Archive for September, 2009
சிறப்பு நேயர் “நாடோடி இலக்கியன்”
Wednesday, September 30th, 2009ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறது, றேடியோஸ்பதி சிறப்பு நேயர்.
இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்குபவர் நண்பர் நாடோடி இலக்கியன்.
வலையுலகிற்கு வந்த பின்னர் , ஒத்த சிந்தனையுள்ள பதிவர்களின் பதிவுகளைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்ட எனக்கு நாடோடி இலக்கியனின் பதிவுகளைப் படிக்கக் கிடைத்தது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்பேன். ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று தன் எழுத்தை வைக்காமல் பரந்து விரிந்த அவரின் எழுத்தாற்றலுக்கு நானும் ஒரு விசிறி என்பேன். நாடோடி […]
நடிப்புக் குயில் எஸ்.வரலட்சுமி நினைவாக
Wednesday, September 23rd, 2009என் சின்ன வயதில் வானொலியில் “இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூ தொட்டிலைக் கட்டிவைத்தேன்’ பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அம்மாவே வந்து பாடுவது போல ஒரு பிரமையை உண்டாக்கியிருக்கும் எஸ்.வரலட்சுமியின் அந்தக் குரல்.
நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் ஆண் குரலில் ஜேசுதாஸ் பாடிய பாடலை விட என் மனதுக்கு நெருக்கமாக வந்து உட்கார்ந்து இன்று வரை இடம்பிடித்தது அந்தப் பாடல். இன்று வரை அந்தப் படத்தை நான் பார்க்காவிட்டாலும் கற்பனையில் இன்றும் என் அம்மாவே பாடுமாற்போல ஒரு […]
கலையுலகில் கமல் 50 - “குணா” இசைத்தொகுப்பு
Thursday, September 10th, 2009இந்த ஆண்டு கலைஞானி கமல்ஹாசன் திரையுலகில் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவையொட்டி சில சிறப்பு இடுகைகளைத் தரவிருக்கின்றேன். அந்த வகையில் ஓராண்டுக்கு முன் பதிவாக வந்து பலரின் அபிமானத்தைப் பெற்ற “குணா” திரைப்படத்தின் இசைத்தொகுபை வழங்கிச் சிறப்பிக்கின்றேன்.
கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் வெளிவந்திருந்தது.
குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் […]
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்
Tuesday, September 8th, 2009மலையாளத்தின் இரு முன்னணி நாயகர்களான மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்க பாசில் இயக்கிய “ஹரிகிருஷ்ணன்” திரைப்படம் தமிழுக்குத் தாவிய போது தான் “அவுசப்பச்சன்” என்ற இசையமைப்பாளர் குறித்த அறிமுகம் எனக்கு கிட்டியது, அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதில் இருந்து. எண்பதுகளில் இளையராஜாவின் சாஸ்திரிய இசைப் பின்னணியில் வந்த படங்களில் வரும் இசையும், இன்னொரு மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் பாதிப்பும் இருப்பதாகவே அவுசப்பச்சனின் பாடல்களைக் கேட்கும் போது எனக்குத் தோன்றும். எண்பதுகளில் மலையாளத்தில் கொடி கட்டிப் பறந்த ரவீந்திரனின் […]
சிறப்பு நேயர் ” சித்தை-பாசித்”
Saturday, September 5th, 2009றேடியோஸ்பதி சம்பாதித்த நண்பர்களில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான நண்பர் சித்தை பாசித் ஐ குறிப்பிடலாம். றேடியோஸ்பதியில் வரும் ஓவ்வொரு பதிவுகளையும் சிலாகித்து தன் தனிமடலில் தவறாமல் எழுதிவருபவர் இவர். இசை மீது இவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையும், இவரின் ரசிப்புத் தன்மையையும் அந்த மடல்களில் இருந்து நான் கண்டு கொண்டேன். சிறப்பு நேயராக இவரை அழைத்த போது எழுதி அனுப்பிய கன்னி முயற்சி இது. ஆனால் பாடல்களைப் பாருங்கள். ஒவ்வொரு பாடல்களுமே தனித்துவமான ரசனை கொண்டவை. […]
றேடியோஸ்புதிர் 45 - ஓணம் ஸ்பெஷல்
Tuesday, September 1st, 2009முதலில் றேடியோஸ்பதி நேயர்களுக்கு இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துக்களை ஒரு நாள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வதில் என்னுடன் சின்னப்பாண்டி, நிஜம்ஸ் மற்றும் தல கோபி ஆகியோர் பெருமையடைகின்றோம்
முதலில் உங்கள் மூளைக்கு வேலையாக வருவது றேடியோஸ்புதிர்.
90களில் புதுவசந்தம் ஆரம்பித்து வைத்த நான்கு நண்பர்கள் செண்டிமெண்ட் தொடந்து இரண்டு டஜனுக்கு மேல் கூட்டணி ஹீரோக்கள் படங்களை கொடுத்து வந்தது. அப்போது மலையாளத்தில் இருந்தும் ஒரு படம் இறக்குமதியாகி தமிழில் மீள எடுக்கப்பட்டது. மலையாளத்தில் கூட்டணி இயக்குனர்களாக இருந்து […]