச் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். இதைக் கதையாக எடுத்துச் சொன்னபோது பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, […]
சிறப்பு நேயர் “இராப் (rapp)”
Wednesday, July 22nd, 2009சிறப்பு நேயர் தொடரின் இரண்டாம் சுற்றிலே அடுத்து ஐந்து முத்தான பாடல் தெரிவுகளோடு வந்திருப்பவர் பயமறியா பாவையர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்து சிங்கியுமான “இராப் (rapp).
“வெட்டி ஆபீசர்” என்ற வலைப்பதிவு ஒன்றை மே 2008 இல் இருந்து உருவாக்கி, சொல்லிலும் பதிவிலும் காட்டி வரும் இவர் சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என்ற தத்துவத்துக்கேற்ப நடப்பவர் என்பதை சகோதர வலைப்பதிவுகளிலும் இவர் போட்டு வச்சிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. ஆனால் இங்கே அவர் […]
இசைமேதை டி.கே.பட்டம்மாள் நினைவில்
Saturday, July 18th, 2009கர்நாடக இசை உலகின் பெண் மும்மூர்த்திகளில் இறுதியாக நம்மிடையே வாழ்ந்து வந்த டி.கே.பட்டம்மாள் அவர்கள் கடந்த யூலை 16 ஆம் திகதி வியாழன், 2009 இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். இந்தியா கடந்து உலகெங்கும் இசை மணம் பரப்பிய அவரை பத்ம விபூஷன் விருது உட்பட பல விருதுகள் கிடைத்து அந்த விருதுகளுக்குப் பெருமை தேடித்தந்தன. கர்நாடக இசையுலகம் தவிர்ந்து தமிழ்த்திரையிசையிலும் டி.கே.பட்டம்மாள் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.
சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலியான “தமிழ் முழக்கம்” வானொலிக்காக பட்டம்மாள் […]
சிறப்பு நேயர்: கலைக்கோவன்
Thursday, July 16th, 2009றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடர் மீண்டும் அடுத்த சுற்றில் கலைக்கோவனின் படைப்போடு ஆரம்பிக்கின்றது.
றேடியோஸ்பதியில் வாய்த்த நண்பர்களில் சற்றே வித்தியாசமாக அறிமுகமானவர் நண்பர் கலைக்கோவன். இவர் றேடியோஸ்புதிர் மூலமாகவே அறிமுகமாகி தொடர்ந்து விடாமல் போட்டிகளில் பங்கெடுப்பதோடு புதிரில் விடை சொல்லும் பாணியில் கூட ஒரு வித்தியாசத்தைக் காண்பிப்பார். உதாரணத்துக்கு, ஒரு முறை பாடகர் யுகேந்திரன் குறித்த புதிரைக் கேட்ட போது அவர் கொடுத்த பதில் பின்னூட்டம் இப்படி இருந்தது.
“சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக”..
இடைக்குரல் கொடுத்த
மலேசியா வாசுதேவன் வீட்டு பூ.
……யுகேந்திரன்
இந்த […]
கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு நேயர் தொடர் மீள் வருகை
Monday, July 13th, 2009தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து இன்று தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை. இந்த வேளை வைரமுத்து அவர்களுக்கு அவர் “யுத்” திரைப்படத்தில் எழுதிய தன்னம்பிக்கை தரும் […]
225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி
Friday, July 10th, 2009நேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து.
எனக்குள் இருக்கும் இசை குறித்த தீராத வேட்கையை நான் பணிபுரியும் வானொலி நிலையத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே கடந்த 10 ஆண்டுகள் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தவுடன் கட்டற்ற எல்லை வரை என்னால் பயணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நான் விரும்பியதை மட்டுமே கொடுப்பது என்பதை விட என்னைச் சுற்றியுள்ள நீங்கள் […]
றேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு?
Tuesday, July 7th, 2009வாழைப்பழத்தையும் கொடுத்து அதை உரிச்சும் கொடுப்பது போல புதிர் ஒன்று தருகிறேன். கண்டுபிடியுங்களேன் ;0.
இங்கே இளையராஜா இசையமைத்த இரண்டு பாடல்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு பாடல்களுமே ஒரே மெட்டில் போடப்பட்டவை.ஆனால் ஒன்று சந்தோசப் பாடலாக ஜோடிக்குரல்களிலும் இன்னொன்று ஒற்றை ஆள் பாடும் சோகராகமாக அமைகின்றது.
இந்த இரண்டு பாடல்களில் ஒன்று தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட டப்பிங் படத்தில் இருந்தும், இன்னொன்று நேரடித் தமிழ்ப்படத்தில் இருந்தும் வருகின்றன.
இதில் எது தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல் என்பதே […]
பாடகர் இளையராஜா - பாகம் 1
Thursday, July 2nd, 2009றேடியோஸ்பதி தொடர்களில் இன்னொரு தொடராக, இசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலித்த தேர்ந்தெடுத்த முத்தான பாடல்களைத் தொகுப்பாகத் தரவிருக்கின்றேன். அந்த வகையில் முதல் தொகுப்பில் முழுமையான காதல் தொகுப்பாகத் தருகின்றேன். இவை தனித்தும் ஜோடி சேர்ந்தும் பாடிய பாடல்களாக அமைகின்றன.
இந்தத் தொடரை றேடியோஸ்பதியின் தூண்களில் ஒருவரான தல கோபி என்ற கோபிநாத்துக்கு நாளைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் சிறப்புப் பரிசாக அளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.
முதலில் வருவது பாலைவன ரோஜாக்கள் படத்தில் இளையராஜா தனித்துப் பாடும் “காதல் என்பது பொதுவுடமை” […]