றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?


வணக்கம் வணக்கம் வணக்கம்,

நீஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின்னர் றேடியோஸ்புதிர் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் புதிரும் ஒரு அட்டகாசமான ராஜாவின் அறிமுகம் சார்ந்த கேள்வியாக அமைந்திருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவுக்கு கேரளத்துக் குயில்களின் குரல்களில் ஏனோ மோகம், அந்தவகையில் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மலையாளப்பாடகர்கள் பட்டியல் நீண்டது. அப்படி வந்தவர் தான் இந்தப் பாடகி. இந்தப் பாடகி ஏற்கனவே மலையாளத்தில் ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும், தமிழில் இசைஞானி இளையராஜாவின் முத்திரைப் பாடலைப் பாடக் கிடைத்தது அவருக்கு ஒரு கெளரவம்.

ஆனால் நாகூர் பாபு, பாடகர் மனோ ஆனது போல, மினி ஜோசப் என்று வந்த இந்தப் பாடகியின் பேரை மாற்றினார் இசைஞானி. அப்போது பெரும் எதிர்பார்ப்பில் வந்த படத்திற்காக நல்லதொரு பாடலொன்றை இந்தப் பாடகிக்காக வழங்கினார் ராஜா. தொடர்ந்து இளையராஜாவின் பல படங்களில் பாடகியாகச் சிறப்பிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது இன்னொரு இசையமைப்பாளரால். ஆனால் என்ன பயன். இவருக்குக் கிடைத்த அந்தப் பெரும் புகழ் இருக்கும் போதே தன்னால் பாட முடியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். மீண்டும் பாட வந்தபோது ஏற்கனவே புதுக்குயில்கள் பல கூடாரமிட்டிருந்ததால் முற்றாகவே மறக்கடிப்பட்ட பாடகியாகிப் போனார். யார் இந்த மினி ஜோசப் இவர் பாடிய அந்த முதற்பாட்டு என்ன, இவரின் பெயரை இசைஞானி எப்படி மாற்றி அமைத்தார் என்பது தான் இந்தப் புதிரின் கேள்வி

மண்ணெண்ணை தீப்பிடிப்பது போலச் சட்டென்று வரவேண்டும் பதில்கள் 😉

போட்டி இனிதே ஓய்ந்தது

பதில் இதுதான்
அந்தப் பாடகி மினி ஜோசப் என்ற மின்மினி
ராஜா அறிமுகப்படுத்திய படம்: மீரா
பாடல்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு
பிரபலமாக்கிய இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

34 thoughts on “றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?

 • பெயர் குறிப்பிடாத அன்பர்

  சரியான பதில்.

  சரவணா

  அதே தான்

  சேது

  பாடலைச் சொல்லவில்லையே?

  சொக்கர்

  சரியான பதில்

  வந்தி

  பாடல் என்னவென்று சொல்லவில்லையே?

 • கானா சார் இந்த காலத்து பசங்க எல்லாம் "லவ்வுனா லவ்வுனு" அலையிறாங்க பாவம்.. இதெல்லாம் "மின்மினி" பூச்சி மாதிரி தற்காலிகமானது புரிய மாட்டேங்குது… ஹ்ம்ம்

  ~நாரதமுனி

 • மின்மினி

  முதல் படம் -லவ்வுன்னா லவ்வு- மீரா

  பிரபலமானது- சின்ன சின்ன ஆசை-ரோஜாவில்.

 • வந்தி

  இந்த முறை பாடலைச் சொல்லி முழுமையான பதில் தந்திருக்கிறீர்கள் 😉

  நாரதமுனி

  அதே தான் 😉

  வீரு

  பாடகர் சரி, பாட்டு தவறு

  சேக்காளி

  பாடகி பேர் சரி, அவரின் முதற்பாடல் என்ன என்று கேட்டிருந்தேன்

  ஆனந்த்

  அதே தான்

 • MinMini
  First Song: Lovunna Lovvu (Meera – Famous for Oh Butterfly Song)
  She is Famous for AR Rahman's Debut Chinna Chinna Asai

 • மின்மினி
  ல‌வ்வுன்னா ல‌வ்வு பாட‌ல்.

  இன்னொரு இசைய‌மைப்பாளர்‍ ஏ.ஆர்.ர‌ஹ்மான் சின்ன‌ சின்ன‌ ஆசையில் தொட‌ங்கி எத்த‌னையோ பாட‌ல்.

  புதிரை அவிழ்க்கும் போது , ஒரு மாலைச் ச‌ந்திர‌ன் ம‌ல‌ரைத்தேடுது பாட‌லை கொடுப்பீங்க‌ன்னு எதிர்பார்க்கிறேன்.

 • சின்னக்கிறுக்கன்

  சரியான பதில்

  G3

  ஆண்டவர் கைவிடல 😉

  தல கோபி

  அதே

  கைப்ஸ்

  சரியான பதில். இரண்டாவது தடவை சரியான பாடல்

  blogpaandi

  சரியான பதில்

  நாடோடி இலக்கியன்

  சரியான விடை, கண்டிப்பா அந்தப் பாட்டு வரும் 😉

 • ”சின்ன சின்ன ஆசை” கொண்டு வந்த பெரிய பாடகி மின்மினி.

  பாடல் அதுதான் க்ளு குடுத்துவிட்டீர்களே. மண்ணெண்ணெய் என்று அதன் மேல் “லவ்வுனா லவ்வு” இல்லையா.

 • மின்மினி

  //மண்ணெண்ணை தீப்பிடிப்பது போலச்//

  இது என்னாது?

  தீ’தானே மண்ணெண்ணையை புடிச்சுக்கிட்டு போவும்?!

 • கணேஷ்

  பாடகி சரி

  மின்மலர்

  சரியான பதில்கள்

  வேங்கட ஶ்ரீனிவாசன்

  😉 அதே

  ஆயில்ஸ்

  நீர் சரியான நக்கீரர் ஐயா

 • பாடகி மின்மினி..ARR இசையில் சின்னச் சின்ன ஆசை அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த பாடல்..அதன் பிறகு குரல் சரியில்லாமப் பொய் ரொம்ப சிரமப் பட்டாங்க..முதல் பாடல்…என்ன நினைவு இல்லையே ?:(

 • S Maharajan has left a new comment on your post "றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?": தல அந்த பாடகி மின்மினி தானே,?
  ஏ.ஆர் ஆல் முலம் "சின்ன சின்ன ஆசை'யை பாடியவர் தானே. மீராவில் வந்த
  வந்த "லவ் வு னா லவ் வு மண்ணெண்ணை ஸ்டவு"
  சரியா தல… //

  மகராஜன்

  சரியான பதில்கள், உங்கள் பின்னூட்டம் தவறுதாக அழிக்கப்பட்டு விட்டது மன்னிக்க 🙁

 • பதில் இதுதான்
  அந்தப் பாடகி மினி ஜோசப் என்ற மின்மினி
  ராஜா அறிமுகப்படுத்திய படம்: மீரா
  பாடல்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு
  பிரபலமாக்கிய இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
  பாடல்: சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

  போட்டியில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 😉

 • //தீ’தானே மண்ணெண்ணையை புடிச்சுக்கிட்டு போவும்?!//

  //ஆயில்ஸ்
  நீர் சரியான நக்கீரர் ஐயா//

  அவர் “ஆயில்”யன் இல்லையா அதனால், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *