இந்த நாவலைப் படித்த போது அப்போது எப்படி ஹாலிவூட்காரர்கள் இதைப் படமாக்காமல் விட்டார்கள் என்று எனக்குள் ஆச்சரியம் எழுந்தது. அதுதான் The Bourne Identity என்ற ஆங்கில நாவல். ஆனாலும் ஞாபக மறதியை மையப்படுத்தி எழுதப்பட்ட துஷ்யந்தன் – சகுந்தலை காவியமெல்லாம் எப்பவோ நாம் படித்துத் தெரிந்து கொண்டது தானே? கமல்ஹாசனுக்காகப் படம் இயக்க வாய்ப்பு வருகிறது என்ற போது எனக்கு இந்த நாவ்ளின் அடிப்படையை வைத்தே கதை பண்ணினால் என்ன என்று தோன்றியது. ஆனாலும் மூலக் கதையில் பிரபு பாத்திரம் இல்லை எனவே அதற்கும் மினக்கெட்டுக் கதை உருவாக்கப்பட்டது. அதற்காக உழைத்தவர்கள் ராஜேஷ்வரும், ஷண்முகப் பிரியனும். வெற்றி விழா என்ற சூப்பர் ஹிட் சித்திரத்தை நம்மால் கொடுக்க முடிந்தது என்கிறார் இதன் இயக்குநர் பிரதாப் போத்தன். சொல்லப் போனால் இன்று போல் முப்பது ஆண்டுகளுக்கு முன் எந்த வித உயர் தொழில் நுட்பம் இல்லாத சூழல், படப்பிடிப்புக்கும் ஏக கெடுபிடி இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முகம் கொடுத்து வெற்றி விழாச் சூடியது இப்படம்.
சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் முதன் முறையாக வெளியில் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்துத் தயாரித்த படம் இந்த வெற்றி விழா.
கமல்ஹாசன், சசிகலா, அமலா இவர்களோடு பிரபு, குஷ்பு கூட்டணி என்று நட்சத்திரப் பட்டாளம் தான். இதெல்லாம் ஒரு புறம் இருக்க
தமிழ் சினிமாச் சரித்திரத்தில் முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்றாக அமைந்த அந்த ஜிந்தா பாத்திரத்தில் நடித்த சலீம் கவுஸ் “வெற்றி விழா” படத்தின் சிகரமாக, அவரின் புதுமையான நடிப்பில் இன்று வரை மறக்காமல் நினைவுறுத்தப்படுகிறார். தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ கம்பெனியின் நாடகங்களில் பிரதாப் போத்தன் நடித்த போது அங்கு சிறப்பான நடிப்பைக் கொடுத்து வந்த நடிகர் சலீம் கெவுஸ் ஐ நினைவில் நிறுத்தித் தமிழுக்கு முதன் முறையாக இந்தப் படம் மூலமே அறிமுகப்படுத்துகிறார் பிரதாப் போத்தன்.
இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள் தமிழில் முதன் முறையாகப் பிளாட்டினம் டிஸ்க் இதன் வழியாகக் கிட்டியது. எதை எடுக்க எதை விட என்று எல்லாப் பாடல்களுமே தேன் மாரி என்றாலும் அந்தக் காலத்தில் மாருகோ மாருகோ பாடலை எல்லாம் வெறி பிடித்தது போலக் கேட்டுக் கொண்டாடினோம்.
ஹிந்தி மாதிரி இருக்கணும் ஆனா ஹிந்தி இருக்கக்கூடாதுன்னு சொல்லி வாலியை எழுத வச்ச பாட்டுத்தான் “மாருகோ மாருகோ மாருகோயி” என்று இந்தப் பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கங்கை அமரன். மீதி நான்கு பாடல்களும் வாலி எழுத “சீவி சிணுக்கெடுத்து” பாடல் கங்கை அமரனுக்கு எழுதக் கிட்டுகிறது. பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே அன்பே இன்றும் புதுக் காதலர்களின் தேசிய கீதம். தத்தோம் தளாங்கு தத்தோம் துள்ளிசையில் புதுமை படைத்தது.
வெற்றி விழா படத்தின் குதிரையோட்ட நகர்வுக்கு ஈடாக இசைஞானி இளையராஜாவின் அதிரடி இசை மிரட்டும்.
அந்த மிரட்டலை நீங்களும் அனுபவிக்க
முகப்பு இசை பாடலோடு
வில்லன் குழுவால் கமல் வேட்டையாடப்படும் போது
கமல் காப்பாற்றப்படும் போது
அடைக்கலம் கொடுத்த இடத்தில் வம்பு பண்ணுபவர்கள் வாங்கிக் கட்டும் நேரம்
மாருகோ மாருகோ இசையோடு கலக்கும் சண்டை
கமலை அடையாளம் காணும் பழைய வில்லனைத் துரத்தித் தன் அடையாளத்தைத் தேட முனையும் கமல்
கமல் தன் அடையாளத்தைத் தேடி வங்கிக்குப் போய் நடிக்கும் போது
தான் போலீஸ் அதிகாரி என்ற உண்மையை ராதாரவி வழியாகக் கமல் அறியும் போது
வில்லன் கூட்டத்தால் அமலா வேட்டையாடப்படும் போது
பூங்காற்று உன் பேர் சொல்ல பாடலின் சோக வடிவம் படத்தின் பின்னணி இசையாக
வில்லனால் சசிகலா கடத்தப்படும் போது
குஷ்புவைத் தேடிப் போகும் கமலும் பிரபுவும்
குஷ்பு இருக்கும் இடத்தை அடையாளம் காணல்
தாங்கள் இருக்கும் இடத்தை வெற்றிவேல் அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று உணரும் ஜிந்தா
ஜிந்தாவைத் தேடிச் செல்லும் கமலும் பிரபுவும்
வில்லன் கோஷ்டி வேட்டையாடப்படும் போது
நிறைவு இசை
கானா பிரபா