Recent Posts

Archives

Topics

Archive for December, 2009

நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக

Wednesday, December 30th, 2009

சில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான “வம்சவிருக்ஷா” (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.
கல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து “நெஞ்சில் ஓர் ஆலயம்” படைத்த ஸ்ரீதர், […]

ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்

Monday, December 28th, 2009

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.
இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் […]

சகலகலாவல்லி பி.ஆர்.விஜயலட்சுமி

Tuesday, December 22nd, 2009

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்டிருந்த கேள்வியாக அமைந்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு , இயக்கம் என்ற நான்கு பணிகளைச் செய்த பெண் இயக்குனர் யார் என்பதற்கு பி.ஆர்.விஜயலட்சுமி என்ற சரியான பதிலைப் பலரும் சரியான பதிலை அளித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கிய தயாரிப்பாளர், சக இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளே பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். பின்னர் கே.பாக்யராஜின் “சின்ன வீடு” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, அறுவடை நாள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுப் பணியைத் […]

றேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி

Monday, December 21st, 2009

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
இவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.
இந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் […]

ரஜினி 60 - சிறப்பு “பா”மாலை

Friday, December 11th, 2009

ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.
மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.
சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் […]

“பா (Paa)” ர்த்தேன், பரவசமடைந்தேன்!

Friday, December 4th, 2009

இசைஞானி இளையராஜாவுக்காக மட்டுமே தியேட்டர் படியேறிய இன்னொரு ஹிந்திப் படம் “பா”. முந்தியது ““சீனி கம்”. பா படம் நேற்றே வெளியாகியும் பதிவர்களின் அதிரடி விமர்சனங்கள் இன்னும் வராதது ஆச்சரியம்.
இன்று மதியம் 1 மணி காட்சிக்குப் போவோம் என்று நினைத்து தியேட்டருக்கு காரை விட்டேன். போகும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் , படம் பார்க்கும் கொடுப்பினை இருக்குமா என்ற நினைப்போடு மட்டுமே இருந்தேன். அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கட் வாங்கி “பா” வரப்போகும் […]

2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்

Wednesday, December 2nd, 2009

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக
2007 இல்
உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?
2008 இல்
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?
ஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்
இந்த 2009 […]