கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு “அபூர்வ சகோதரர்கள்”

இன்று கலைஞானி கமல்ஹாசனின் 56 வது பிறந்த நாள். தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகள் ஒன்றாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் படங்களில் பெரும்பாலானவை அவரின் தனித்துவமான நடிப்பிலும், சிந்தனையிலும் புதிய பரிமாணத்தைத் திரை ரசிகனுக்கு அளித்தவை. தமிழில் இருந்து நேரடிப்படங்களாக மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஓரிரு கன்னடப் படங்கள் என்று சென்ற இடமெல்லாம் அந்தந்தப் பிராந்திய ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்த கலைஞன் இவரைத் தவிர இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கலைஞானிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவரின் “அபூர்வ சகோதரர்கள்” படத்தின் பின்னணி இசையை இங்கே மீள் பதிவாகத் தருகின்றேன்.

அபூர்வ சகோதரர்கள் வெளிவந்த ஆண்டு 1989.
கதை பஞ்சு அருணாசலம். இயக்கம் சிங்கிதம் சீனிவாசராவ்.
படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் ஆகிய கமல் படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருக்கிறார்.
ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் (கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள் அவரின் ஒளிப்பதிவின் ஒரு சாம்பிள்)

முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் “அபூர்வ சகோதரர்கள்” படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.

எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)

எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்)

குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)

அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)

ரூபணியின் அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்

அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் இசை)

அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)

அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)

அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)

அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு

இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது

15 thoughts on “கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு “அபூர்வ சகோதரர்கள்”

  • கமலஹாசன் ஒரு நல்ல நடிகன் என்பதில் மறுப்பில்லை. ஆங்கிலப் படங்களில் இருந்து திருடினார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் அவருடைய பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம்.

    அபூர்வ சகோதரர்கள் படம் மிகச்சிறிய வயதில் வந்தது. அந்தப் படத்தை இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்று வீட்டில் அடம் பிடித்ததும் அது நிறைவேறாமல் போனதும் நினைவிற்கு வருகிறது. அப்பொழுது திரையில் வந்த காட்சிகள் மிகப் புதுமையாக இருந்தன. தொடக்கத்தில் ஸ்ரீவித்யாவின் வாயில் நஞ்சை ஊற்றும் காட்சியின் ஒளியமைப்பு இன்னும் கண்ணுக்குள் உள்ளது. அந்த வயதில் பாடல்கள் அவ்வளவு நன்றாகப் பிடிபடவில்லையென்றாலும் அந்தப் படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் பொழுது இளையராஜாவின் இசைஞாலங்களை வியப்போடு ரசிக்க முடிகிறது. அந்த இசைக்கோலங்களை பிரித்தெடுத்து கொடுத்த உங்களுக்கு நன்றி.

  • அவர் ஒரு சகலகலாவல்லவன். வாழ்க நலமுடன். நல்ல பகர்வு.
    அன்புடன் மங்கை

Leave a Reply to Cable Sankar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *