றேடியோஸ்புதிர் 60 – “பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு”


வணக்கம் வணக்கம் வணக்கம், ஒரு சின்ன இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிரோடு வந்திருக்கிறேன். இந்தப் புதிரில் நான் கேட்கப்போவது ஒரு பாடல் குறித்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான முத்துக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான் இந்த முத்து.

பாரதிராஜாவின் ஒரு படம், இந்தப் படத்தின் அறிமுக நாயகிக்கான பாடலை எழுதவேண்டும் என்று ஒரு நாள் இரவு பாரதிராஜாவின் மேலாளர் வடுகநாதன் கவிஞர் முத்துலிங்கத்தைச் சந்தித்து கூடவே அந்தப் பாடலுக்கான மெட்டமைக்கப்பட்ட இசை தாங்கிய ஒலி நாடாவையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார். துரதிஷ்டவசமான வீட்டில் மின்சாரம் இல்லை அன்று. அடுத்த நாள் பாடல் ஒலிப்பதிவு. இந்த நிலையில் மறுநாள் ராஜாவைச் சந்திக்கிறார் முத்துலிங்கம். பாடல் ரெடியா என்று கேட்டபோது நிலமையைச் சொல்லி விளக்கிவிட்டுடு இப்பொழுதே எழுதிவிடுகிறெஎன் என்று சொல்லியவாறே அவர் முன்னால் எழுத ஆரம்பிக்கிறார். முதல் அடியை எழுதி விட்டு பொருத்தமான அடுத்த அடியை எழுதும் போது கவனித்த ராஜா இரண்டாவது அடியை மாற்றிவிட்டு “பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்” என்று எழுதுமாறு சொன்னாராம். அதையே இணைத்துவிட்டு முழுப்பாடலையும் எழுதிமுடித்தார் முத்துலிங்கம். அந்தப் படத்திலேயே வெற்றிபெற்ற பாடலாக இந்தப் பாடலும் அமைந்து விட்டது. அது எந்தப் பாடல் என்பது தான் கேள்வி. பதிலோடு ஓடி வாருங்கள் 😉

இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்

பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
படம்: புது நெல்லு புது நாத்து
அறிமுக நாயகி: சுகன்யா

30 thoughts on “றேடியோஸ்புதிர் 60 – “பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு””

 1. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
  பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
  அப்பப்போ யப்பப்பாஆஆ
  பிப்பீ டும் டும் டு

 2. Anna,

  Puthu Nellu Puthu Naathu – karutha machan, paruthikulle panja vechi vedikka vechan song.

  Urumi ( or is it something else ) which comes in the complete song is something which Maestro can do.

  Post more such puzzles 🙂

  Sudharsan

 3. சேலம் ஆனந்த்

  சரியான பதில் 😉

  இரமேஷ் இராமலிங்கம்

  அதே தான்

  சுதர்சன்

  ஆஹா பின்னீட்டிங் 😉

 4. ’கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்’ from ’புது நெல்லு, புதுநாத்து’ :>

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 5. ஹைய்ய்ய்ய்ய்யா புது நெல்லு புது நாத்து பாஸ் நான் ரொம்ப நாளா எக்சுபெக்குட்டு பண்ணின படமாக்கும்! 🙂

  யேஏஏஏஏஏ மரிக்கொழுந்து என்னம்மா 🙂

 6. மண்வாசனை படப்பாடல் பொத்திவைச்ச மல்லிகை பாடல் என நினைக்கிறேன் சகோதரத்தை காணவில்லை என்று நேற்று நாஞ்சில் மனோவிடம் கேட்டது எட்டிவிட்டதோ!

 7. புதுகைத் தென்றல்

  சரியான பதில் தான் 😉

  சொக்கரே

  அதே

  ஆயில்ஸ்

  சரியான பதில்

  முத்துலெட்சுமி

  இது போனஸ் புதிர் 😉

  நேசன்

  நீங்கள் சொன்ன விடை தவறு 🙁

 8. பாடல் ; கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் 😉
  படம்: புது நெல்லு புது நாத்து
  பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி
  இசை: இளையராஜா

 9. புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வரும் ”கருத்த மச்சான் ” என்ற பாடல் தான் என்று நினைக்கிறேன்.

 10. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்.

  படம் புது நெல்லு புது நாத்து…………..ஜானகியின் குரலுடன் இணைந்து ஒலிக்கும் உருமி மேளம்………சான்ஸே இல்லை……………ராஜா ராஜாதான்……..

  இந்த பாடல் காட்சியில் வரும் ஆறு எங்க ஊர் ஆறு கடனா நதி

 11. "கறுத்த மச்சான்…." — புது நெல்லு புது நாத்து படத்தில் இருந்து 🙂

 12. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
  பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்.

  படம் – புது நெல்லு புது நாத்து.

 13. படம் =புது நெல்லு புது நாத்து

  பாடல் = கருத்த மச்சான்
  கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் இளையராஜாவும்,பாரதிராஜாவும் இணைந்த கடைசி படம் என்று நினைக்கிறன்

 14. அத்திரி, லோகேஷ், ஜீ3, சுந்தரி, குப்பத்து ராசா மகராசன், தங்க்ஸ், முத்துக்குமார்

  அதே தான் 😉

  ஜீ3 அவ்வ்

 15. இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்

  பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
  படம்: புது நெல்லு புது நாத்து
  அறிமுக நாயகி: சுகன்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *