றேடியோஸ்புதிர் 57 – தியேட்டர் பெயரையே படத்துக்கும் வச்சாச்சு

தெலுங்கில் அதிரடியாய் வந்த திரைப்படங்களில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இந்தப் படத்தின் நாயகனுக்கும் சரி, வில்லனுக்கும் சரி பெரும் திருப்புமுனையாக அமைந்து விட்ட படம் இது. படம் கொடுத்த பெரு வெற்றி அப்படியே இயக்குனருக்கும் பெரும் அங்கீகாரம் கொடுத்து விட்டது. இவர்கள் எல்லோருக்கும் மேல் இந்தப் படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி அடி பின்னிவிட்டார் இசைஞானி. இல்லாவிட்டால் 21 வருஷங்களுக்குப் பின்னர் பின்னணி இசையை ஞாபகம் வைத்து அதை நேயர் விருப்பமாக ஒரு சகோதரி கேட்கும் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதே.

தமிழிலும் இந்தப் படம் மொழி தாவியது. ஆனால் ஏற்கனவே இந்தப் படத்தின் தெலுங்கு மூலப் பெயரில் ஒரு தமிழ்ப்படம் வந்திருந்தது. எனவே ஒரு தியேட்டரின் பெயரே படத்தின் பெயராக வைக்கப்பட்டது.
கல்லூரிக்குள் படிப்பு இருக்கலாம் வன்முறை இருக்கலாமோ? ஆனால் படம் வந்த நேரம் Botany class இற்குக் கட் அடித்து விட்டுத் தியேட்டர் பக்கம் போனவர்களும் உண்டாம் 😉
இதுவரை கேட்டது போதும், எங்கே சமர்த்தா அந்தப் படம் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம் , தெலுங்கு, தமிழ் இரண்டில் ஏதாவது ஒரு தலைப்பு அல்லது இரண்டும் சொன்னால் போனஸ்.

துக்கடாவாக படத்தின் அதிரடி இசை ஒன்றைத் தருகின்றேன், இரண்டு நாட்களுக்குள் மேலும் சில அதிரடி இசைக்குளிகைகள் தொகுப்பாக வரும் 😉

கேட்ட கேள்விக்குச் சரியான பதில்:
தெலுங்கு: ஷிவா
தமிழ்: உதயம்
இயக்கம்: ராம்கோபால்வர்மா
வில்லன்கள்: ரகுவரன், சக்ரவர்த்தி

33 thoughts on “றேடியோஸ்புதிர் 57 – தியேட்டர் பெயரையே படத்துக்கும் வச்சாச்சு”

 1. தெலுங்கில் சிவா, தமிழில் உதயம் 😉

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 2. சொக்கரே

  முதலாவதா வந்து சரியாவும் சொல்லிட்டீங்க 😉

  தல கோபி

  தமிழில் ஒரு படம் பேர் தானே சொன்னேன் 2 பேர் சொல்லியிருக்கீங்க 😉 ஆனால் தமிழ், தெலுங்கு இரண்டும் சரி.

  புனிதா

  அதே தான் , வாழ்த்துக்கள்

 3. உதயம்!

  பெருசு 21 வருசத்துக்கு முந்தின படமெல்லாம் என்னைய மாதிரி சின்ன பசங்களாலல எப்புடி கண்டுபுடிக்கமுடியும் ஈசியா வையுமய்யா!

 4. கரிசல்காரன்

  சரியான பதில் தான் 😉

  ஆயில்ஸ்

  உம்ம ரேஞ்சுக்கு போகணும்னா 50 வருஷ புதிர் போணும், சரியான பதில் தான் 😉

 5. shiva – சுந்தர தெலுங்கு

  உதயம் – செம்மொழியான தமிழ்

  நாங்கள்லாம் யாரு 🙂

  இசைக் கோர்வைக்கு நன்றி

 6. சென்ஷி

  கலக்கிட்டிங்

  அத்திரி

  அதே தான்

  வாங்க ராகின், முதல் தடவையா வந்து செம்மொழியிலும் சரியா சொல்லி விட்டீர்கள்

 7. உதயம்.

  தல,
  பாட்டனின்னு சொல்லி விடையைப் பட்டுன்னு போட்டு உடைச்சிட்டீங்களே. க்ளூ இவ்வளோ சுலபமா குடுக்காதீங்க…வியர்வை, ரத்தம் சிந்தி மூளையைக் கசக்கி கூகிள்ல தேடி கண்டுபிடிச்சி பதில் போடற சந்தோஷமே தனி தான்.
  🙂

 8. கைப்ஸ்

  உங்கள் கோரிக்கையை செவிமடுக்கிறோம் ;0 பதில் சரி என்றும் சொல்லணுமா என்ன

 9. படத்தின் பெயன் (தமிழ்) – உதயம்
  (தெலுங்கில்) – சிவா
  ஹிந்தியிலும் ”சிவா” தான்!!

  நடிகர் : ஹீரோ – நாகார்ஜூனா
  வில்லன் : ரகுவரன்.

 10. சிவாவுக்கும் பவானிக்கும் சண்டை உதயம் ஆகுமே அந்தப்படம்தானே? எனக்கு இருக்கும் காம்ப்ளக்ஸில் சந்திரனையும் சூரியனையும் வேண்டினாலும் அந்த தியேட்டர் பேரு ஞாபகம் வரமாட்டேங்குது :-))

 11. ஹலோ கானா சார், படம் உதயம். தெலுங்கில் சிவா? ரகுவரனின் பவானி கேரக்டரை மறக்க முடியாது. அது போலவே அமலாவையும் 🙂 இளையராஜாவின் இசை அதகளம்.

 12. G3

  பின்னீட்டிங்

  மீனாட்சி சுந்தரம்

  அதே தான் 😉

  தமிழ்ப்பறவை

  இரண்டுமே சரி

  அணிமா

  மேலதிகமாகச் சொன்னது எல்லாம் சேர்த்து சரியான பதில் தான்

 13. செந்தில்குமார் வாசுதேவன்

  விடை கொடுத்தால் வடையா 😉 ஆனா விடை சரி

  அநாமோதய நண்பரே

  சரியான பதில்

  ராம்சுரேஷ்

  இந்தக் குசும்புதானே 😉 கலக்கிட்டீங்

  மகராஜன்

  சரியான பதில் தான்

  சுப்பராமன்

  அதே அதே 😉

  அருண்மொழிவர்மன்

  முழுமையும் சரியான விடைகள்

 14. கேபிள் சங்கர்

  அதே தான் 😉

  கலைக்கோவரே

  கலக்கீட்டிங்

  அரவிந்த்

  இரண்டும் சரி

  சின்னப்பயல்

  சரியான பதில் தான்

 15. புதிரின் விடை இது தான்
  தெலுங்கு: ஷிவா
  தமிழ்: உதயம்
  இயக்கம்: ராம்கோபால்வர்மா
  வில்லன்கள்: ரகுவரன், சக்ரவர்த்தி

  கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

 16. இந்தப் படத்தை பார்த்துட்டு கையில வளையம் மாட்டிட்டு ஒரு 6 மாசம் திரிந்தது எல்லாம் இப்போ நினைச்சா சிரிப்பா வருது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *