“ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு


டிசம்பர் 5 இந்த நாளோடு “ஆண்பாவம்”திரைப்படம் வந்து 25 ஆண்டுகளைப் பிடிக்கப் போகின்றது. இந்தப் படம் வந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு விழா ஒன்று ஏற்பாடாகியிருப்பதாகச் செய்தி ஒன்றை எங்கோ படித்தேன். உடனே றேடியோஸ்பதி சார்பில் நாமும் விழா எடுக்கலாமே என்று முன்னர் போட்ட ஆண்பாவம் பின்னணி இசைத் தொகுப்பைத் தூசு தட்டி மேலும் பாடல்களையும் இணைத்து இந்தப் பதிவைத் தருகின்றேன்.

ஒருவன் தன்னிடமிருக்கும் பலம் எது என்பதை உணர்ந்து அதையே தான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் பயன்படுத்திக் கொண்டால் பெருவெற்றியடைவான் என்பதற்கு பாண்டியராஜனின் இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம். தன் குருநாதர் பாக்யராஜின் நகைச்சுவை கலந்த திரைக்கதை என்ற ஆயுதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முழுமையானதொரு முகம் சுழிக்காத குடும்பச் சித்திரமாக ஆண்பாவம் படத்தை அளித்திருக்கின்றார்.


றேடியோஸ்பதியில் பின்னணி இசைத் தொகுப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நண்பர் சி.வி.ஆர் “அந்த ஆண்பாவம் படத்தில் சீதா தண்ணிக்குடம் எடுத்துப் போகும் சீனில் வரும் பிஜிஎம் கொடுங்களேன், ரிங்டோனா பாவிக்கணும்” என்று கேட்கும் வரை இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் அவ்வளவு நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஆனால் பின்னணி இசைப்பிரிப்பைத் தொடங்கிப் பதிவு போட்டு இரண்டு வருடங்களைக் கடந்தும் மீண்டும் மீண்டும் என் பதிவுக்குச் சென்று நானே மீள ஒலிக்கவிட்டுக் கேட்கும் அளவுக்கு இந்த ஆண்பாவம் படத்தின் பின்னணி இசை தேனில் குழைத்த ஒரு கலவை என்று சொல்லலாம், இன்னும் திகட்டவில்லை.


வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.

இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் “கன்னி ராசி” என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பதிவுலகத்தில் கூட பாண்டீஸ் பேமஸ் 😉 பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது. பாண்டியனின் அந்தக் கள்ளமில்லாக் கிராமியச் சிரிப்பை மீண்டும் திரையில் காணும் போது நல்லதொரு கலைஞனைத் தொலைத்த கவலையும் எட்டிப்பார்க்கும்.

இந்த வேளை இதே படத்தை சச்சா ப்யார் என்ற ஹிந்திப்படமாக, ஜீஹீசாவ்லாவை ஹீரோயினாக வைத்து எடுத்த படம் இன்னும் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பது கொசுறுச் செய்தி.


ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.
இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.

தொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

றேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்

ராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்

கனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்

சண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை

சீதா அறிமுகக் காட்சி

சீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி

மாப்பிளையை புடிச்சிருக்கு

பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை

கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி

சீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்

பாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா

சீதாவை தேடி புதுமாப்பிள்ளை வரும் நேரம்

ரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்

ஆண்பாவம் படத்தின் பாடல்கள்

ஏ வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் குந்தணும் – இளையராஜா குழுவினர்

குயிலே குயிலே பூங்குயிலே – மலேசியா வாசுதேவன், சித்ரா

காதல் கசக்குதைய்யா – இளையராஜா

என்னைப் பாடச்சொல்லாதே – ஜானகி

ஒட்டி வந்த சிங்கக்குட்டி குத்துச்சண்டை போடலாமா – கொல்லங்குடி கருப்பாயி

பேராண்டி பேராண்டி பொண்ணு மனம் பாராண்டி – கொல்லங்குடி கருப்பாயி

கூத்து பார்க்க அவரு போனார் தன்னானேனானே – கொல்லங்குடி கருப்பாயி

34 thoughts on ““ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு

 • ஆஹா கலக்கல் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று. ஞானி கலக்கி இருப்பார், காதல் கசக்குதையா என்றைக்கும் ரசிக்கும் பாடல், ஞானியின் குரலும் பாண்டியராஜனின் அசத்தல் நடனமும் சூப்பர்.

  வலையுலக சின்னப் பாண்டியும் பெரிய பாண்டியும் என் இனிய நண்பர்கள் என்பது பெருமைக்குரிய விடயம்.

 • 🙂 ஆஹா மறுபடியும் முதல்லேர்ந்தா [நான் படம் பார்க்க போறதை சொன்னேன்!] 🙂

  என்னோட ரிங்டோன் குயிலேகுயிலேபூங்குயிலே மயிலே மயிலே மயிலே!

  1 பண்ணுங்களேன் டிசம்பர் 5 அன்னிக்கு முழுப்படத்தையும் உங்க பதிவுல போடுங்களேன் !

 • //முரளிகண்ணன் said…

  25 வருஷம் ஆச்சா. இன்னும் மனசில அப்படியே இருக்குது.//

  //

  பாஸ் வருசமானாலும் உங்களுக்கு வயசும் மனசும் இன்னும் அங்கேயே நிக்கிதுல்ல :))))))))) #ச்சும்மாதமாசு

 • படத்தின் நகைச்சுவை காட்சிகளை எந்தளவுக்கு சிலாகிக்கின்றோமோ அதே அளவு படத்தில் நடித்த கதாநாயகிகள் இருவரை பற்றியும் கூறவேண்டும்! அருமையான தேர்வு! [ஹம்ம்ம்ம் முழுமையானதொரு ரசனையினை வெளிப்படுத்த பெரியபாண்டியினால் மட்டுமே முடியும் ஏன்னா படம் வந்தப்ப அவர்தான் கட்டுக்கடங்கா காளையினை போல துள்ளி திரிந்துக்கொண்டிருந்த வாலிப பருவம்! நானெல்லாம் குட்டி கொயந்த தெரியல /புரியல ஃபீலிங்க்ஸ்ஸ்ஸு] :)))

 • வசனத்தை பத்தி சொல்லாம வுட்டுட்டீங்க…..அதுவும் இராமசாமி பேசுற வசனம் எல்லாமே நச்….
  குறிப்பிட்டு சொல்லணும்னா….
  கார்ல வந்தவரோட சண்டை முடுஞதுக்கு அப்புறம் வீட்டுக்கு வருவாரு…அப்ப சின்ன பாண்டியும் இருப்பான்…
  இரா: இவன ஒஙக்ளுக்கு முன்னமே தெரியுமா….?
  வந்த: வர்ற வழியில ரெண்டு எருமைமாடு முட்டுச்சுன்னு சொன்னேன்ல…அதுல ஒரு எருமையே இதுதான்…
  இரா: அப்ப இன்னொரு எருமை…
  சி.பா: அதான் பொன்னு பாக்க போயிருக்குல்ல….
  அப்ப இராமாசாமியோட ரீஆக்ஷ்சன பாக்கணுமே….
  அப்புறம் ரேவதிக்கு பேசும் திறன் போனதுக்கு அப்புறம் இராமசாமி பேசுற வசனம்…
  "எங்க வீட்டுல எத்தனையோ சாமிபடங்க இருக்கு….அதெல்லாம் என்னைக்கவது பேசலைன்னு குப்பையிலையா போடுரோம்…அது மாதிரி நீயும் ஒரு சாமின்னு நெனச்சுக்றோம்…."
  என்றைக்குமே என்னோட லிஸ்டுல…மொத அஞ்சுல இது உண்டு….

 • எத்தனையோ படம் பார்க்க க்யூவில் காத்திருக்கும் வேளையில் ஆண்பாவத்தை இன்னொரு முறை பார்க்க வைத்துவிட்டீரே.. அந்தப் படங்கள் உங்கள்மீது கோபப்படப்போகின்றன.

 • பிரமாதம். ஆண்பாவம் எனக்கும் எனது தந்தைக்கும் மிகவும் பிடித்த படம். இன்னும் நினைவிருக்கு எனது தந்தை பணி நிமித்தமாக தஞ்சையில் தங்கி பணி புரிந்த போது ஒரு நாள் இந்த படத்தை ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போக, படம் மிகவும் பிடித்துவிட்டது, வார முடிவில் சென்னைக்கு வந்த போது படத்தை பற்றி பெருமையாக சொல்ல சொல்ல எங்களுக்கும் பார்க்க ஆசை வர தந்தைக்கும் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம், பிறகென்ன குடும்பத்தோடு ஆண்பாவம் பார்க்க சென்றோம். அப்போது வீடியோ பிரபலம் அடையாத காலம். படம் பார்த்துவிட்டு கேசட்டில் ஆண்பாவம் பாடல் பதிவு செய்து வந்தேன். இன்றும் எனது கைபேசியில் குயிலே குயிலே பாடல் ரிங்டோன் உண்டு.
  என்றும் நினைவில் நிற்கும் படம் கூடவே தந்தையின் நினைவுகளும்.
  முதல் முறை பின்னூட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. திரும்ப திரும்ப கடவுச்சொல் கேட்டு கொண்டே இருந்தது.

 • கார் இடிச்சுருச்சான்னு பார்க்கிற சீன் ,இன்னும் மனசுல நிக்குதுங்க , நல்லா படம் , தொகுப்புக்கு நன்றி

 • 25வது ஆண்டிலும் புத்தம் புது படம் போல இருக்கு….படமும் இசையும் ;))

  ரெண்டு பாண்டியர்களுக்கும் வாழ்த்துக்கள் ;))

  கலக்கல் தல 😉

 • \ஆயில்யன் said…
  படத்தின் நகைச்சுவை காட்சிகளை எந்தளவுக்கு சிலாகிக்கின்றோமோ அதே அளவு படத்தில் நடித்த கதாநாயகிகள் இருவரை பற்றியும் கூறவேண்டும்! அருமையான தேர்வு! [ஹம்ம்ம்ம் முழுமையானதொரு ரசனையினை வெளிப்படுத்த பெரியபாண்டியினால் மட்டுமே முடியும் ஏன்னா படம் வந்தப்ப அவர்தான் கட்டுக்கடங்கா காளையினை போல துள்ளி திரிந்துக்கொண்டிருந்த வாலிப பருவம்! நானெல்லாம் குட்டி கொயந்த தெரியல /புரியல ஃபீலிங்க்ஸ்ஸ்ஸு] :)))

  October 19, 2010 10:24 PM\

  நீங்களே இம்புட்டு சவுண்டுவுட்டா அப்போ நான் எல்லாம் எம்புட்டு கொடுக்கனும் ;))

 • //1 பண்ணுங்களேன் டிசம்பர் 5 அன்னிக்கு முழுப்படத்தையும் உங்க பதிவுல போடுங்களேன் !//

  🙂

  intha pathivE, muzhu padathai, moonu muRai paathathukku samaanam 🙂

  all bcoz of this…//பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை//

 • //ஆண்பாவம் படத்தின் பாடல்கள்//

  ella paattum koduthuttu, raaja-vin vanthanam vanthanam kodukkaleena eppdi? too bad kaa.pi 🙂

  that was the touch of raja, outlining the history of music, in a very very folk way! (entharo mahanubhavulu cine version-nu kooda chollalaam) 🙂

 • சீதாவின் அழகுக்காகவே இரண்டு தடவை இப்படத்தை பார்த்தேன். அந்த அழகிய உருண்டை விழிகள் அப்பப்பப்பா!!!!நல்ல பதிவு பிரபா

  அன்புடன் மங்கை

 • காலம் எவ்வளவு வேகமா போயிருது நேற்றும் எங்கேயோ ஆண்பாவம் ஃபேவரைட் சீன்'னு யாரோ போட்டிருந்த வீடியோ ஒண்ணு பாத்திருந்தேன், நீங்க முதல் போட்டிருக்கிற படம் அந்த சீன்ல இருக்கு. சீதா…அட போங்க பாஸ் 🙂

  பாண்டி பிரதர்ஸ் க்கு பாராட்டுக்கள்

 • இந்த படத்தை பற்றிய தகவல்களை மனதோடு மனோ என்ற நிகழ்ச்சி வழி பாண்டியராஜன் பகிர்ந்து கொண்டார்.
  பிசியாக இருந்த காரணத்தால் ராஜா முதலில் படத்தை மறுத்ததாகவும்,படத்தின் தயாரிப்பாளர் ராஜா இல்லாமல் படத்தை தயாரிக்க
  முடியாது என்று சொல்ல,பாண்டியராஜன் ராஜாவிடம் விஷயத்தை சொல்லி முதலில் படத்தை
  எடுத்து முடித்துவிடுகிறேன் பிறகு நீங்கள் இசையமைத்து கொடுங்கள் என்று சொல்லவும் ராஜாவும் சம்மதிக்க, இருபத்தியாறு
  நாட்களில் படத்தை எடுத்து முடித்து ராஜாவிடம் போட்டுகாட்ட, படத்தை பார்த்த ராஜா மறுநாள் கம்போசிங் வைத்து கொள்ள
  சொல்லி ஒரே நாளில் படத்திற்கான பாடலும் பின்னணி இசையும் அமைத்து கொடுத்ததாக சொன்னார்.

 • வாங்க முரளிக்கண்ணன்

  25 வருஷம் ஆனாலும் இளமையோடு இருக்கும் படமல்லவா 😉

  வாங்கோ வந்தி

  நாமெல்லாம் ஒரே அலைவரிசை தானே 😉

 • சின்னப்பாண்டி

  நீர் கைக்குழந்தையாவே இருந்துட்டு போயிடும் நமக்கென்ன 😉
  முழுப்படத்தைத்தானே நிதமும் பார்க்குறீர்

  வணக்கம் நெருப்புச்சக்கரம்

  வசனம் எல்லாமே நகை முத்துக்கள் தான் அழகாகச் சொன்னீங்க

 • வருகைக்கு நன்றி புனிதா

  வாங்க ராம்சுரேஷ்
  புதுப்படங்கள் கோபித்துக் கொண்டாலும் ஆண்பாவம் பொல்லாதய்யா 🙂

 • +1 படிக்கும் பொது வந்தது. சீதாவுக்காக தான் கிளாஸ் கட் செய்து போனோம். . எவர்க்ரீன் காமெடி மூவி இது. வி.கே.ஆர். ரேவதி போட்டோ இல்லாததுக்கு, வீட்டுல மகாலட்சுமி படம் இருக்கு அதை பார்த்துக்குறேன் அப்படின்னு சொல்லுவார். கிளாஸ் டயலாக் அது. இசைஞானி ராஜ்யம் செய்தார். மறக்க முடியாத ஆள் டைம் மூவி.

 • வணக்கம் நாகராஜ்

  உங்கள் நினைவுகள் இனித்தது

  வருகைக்கு நன்றி ரோகிணிசிவா

  தல கோபி

  நீங்க இன்னும் பொறக்கவே இல்லை, ஒக்கேவா 😉

 • வாங்க தல கே.ஆர்.எஸ்

  வந்தனம் வந்தனம் போட்டாச்சு 😉
  தண்ணீர்க்குடம் இசை உங்களுக்கும் பிடிச்சுதா ஆகா

  புனிதா

  வருகைக்கு நன்றி

  நன்றி நான் ஆதவன் பாஸ், தமிழ்ப்பறவை

 • மங்கை அக்கா

  வருகைக்கு நன்றி

  கறுப்பி

  வாங்கோ 😉

  மணி

  உங்கள் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன, மிக்க நன்றி

  Thameez

  உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்

 • 25 வருஷம் ஆச்சாஆஆஆ!??!!!

  புதுக்கோட்டை ஈனா தியேட்டரில் நேத்து பாத்த மாதிரி இருக்கு!!

  இந்த படம் வந்த சமயம் வகுப்பில் ஒரு மதியம் இடைவேளையில் ”இந்திரன் வந்தும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்” பாடலை பாடிக்கிட்டு இருந்தேன். நான் பாட ஆரமிச்சதும் ரொம்பவே அமைதியா,பவ்யமா எல்லாரும் கேட்டுகிட்டு இருந்தாங்க.நானும் ரொம்ம்ம்ப அமைதியா நம்ம பாட்டை ரசிக்குறானுங்களேன்னு சந்தோசமா பாடிகிட்டு இருந்தேன்.முடிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது பின்னால எங்க வாத்தியார் நின்னுகிட்டு கேட்டுகிட்டு இருந்தாரு 🙂

  எல்லாமே நேத்து நடந்தமாதிரி இருக்கு!!

 • Dear Mr. prabhu,

  Superb. I still remember when I first saw this movie. excellent score by Isaignani. One humble suggestion, if you can share the background score of this movie and others in downloadable format it will be great help for people like me to download and cherish them for our life.

  Regards,
  Venkatesh
  venki.bala@gmail.com

Leave a Reply to ராம்சுரேஷ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *