றேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ


வணக்கம் மக்கள்ஸ்,

கடந்த இசைத்துணுக்குப் புதிருக்கு நீங்கள் கொடுத்த பெருவாரியான ஆதரவில் (?) மீண்டும் இன்னொரு இசைத்துணுக்குப் புதிரில் உங்களைச் சந்திக்கிறேன். இம்முறையும் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் முத்தான ஐந்து படங்களின் பாடல்களில் இருந்து இந்தப் புதிர்கள் வருகின்றன. இவற்றின் பொது அம்சம், எல்லாப் பாடல்களிலும் புல்லாங்குழல் வாத்தியத்தின் பயன்பாடு காணப்படுகின்றது. இதோ தொடர்ந்து இசையைக் கேட்டுப் பதிலோடு வாருங்கள் 😉

ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்

பாட்டு 1

சரியான பதில்: பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் இருந்து “உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது” பாடியவர்கள் மனோ, சித்ரா. இதோ முழுமையான பாடல்

பாட்டு 2

சரியான பதில்: “முத்தமிழ் கவியே வருக” தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா

பாட்டு 3

சரியான பதில்: நினைவுச்சின்னம் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் “வைகாசி மாதத்துல பந்தல் ஒண்ணு போட்டு”

பாட்டு 4

சரியான பதில்: “நினைத்தது யாரோ நீ தானே” பாடல் பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இருந்து ஜிக்கி, மனோ பாடுகிறார்கள்

பாட்டு 5

சரியான பதில்: பாசப்பறவைகள் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடுகின்றார்கள் “தென்பாட்டித் தமிழே”

42 thoughts on “றேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ

 • கடைசிப்பாட்டும் தெரிஞ்சுடுச்சு..ஆனா ரெண்டாவது மட்டும் தொண்டையிலே நிக்குதுவரமாட்டேங்குது..மத்தது கண்டுபிடிக்கமுடியாதுன்னு தோணுது..

 • ச்சே என்ன பாஸ் இவ்ளோ ஈசியால்ல்லாம் புதிர் போட்டா எப்டி பாஸ் ! போங்க பாஸ் போயி நல்லா ஸ்ட்ராங்கா ஈசியா கண்டுபுடிக்காத மேரி ஒரு புதிர் எடுத்துட்டுவாங்க ஒடுங்க ஓடுங்க ! :)))))))

 • 3வது இசை எல்லாம் ரொம்ப ஓவரு…அதுல புல்லாகுழல் எல்லாம் ரொம்ப லைட்டாக வருது…செல்லாது செல்லாது ;-))

  உடனே ஒரு 4பேரு வாங்கய்யா ;-))

 • சென்ஷியின் காமெண்டு ;-))

  பின்னூட்டம் அங்க போட முடியல.. எனக்கு சரியா அந்த ப்ளேயர்-உம் ஒர்க் ஆகலை ;(

  1. உன் மனசுல பாட்டுதான் இருக்குது – பாண்டி நாட்டு தங்கம்
  2. ஆலோலம் பாடி – ஆவாரம்பூ
  3. சீவி சினுக்கெடுத்து பூவை முடிஞ்சு வந்த – வெற்றிவிழா
  4.
  5. தென்பாண்டி தமிழே – பாசப்பறவைகள்
  15:53

 • ஏதேது ரெண்டு பாட்டு கண்டுபுடிச்சிட்டீங்களா அக்கா?? கொஞ்சம் கம்முன்னு இருங்க !

  கானா பிரபா அவருக்கே தெரியல இதுல நம்மளை டெஸ்ட்டு பண்றாராமாம் அவ்ளோ சீக்கிரத்துல சொல்லப்பிடாதுக்கா :)))

 • முதல் பாட்டு ”உம் மனசுல பாட்டு தான் இருக்குது”…..கார்த்திக், நிரோஷா நடித்தது படத்தின் பெயர் தெரியலை.

  மீதிப் பாட்டெல்லாம் தெரியுது. ஆனா ஞாபகம் வரலை.

 • முத்துலெட்சுமி

  எல்லாத்தையும் தேடிக் கண்டுபிடித்து வரவும் 🙂

  ஆயில்

  ஈசியாப் போட்டிருக்கிறதக் கண்டுபிடியுமேன் 🙂

  பெயர் குறிப்பிடாத அன்பர் சொன்ன ஒரே
  பதில் சரி

 • தல கோபி

  சொன்ன மூன்றும் சரி, மற்ற இரண்டுடன் வருக 🙂

  சென்ஷி

  2, 3, 4 தப்பு

 • 1. Un manasula pattu than (Pandi Nattu thangam)

  2. Muthamizh Kaviye varuga (Dharmathin Dhalaivan)

  3. Vaikasi Masathula vazha maram (Ninenvu Chinnam)

  4. Ninethathu yaro (Paatukorru thalaivan)

  5. Thenpandi thamizhe (Paasa paravaigal)

 • 1. Un manasula Pattuthan (Paandi nattu thangam)

  2. Muthamizh kaviye varuga (Dharmathin thalaivan)

  3. Vaikasi Masathula (Ninevu Chinnam)

  4. Ninethathu Yaro (Pattukoru Thalaivan)

  5. Thenpandi thamizhe (Paasa Paravaigal)

 • 1 – உன் மனசுல பாடு தான் – பாண்டி நாட்டு தங்கம்
  2 – முத்தமிழ் கவியே – தர்மத்தின் தலைவன்
  3 – வைகாசி மாசத்தில – நினைவுச்சின்னம்
  4 – நினைத்தது யாரோ – பாட்டுக்கொரு தலைவன்
  5 – தென்பாண்டி தமிழே – பாசப்பறவைகள்
  சரிதானா நண்பரே..

  அன்புடன்,
  மணி..

 • 2. கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும்.

  5.தென்பாண்டித் தமிழே – பாசப் பறவைகள்.

 • இரண்டு பாடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது :((

  இரண்டாவது பாடலின் இசை மிகவும் பரிச்சயமானது போல இருக்கிறது.ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை..:(

  4- நினைத்தது யாரோ
  5-தென்பாண்டித்தமிழே என் சிங்காரக்குயிலே

 • 1 .உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது -பாண்டி நாட்டுத் தங்கம்
  3 .வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு (நினைவுச் சின்னம் )(எனக்கு சிரமம் இல்லாம நான் போட்ட மாத்திரத்திலேயே என் அண்ணா சொல்லிட்டாங்க 🙂 )
  5 .தென் பாண்டித் தமிழே -பாசப் பறவைகள்
  மீதி ரெண்டு பாட்டும் நல்லாத் தெரியும் அடிக்கடி கேட்ட பாட்டு அந்த வரிதான் பாட்டுத் தான் :-O

  வரேன் மீதியோட

 • தாருகாசினி,

  4, 5 சரி, மற்றவையோடும் வரவும் 🙂 

  உமாகிருஷ்,

  2, 4 உடன் வரவும், அண்ணாவிடம் காப்பி அடித்ததால் பரீட்சையில் புள்ளிகள் குறைக்கப்படும் 🙂 

 • கானா .. முதல் பாட்டு தான் சிங்கிஅடிக்குது .. பிடிச்சுடுவோம் .. எங்க போக போகுது!!

  பாட்டு 1 :

  பாட்டு 2 : முத்தமிழ் கவியே

  பாட்டு 3 : வைகாசி மாசத்துல

  பாட்டு 4 : நினைத்தது யாரோ நீ தானே!

  பாட்டு 5 : தென்பாண்டி தமிழே

 • ஹ ஹ … ரெண்டு நிமிசம் .. அதையும் கண்டுபிடிச்சாச்சு!!

  பாட்டு 1 : ஓ மனசில பாட்டு தான்

  பாட்டு 2 : முத்தமிழ் கவியே

  பாட்டு 3 : வைகாசி மாசத்துல

  பாட்டு 4 : நினைத்தது யாரோ நீ தானே!

  பாட்டு 5 : தென்பாண்டி தமிழே

 • விஜய்

  என்றென்றும் ராஜா பதிவு போடணும்னு இருந்தேன் தள்ளிப்போய்விட்டது.

  பதில்கள் இன்று வெளியாகும்.

  மீனாட்சி சுந்தரம்

  சொன்ன பதில்கள் சரி 🙂

 • ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்

 • யப்பா எப்படியே 3 கண்டுபிடிச்சிட்டேன் ;-))

  3வது பாட்டு சுத்தமாக நினைவேல்ல

  4வது அய்யோ வட போச்சேன்னு இருக்கு 😉

 • காண பிரபா… இளையராஜாவோட ப்ரோக்ராம்ல ஜேசுதாஸ் இளமை ததும்பும் என் இனிய பொன் நிலவும் போடுங்க.. மூன்று முறை தப்பு பண்ணி திருத்தி திருத்தி பாடிய பூவே செம்பூவே பற்றியும் குறிப்பிடவும்.. அவரு ஏழு தடவ தேசிய அவார்டு வாங்கினாலும் தப்பு தப்புதான் நு சொன்ன இளையராஜாவுக்கு ஒரு சொட்டு… சோகத்தை எல்லாம் மனதுக்கும் அடக்கி அடி வயிற்றில் இருந்து சித்ரா " இனி எனக்காக அழவேண்டாம்" அப்படின்னு பாடும் பொது எனக்கு அழுகையே வந்துடுச்சு, ஏதோ அவங்க நமக்கு பாடின மாதிரி ஒரு தோணல்.. எஸ். பி. பி பத்தி என்ன சொல்லறது.. சொல்லவே வேணாம்.. அவரு எப்பவும் ஸ்ட்ரோங் பேஸ் மென்ட் தான்.. போனதடவ மாதிரி திப்பு ஷ்ரேயா கோசல், பவதாரிணி யா பாடவெச்சு அவங்களும் மேடயில் திணறி தப்பு பண்ணி. நாமலும் போர் அடிச்சு இருந்ததுக்கு பக்காவான ரிகர்ஷளோட புது பாடகர்கள்.. ரொம்ப சந்தோசம்.. இறந்து போன சொர்ணலதாவுக்கு ஒரு அஞ்சலி சொல்லியிருக்கலாம்.. என்னுள்ளே பாட்டை போட்ருக்கலாம்.. நாங்க (சொர்ணலதா) ரசிகர்கள் ரொம்ப பீல் பண்ணினோம்.. அப்பேற்பட்ட பாடகியை ஒரு வருஷத்துல மறந்துட்டோமா…. ஜானகி அம்மாவால பாடமுடியாது.. சரி.. அதுக்காக அவங்கள மரியாதையை செஞ்சிருக்கலாம்.. கூப்பிட்டு அஞ்சு நிமிஷம் பேச சொல்லியிருக்கலாம்..
  ஜானகி இல்லாம எப்படி இளையராஜா வோட ஆரம்பகாலம்.. ஜென்சி, சைலஜா, மனோ, சுசீலா அம்மா., இவங்களை எல்லாம் மறந்ததுக்கு ராஜாவுக்கு குட்டு வைக்கணும்..

 • ஹ்ம்ம் இரண்டாவது பாட்டு அந்த இசை படகில் போகும் போது வரணும்ன்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.அதனால் தாலாட்டுதே வானம் டைப் பாடல்களா அல்லது டைட்டில் பாட்டா ன்னு மண்டை காஞ்சிங் ரொம்ப.முத்தமிழ் கவியே வருக பாடலை கிடார் க்விஸ் காக கேட்டப்போ இதெல்லாம் கொடுத்தா ஈசியா கண்டுபிடிச்சிருவேனாக்கும் ன்னு நினைச்சேனே.அதே போல நாலாவது விஜயகாந்த் படம் ன்னு யூகம்.ஆனா கோவில் காளை பாட்டா கேட்டுகிட்டு இருந்தேன் பாஸ்.ANYWAY வெகு சுவராசியம் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *