முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் “தோல்” என்ற நாவலுக்கு இந்திய “சாகித்ய அகாடமி’ விருது இந்த ஆண்டு கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவரை நான் பணிபுரியும் தமிழ் முழக்கம் வானொலி சார்பில் எடுத்திருந்த ஒலிவடிவத்தை இங்கு பகிர்கின்றேன்.
Month: December 2012
பூமாலையே தோள் சேரவா..தீம்தன தீம்தன…
“பூமாலையே தோள் சேரவா
பூமாலையே ஏங்குமிரு தோள் சேரவா”
அஞ்சனா, சத்யப்ரகாஷ் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, கண்கள் குளமாகின்றன எனக்கு.
படிக்கும் போது சிரிப்பாக இருக்கும் உங்களுக்கு, ஆனால் சற்று முன்னர் அடைந்த பரவசத்தின் வெளிப்பாடு தான் அது. எப்பேர்ப்பட்ட சக்தி இந்தப் பாடலுக்கு. இருபத்தேழு வருஷங்களுக்கு முன்னர் வந்த பாடல் ஒன்று இன்று கேட்கும் போதும் ஆட்டிப்படைக்கின்றதென்றால் அதை அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவைக்கமுடியாது. எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டுவிட்டோம், ஆனால் இப்பேர்ப்பட்ட பாடலை என்றாவது ஒருநாள் கேட்கும் போதும் ஆயிரம் சுகானுபங்களை அள்ளித் திரட்டிக் கொடுத்துத் தின்ன வைக்கின்றது.
இசைஞானி இளையராஜாவோடு ஜோடி கட்டிய பாடகிகளில், ஜானகியை மட்டுமே முதல் இடத்தில் வைத்து இந்தக் கூட்டணியை ஆராதிக்கத் தோன்றும். சித்ராவோடு ராஜா பாடிய பாடல்கள் தனியே நோக்கப்படவேண்டியது என்றாலும், எஸ்.ஜானகியை இன்னும் விசேஷமாக ராஜாவோடு ஜோடி போட்டு ரசிக்க இன்னொரு காரணம் அவரின் தனித்துவம் தான். எண்பதுகளில் எஸ்.ஜானகி என்றால் ஆம்பளை S.P.B என்றும் S.P.B ஐ பொம்பளை எஸ்.ஜானகி என்னுமளவுக்கு இருவருமே திரையிசைப்பாடல்களில் ஒரு வரையறைக்குள் நில்லாது எல்லாவிதமான சங்கதிகளிலும் பாடித் தீர்த்துவிட்டார்கள். எஸ்.பி.பி நையாண்டியாகச் சிரித்துப் பாடினால் அதற்கு ஈடுகொடுத்து நையாண்டியாகச் சிரித்துப் பாடும் ஜானகியை மட்டுமே ரசிக்கலாம், இன்னொருவர் பாடினால் அது அப்பட்டமான செயற்கையாக இருக்கும். அப்பேர்ப்பட்ட ஜானகி, ராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்களைக் கேட்கும் போது, ராஜாவின் குரல்வளத்துக்கும் அவருடைய அலைவரிசைக்கும் ஏற்றாற்போல இயைந்து பாடுமாற்போல இருக்கும், அங்கேயும் ஒரு செயற்கைத் தனம் இராது. அதனால் தான் இந்தப் பூமாலையையும் நேசிக்கத்தூண்டுகிறது.
ஆர்ப்பரிக்கும் வயலின் ஆலாபனையோடு எஸ்.ஜானகியும், ராஜாவும் பாடும் இந்தப் பாடலில் இருவருமே முன்னணிப்பாடகர்களாகவும், அதே சமயம் பின்னால் இயங்கும் ஒத்திசைப் பாடகராகவும் இரட்டைப் பணியைச் செய்கின்றார்கள்.
ஜானகி பாடும் போது
என்னை உனக்கென்று கொடுத்தேன்
தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏங்கும் இளம்காதல் மயில் நான்
தேன்துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
Ordinary (Malayalam) சுகமான பயணம்
பிரயாணத்தில் சந்திக்கும் மாந்தர்களின் குணாதிசயங்களையும், வழி நெடுகக் கிட்டும் சுவாரஸ்த்தையும், சேர்த்தாலே நம்மூரில் ஏகப்பட்ட கதைகளை அள்ளலாம். ஆனால் இப்படியான படைப்புக்களை அதிகம் கொடுக்காத குறையோடே பயணிக்கிறது சினிமாவுலகம். கடைசியாக தமிழில் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்படம் முற்றிலும் புதுமுகங்களை முக்கிய பாத்திரங்களை வைத்துக் கொடுத்திருந்தது. பரவலாக இந்தப்படம் பலரை ஈர்க்காவிட்டாலும் எனக்கு என்னவோ மிகவும் பிடித்திருந்தது. பயணம் மீதான அதீத காதலாலோ என்னவோ தெரியவில்லை. அந்தவகையில் இன்று பார்த்த Ordinary என்ற மலையாளப்படத்தைப் பார்த்ததும் முதல் வரியில் சொன்ன அந்த திருப்தி கிட்டியது.
பத்தனம்திட்டாவில் இருந்து கவி என்ற எழில் கொஞ்சும் மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரேயொரு அரச பஸ் சேவை, பஸ் ஓட்டுனர் பிஜூ மேனன், வழி நடத்துனர் குஞ்சக்கோ போபன் இவர்களோடு கவி கிராமத்து மக்கள் என்று இடைவேளை வரை நல்லதொரு கலகலப்பான பயணமாகப் பதிவு செய்கிறது, அதன் பின் தொடரும் மர்ம முடிச்சும் முடிவில் கிட்டும் விடையுமாக அமைகிறது Ordinary படம்.
தொண்ணூறுகளின் நாயகன் பின் குணச்சித்திரம் என்று இயங்கும் பிஜூ மேனனுக்கு மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம். கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த குணாம்சத்தைத் தன் குரலில் வெளிப்படுத்தும் பாங்கிலேயே வித்தியாசத்தைக் காட்டுகிறார். நாயகன் குஞ்சக்கோ போபனுக்கு இன்னொரு படம் என்ற அளவில் மட்டுமே.வழக்கமாக கதாநாயகரிடம் அடிபட்டுக் கதறும் மாமூல் வில்லன் பாத்திரங்களில் வந்த பாபுராஜ் இந்தப் படத்தில் குடிகாரப்பயணியாக வந்து கலகலப்பூட்டி ஆச்சரியப்படுத்துகிறார் தன் கலக்கல் நடிப்பால்.
கேரள மலைக்கிராமம் Gavi இன் அழகை அள்ளிச்சுமந்திருக்கிறது இந்தப் படம். மசாலாப்படத்திலும் கூட இயற்கை கொஞ்சும் எழிற் கிராமங்களைச் சுற்றிக் காட்சியமைத்துக் கவர்வதில் மலையாளிகள் தனித்துவமானவர்கள் என்பதைப் பல படங்கள் உதாரணம் சொல்லும். இதுவும் அப்படியே.
இந்தப்படத்தின் இன்னொரு பலம் பாத்திரமறிந்து கொடுத்த இசை வள்ளல் வித்யாசாகருடையது. உறுத்தாது பயணிக்கும் பின்னணி இசை மட்டுமன்றி, முத்தான பாடல்களும் முதல்தடவை கேட்டபோதே ஒட்டிக்கொண்டுவிட்டன. இடையில் எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும், வித்யாசாகருக்கான இடத்தைக் கேரளர்கள் கெளரவமாக வைத்திருப்பதற்கான காரண காரியம் தேடவேண்டியதில்லை
Ordinary சாதாரண கதை ஆனால் அசாதாரணமாக மனசில் ஒட்டிக்கொள்கிறது.