Archive for October, 2009
சிறப்பு நேயர் - யோகா (யோவாய்ஸ்)
Wednesday, October 28th, 2009இந்த வாரம் சிறப்பு நேயராக வருபவர் இலங்கையின் ஊட்டி என்று வர்ணிக்கக்கூடிய குளு குளு பிரதேசம் நுவரெலியாவில் இருந்து “யோ வாய்ஸ்” யோகா.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலையுலகில் இருக்கும் யோகாவின் பதிவுகள் போலவே அவரது முத்தான ஐந்து ரசனைகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து யோகா பேசுவதைக் கேட்போம்
எனது பாடல் ரசனை பொதுவாக மற்றவரோடு ஒத்து போவதில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் ரொம்ப சந்தோஷமா பாட்டு கேட்பேன். ரொம்ப துக்கமா அதுக்கும் பாட்டு கேட்பேன். பாடல்கள் எனக்கு எபபோதும் […]
மலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக் கலைஞன்
Wednesday, October 21st, 200980களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு காலகட்டத்தில் ரி.எம்.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.
அத்தோடு […]
றேடியோஸ்புதிர் 46 - இயக்குனரான பாடகர்
Tuesday, October 20th, 2009இவர் இயக்குனராக எல்லாம் வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்,80 களில் பிரபலமாக விளங்கிய பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தப் பாடகர் ஒரு படத்திற்கு இசையமைத்தும் இருக்கின்றார். அந்தப் படத்தில் நடித்த பிரபல நாயகி படம் முடிவதற்குள் இறந்தது துரதிஷ்டம் கூட. பாடகர், பின்னர் ஒரு படத்திற்கு இசை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களில் கலக்கிய இவர் மகனும் தந்தை வழியொற்றி பாடகர், நடிகர், ஏன் இசையமைப்பாளராகக் கூட வந்திருக்கின்றார்.
மேலே கலவையாகவே உபகுறிப்புக்களைக் கொடுத்துவிட்டேன், இனிக் கேள்விக்கு வருகின்றேன். […]
சிறப்பு நேயர் “கிருத்திகன் குமாரசாமி”
Thursday, October 15th, 2009இந்த வார சிறப்பு நேயரைப் பார்ப்பதற்கு முன்னர், றேடியோஸ்பதி சிறப்பு நேயர் பகுதியில் உங்கள் ஆக்கமும் இடம்பெற விரும்பினால் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து அவை ஏன் உங்களை வசீகரித்தன, அல்லது அந்தப் பாடல்கள் நினைவுபடுத்தும் சுவையான சம்பவங்களைக் கோர்வையாக்கி என்ற மின்னஞ்சலுக்குத் தட்டிவிடுங்கள்.
சரி, இந்த வாரம் வந்து கலக்கும் சிறப்பு நேயரைப் பார்ப்போம்.
வலையுலகின் புதுவரவாக ஈழத்து உறவான கிருத்திகன் குமாரசாமி இந்த வார சிறப்பு நேயராக வந்திருக்கின்றார். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் இருந்து தான் […]
சிறப்பு நேயர் “சின்ன அம்மிணி”
Thursday, October 8th, 2009இந்த வாரம் றேடியோஸ்பதி சிறப்பு நேயராக அமர்க்களப்படுத்த இருப்பவர் நாம் வாழும் எங்கள் கங்காரு தேசத்தில் இருந்து “சின்ன அம்மிணி” என்பதில் பெருமையடைகிறோம். கிவி தேசம் நியூசிலாந்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த சின்ன அம்மணி தொடர்ந்தும் இடைவிடாது பதிவுலகில் இடைவிடாத பதிவுப்பணியை ஆற்றி வருபவர் என்று நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை. ஆனால் அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் சுனாமியாக வந்த வலைப்பதிவர்கள், பதிவுகள் ஓய்ந்து போன நிலையில் தொடர்ந்து எழுதி வரும் வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் […]