“ஆயில்யன் – அனு” => மணப்பந்தல் காண வாராயோ

இன்று ஜீலை 3 ம் திகதி திருமண வாழ்வில் புகும் நமது ஆயில்யன் அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம். 2007 ஆம் ஆண்டில் பதிவுலகில் சுனாமியாக வந்து தொடர்ச்சியாக வலையுலகில் அலையடித்தவர் புதுப்புது சமூக வலைத்தளங்கள் வரும் போதெல்லாம் அவற்றைப் பெருந்தன்மையோடு உள்வாங்கி ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், பஸ் என்று ஒவ்வொரு தளங்களிலும் தடம்பதித்த சிங்கன்(ம்) இவர்.

என் உடன்பிறவாத் தம்பியாக, சின்னப்பாண்டி என்ற புகழ் நாமத்தோடு வரும் ஆயில்யன் (எ) முத்துகுமரன் ஜீலை 3 ஆம் திகதி இராஜராஜேஸ்வரி (எ) அனுவைக் கைப்பிடித்துத் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றார். இந்த வேளை அவரின் மனம் போல மாங்கல்யம் அமைந்ததோடு இந்தத் திருமண வாழ்வு தம்பதியருக்கு ஆண்டவனின் அருளையும் பதினாறு செல்வங்களையும் (மக்களையும்) பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம். தம்பி ஆயில்யனைக் கண்கலங்காமக் (தூசு விழுந்தாக் கூட) கண்ணின் மணிபோலக் காக்கும் பொறுப்பு தங்கை அனுவுக்கு உண்டு என்பதைத் தீவிரமாக இந்தவேளை வலியுறுத்துகின்றோம்.

இப்படிக்கு
ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், பஸ் குழும நண்பர் குழாம்
அம்மா சங்கம் (மலையாள நடிகர் குறிப்பாக நடிகைகள் சங்கம்)
ஸ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
ஆண்பாவம் திரைப்பட ரசிகர் வட்டம்

இந்தவேளை ஆயில்யன் தம்பதியருக்காக நாம் தரும் சிறப்பு திருமண வாழ்த்துப்பாடல் பட்டியல்

“வாராய் என் தோழா வாராயோ மணப்பந்தல் காண வாராயோ”

“நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும்”

“ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்”

“குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்”

“அழகிய கல்யாணப்பூமாலைதான் விழுந்தது என் தோளில் தான்”

பி.கு: இதுவரை நண்பர் ஆயில்யனுக்காகப் பயன்பட்ட “காதல் கசக்குதய்யா” பாடலை இன்னொரு நண்பருக்காக இடம் மாற்றுகின்றோம்.

20 thoughts on ““ஆயில்யன் – அனு” => மணப்பந்தல் காண வாராயோ

 • ஆயிலியன் அங்கிளுக்கு இனிய திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..:D

  //பி.கு: இதுவரை நண்பர் ஆயில்யனுக்காகப் பயன்பட்ட "காதல் கசக்குதய்யா" பாடலை இன்னொரு நண்பருக்காக இடம் மாற்றுகின்றோம். //

  ஓஹோ.. அவருக்கா??..:P

 • தோழர் ஆயில்யன் யாருன்னு தெரியல.. ஆனாலும் என்னோட வாழ்த்துக்கள சொல்லிருங்க..
  சிவா-ல வர்ற "அட மாப்பிள்ளை, சும்மா மொறைக்காத.. மச்சான் சொன்னா கேளு" பாட்டையும் என் சார்புல dedicate பண்ணிருங்க 🙂

 • அண்ணன் ஆயில்ஸுக்கு இனிய திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😀

  //பி.கு: இதுவரை நண்பர் ஆயில்யனுக்காகப் பயன்பட்ட "காதல் கசக்குதய்யா" பாடலை இன்னொரு நண்பருக்காக இடம் மாற்றுகின்றோம். //

  ஐ நோ.. ஐ நோ .. 😛

 • ஆயில்யன்-அனு AA-ஜோடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!:)
  முருகனருளால், நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

 • றேடியோஸ்பதி கா.பி இங்க என்ன செஞ்சிக்கிட்டு இருக்காரு? திருவாரூரில் சவுண்ட் சர்வீஸ் கட்ட நீங்க தானே ஒப்பந்தம்? :))

 • மண நாள் காணும் ஆயில்யன்-அனுவிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்-Arivukkarasu

 • வாழ்த்துகள். ஜூ –> ஜீ ஆகி விட்டது. தமிழில் எழுதியிருந்தால் இத்தவறு நேர்ந்திராது:)

 • ஆயிலியன் அங்கிளை வாழ்த்த வயதில்லை. இருந்தாலும் இதுமாதிரி சமயத்துல வயது வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை.. ஆயில் தம்பதி பதினாறு செல்வங்களும் நாலஞ்சு புள்ள குட்டிங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

 • ஆயிலியன் அங்கிளை வாழ்த்த வயதில்லை. இருந்தாலும் இதுமாதிரி சமயத்துல வயது வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை.. ஆயில் தம்பதி பதினாறு செல்வங்களும் நாலஞ்சு புள்ள குட்டிங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

 • ஆயில்யனின் குதூகலமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

 • Please give me the movie title for the following song also download link
  "வாராய் என் தோழா வாராயோ மணப்பந்தல் காண வாராயோ"

 • "வாராய் என் தோழா வாராயோ மணப்பந்தல் காண வாராயோ"

  அன்புள்ள அண்ணா, இந்த பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தர முடியுமா?

Leave a Reply to K.Arivukkarasu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *