பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி

இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு.

“என் வானிலே ஒரே வெண்ணிலா” செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ

“ஆராணு” பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில்

கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன்.

“இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா” என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று “சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்” என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் திடீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி.

22 thoughts on “பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி

 • ஆஹா எண்ண ஒரு அருமையான உரையாடல் தல!
  நானும் கூடவே இருப்பது போன்ற ஒரு உணர்வு
  மீண்டும் இந்த குரல் திரையில் ஒலிக்க இறைவன்
  அருள் புரிய வேண்டும்……
  பகிர்வுக்கு நன்றிகள் தல!!!!!!!!!!!!!

 • மிக்க நன்றிகள் ப்ரபா… கலக்கல் பேட்டி…
  இனிமேல்தான் கேட்க வேண்டும்…படித்துவிட்டேன் ஆர்வம் தாங்காமல்…ஜென்சியின் பாடலைக் கேட்கவேண்டும்… மிக்க நன்றிகள்…

 • ஜென்சிம்மாவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 😉

  \ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும். \

  தல அதை கேட்டு நாங்களும் விமோசனம் தேடிக்கொண்டோம் தல ;))

 • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  blogpandi

  தமிழ்ப்பறவை 😉

  வடுவூர் குமார்

 • உங்கள் குரலை இப்போதுதான் கேட்கிறேன். பழைய சிலோன் கே.எஸ்.ராஜாவின் ஈழ accent ஞாபகம் வருகிறது.

  ஜென்சி பேட்டி நன்று.

 • ஆனந்த்

  மிக்க நன்றி

  ரவிஷங்கர்

  வருகைக்கு நன்றி

  கணபதிராம்

  மிக்க நன்றி

 • அருமையான கேள்விகள் பிரபா… ஜென்ஸியின் பதிலில் இருந்த நேர்மை அவரது பாடல்களைப் போலவே இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  -வினோ, என்வழி

 • கானா,

  நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒன்று உங்களிடம் கேட்டதாக ஞாபகம்.

  ஜானி படத்தில் "ஒரு இனிய மனது" இரண்டு வெர்ஷன் உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.

  இரண்டயும் ஒரு சேர காட்டுகிறேன் என்றீர்கள். இந்த ஒத்த பாட்டுமட்டுமாவது டவுன்லோடு பண்ணுறமாதிரி குடுத்தா நல்லாயிருக்கும் கானா.

  லேட்டாகும்ன்னா மெயிலாவது பண்ணுங்க சார், நானும் ரொம்ப நாளா காத்துக்கிடக்கேன், ஜென்சி – சுஜாதா வெர்ஷனை கேட்க.

 • பிரபா சார்… அருமையான பேட்டி என் பாசப்பறவைகள் தளத்திலும் ஜென்சி பேட்டி பதிந்துள்ளேன். என்ன நீங்கள் ஒரிஜனல் ட்ராக் பதிவாக போட்டிருக்கிறீகள். எனது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பும் போது அலைபேசியில் பதிந்து அதிகபட்ச விளம்பரங்கள் வராமல் பார்த்து பதிகின்றேன் நேரம் கிடைக்கும் போது சென்று கேளூங்கள். மேலும் உங்கள் கேள்வியில் பல புதிய விசயங்கள் இருக்கின்றன. பகிரிவிற்க்கு நன்றி சார்.

 • அருமையான நேர்காணல் நண்பரே. 70'களில் வானொலிப் பேட்டிகளைக் கேட்டு சிலாகித்த அதே உணர்வை நம் ஜென்சியுடனான கலந்துரையாடல் தந்தது என்பது பூரணமான உண்மை. நன்றி.

Leave a Reply to S Maharajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *