இளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பின்னணிப் பாடகி சித்ராவின் பிறந்த நாள். ட்விட்டர் மூலம் ஞாபகப்படுத்திய நண்பர் சுரேஷுக்கு நன்றி. பாடகி சித்ராவுக்கு சிறப்பான பதிவு ஒன்று தயாரிக்க அவகாசம் கிட்டவில்லை. ஆனால் அவருக்கு வரமாகக் கிடைத்த ஒரு பாடலை மீண்டும் தந்து வாழ்த்துகின்றேன் உங்களோடு.

இந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டில் பாடகி சித்ரா சிட்னி வந்து இசை மழை பொழிந்த போது சொன்னது.இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

தெலுங்கில் “ஜல்லண்ட” என்றும் தமிழில் “ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்” என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.

அந்த ஆர்மோனிய இசையுடன் சித்ரா பாடும் தெலுங்குப் பாடல் “ஜல்லண்ட”

அதே பாடல் தமிழில் “ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்”

சிறப்புப்பதிவில் போனஸ் பாடலாக றேடியோஸ்பதி நலன்விரும்பி (!) ஆயில்யன் விருப்பமாக, சின்னக் குயில் சித்ரா “பூவே பூச்சூடவா” திரைக்காகப் பாடும் “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா”

16 thoughts on “இளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்”

 1. பிறந்த நாள் ஸ்பெஷல் – சின்ன குயில் பாடும் பாட்ட்டு கேக்குதா போட்டாலும் கூட நாங்கள் இன்னும் வெகுவாக ரசிப்போமாக்கும் ! :)))

  #எனக்கு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச பாட்டு

  #பாட்டை கேட்டாலே உற்சாகம் வந்து தொத்திக்கொள்ளவைக்கும் லிஸ்ட்ல இருக்கே! 🙂

 2. அட சேச்சியும் என்னோட மாசம் தானா…சூப்பரு ;))

  சித்ரா சேச்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

  வழக்கம் போல பாட்டு எல்லாம் கலக்கல் தல…;)

 3. சின்னக் குயிலுக்கு வாழ்த்துக்கள்.

  தெரியாத ஒரு தகவலை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்.. :))

 4. சின்னக்குயிலுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே,.,,
  புதிய சேதியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..
  இனி ‘ஆத்தாடி அம்மாடி’ பாடல் கேட்டாலே தனிக்கவனம் வந்துவிடும்..(மூலம் தெலுங்கெனினும்)

 5. ராஜா ஆர்மோனியம் வாசித்தார் என்ற தகவலுக்கு நன்றி. அந்த இடம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்த இடம். மழை பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டும் , எப்படி பாட வேண்டும் என்று ஒரு இலக்கணம் அமைத்த பாடல் அது. தெலுங்கில் வார்த்தைகளும் பிரமாதம். சித்ராவின் குரலும் பிரமாதம்.

  தங்ஸ் : I have watched Chitra in the Malayalam Idea Star Singer as a judge and she is perfect.

 6. பகிர்வுக்கு நன்றி, கானா சார்.ஆர்மோனிய இசை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *