றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து

அந்தப் பெரிய நடிகரின் தீராத ஆசை குறித்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று. அந்த ஆசையை நடிகரின் குருநாதரே தயாரித்து இன்னொரு இயக்குனரை இயக்க வைத்து குறித்த நடிகரின் இலட்சிய பாத்திரத்தில் நடிக்க வைத்து மனம் நிறைந்ததே மிச்சம் கல்லா நிறையவில்லை.

மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். இயக்குனர் சிகரம் தயாரிப்பு, அதே நடிகர் நடிப்பு, இயக்கம் கூட அதே முந்திய இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த சிகர இயக்குனர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாள சிகரத்தின் நெஞ்சையும் கல்லாவையும் நிறைத்தது. அந்தப் பாடல்கள் வந்த படம் என்னவென்பது தான் கேள்வியே 😉

தந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா….

சரியான விடை இது தான்

அந்த தயாரிப்பாளர் – இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
நடிகர்: ரஜினிகாந்த்
இலட்சிய வேடம் பூண்ட படம்:
ஸ்ரீ ராகவேந்திரர்
இயக்குனர்: எஸ்.பி.முத்துராமன்
வெற்றிகண்ட மசாலாப்படம்: வேலைக்காரன்

போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

29 thoughts on “றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து

 • nadigar – rajinikanth
  iyakkunar thayarippalar – K.Balachandar
  Iyarkunar – S.P.Muthuranam
  Latchiyap paathiram padam – Sri Raghavendra

  andha innoru padam – velaikaram (remake of some hindhi movie)

 • தோட்டத்தில பாத்திகட்டி பார்த்திருக்கேன்பார்த்திருக்கேன்……….. எப்பூடி …..?

 • அரன்

  பின்னீட்டிங்

  ஜி.ரா

  நீண்ட நாளைக்குப் பின் வந்து கலக்கீட்டிங்க 😉

 • உண்மைத்தமிழன் அண்ணாச்சி

  சரியான பதில் தான்

  நவீன்

  கேட்ட கேள்வி அந்த மசாலாப்படத்தின் பெயர் , நீங்க சொன்னது தோல்வி கண்ட படம்.

 • மசாலா படம் : வேலைக்காரன்
  தயாரிப்பாளர் : முத்துராமன்

  தோல்வி படம் : ஸ்ரீ ராகவேந்திரா
  பெரிய நடிகர் : “சூப்பர் ஸ்டார்”

 • ரஜினி
  ராஜவேந்திரர்
  ஸ்ரீராகவேந்திரா
  கே. பாலச்சந்தர்
  எஸ். பி. முத்துராமன்
  வேலைக்காரன்

  எனக்குத் தகவல் புதுசு, க்ளூக்களை வெச்சுக் கண்டுபிடிச்சேன், சரியா? 😉

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • சூப்பர் ஸ்டார் படத்துக்கே புதிரா??

  நாங்கெல்லாம் ”தலைவர்” படத்த கரைச்சி குடித்தவர்கள் பாஸ்!!!!

  எங்களுக்கேவா???

 • அணிமா

  நீங்க பெரிய ஆளுதான் ஒத்துக்கிறேன் 😉

  சொக்கரே

  பின்னீட்டிங்க அதே தான்

 • என் தலைவரின்
  "வேலைக்காரன்"
  தயாரிப்பு ;கே பாலசந்தர்
  இயக்கம் : முத்துராமன்

  சரியா தல?

 • //தந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா….//

  காபி அண்ணாச்சி!
  இப்பிடி பிட்டு எடுத்துத் தாரது, மெட்டு எடுத்துத் தாரது – இதெல்லாஞ் செல்லாது! செல்லாது! 🙂
  அப்பறம் தோட்டத்தில் பாத்தி கட்டாம, றேடியோஸ்பதி-ல பாத்தி கட்டீருவோம்! 🙂

 • மனம் நிறைஞ்சி கல்லா நிறையாத படம் = ஸ்ரீ ராகவேந்திரா!
  மனம் நிறைஞ்சி கல்லா நிறைஞ்ச படம் = வேலைக்காரன்!

  ரெண்டுத்தலயும் பாலச்சந்தர் தயாரிப்பாளராப் போயிட்டாரு! எஸ்.பி.முத்துராமன் இயக்குனராப் போயிட்டாரு!

  முதல் படத்தில் கல்லா நெறைஞ்சுதோ இல்லையோ, இளையராஜா இசை ரெண்டு்த்துலயுமே நெறைஞ்சி தான் இருக்கும்!

 • மு.மேத்தா கலக்கல்ஸ் பாட்டு ஒன்னு ரெண்டாம் படத்துல = மாமனுக்கு மயிலாப்பூரு தான்! மலேசியா வாசுதேவன் பாடி இருப்பாரு! சிலோன் மனோகர் மெட்டுல ஆரம்பிக்கறாப் போல இருக்கும்! 🙂

  முதல் படத்தில் வரும் பாட்டை, இன்னிக்கே கண்ணன் பாட்டில் போடுறேன்! ராகவன் பொறந்த நாளும் அதுவுமா! 🙂

  ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"!
  தேடினேன் தேவதேவா – தாமரைப் பாதமே!

 • மகராஜன்,

  உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே 😉

  இளா

  லேட்டா வந்தாலும் சரியா தான் வந்திருக்கீங்க

  கலைக்கோவரே

  பாட்டாவே படிச்சிட்டீங்களே

  சரவணகுமாரன்

  அதான் பதில்

 • சரியான விடை இது தான்

  அந்த தயாரிப்பாளர் – இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
  நடிகர்: ரஜினிகாந்த்
  இலட்சிய வேடம் பூண்ட படம்:
  ஸ்ரீ ராகவேந்திரர்
  இயக்குனர்: எஸ்.பி.முத்துராமன்
  வெற்றிகண்ட மசாலாப்படம்: வேலைக்காரன்

  போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

 • //கே.ஆர்.எஸ் சுவாமிகள்//

  அதென்ன ஜாமிகள், பூமிகா-ன்னுகிட்டு? பேரை மட்டும் சொல்லுங்கோ பிரபா! 🙂

  //பின்னிட்டேள்//

  பாஷையே சரியில்லை! 🙂
  நான் ஒரு கூடையும் பின்னலையே! கோபிகள் பின்னலைக் கூடப் பின்னலை! 🙂

 • //andha innoru padam – velaikaram (remake of some hindhi movie)//

  நமக் ஹலால்; அமிதாப்-பர்வீன் பாபி நடிச்சது!
  I can talk English, walk English, laugh English-டயலாக்கை அமிதாப்பும் பேசுவாரு 🙂

 • கொஞ்சம் வேலையாக போயிட்டேன் அதுக்குள்ள கேள்வி கேட்டு பதிலும் போட்டாச்சா…ரைட்டு ரைட்டு ;))

 • வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *