என்றோ கேட்ட இதமான ராகங்கள்

என்றோ ஒரு நாள் கேட்டு ரசித்த பாடலை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு தடவை எதிர்பாராதவிதமாகக் கேட்கும் போது அதில் பெறும் சுகமே தனி தான். அந்த வகையில் இன்று நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்கள் மூன்றைத் தருகின்றேன்.

“திருத்தேரில் வரும் சிலையோ சிலைபூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலைமலரோ மணியோ நிலவோ நிலவொளியோ எனும் சுகம் தரும் திருத்தேரில் வரும் சிலையோ” இந்த இனிமையான பாடல் கே.ஆர்.விஜயா தயாரித்த “நான் வாழ வைப்பேன்” திரையில் மலர்ந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும், பி.சுசீலாவும் பாடும் இந்தப் பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் முதல் அடிகள் ஓ என்ற சொற்கட்டோடு போகும். பாடல் முழுவதும் ஐம்பதுகளில் கேட்ட பாடல்களின் வரியமைப்பை ஒத்தது போல அமைக்கப்பட்டிருக்கும். பாடலை எழுதியவர் கூட திரையிசைக் கவிதைகளில் பழுத்த பழம் கவிஞர் கண்ணதாசனாச்சே. இளையராஜாவின் ஆரம்ப காலப்பாடல்கள் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் பாணியின் சாயலில் இருப்பது போல ஒரு பிரமை இருக்கும். இந்தப் பாடலில் தபேலாவின் ரிதம் அட்சரசுத்தமாக எம்.எஸ்.வி இன் பல பாடல்களில் இருக்கு. பாடலில் ராஜாவின் தனித்துவமுத்திரையாக கிட்டார் இசை அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

“அடுத்தாத்து ஆல்பட்” பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் “இதயமே…. நாளும் நாளும் காதல் பேச வா….” இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

“ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்” இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், உறவாடும் நெஞ்சம் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது. இளையராஜா தன் ஆரம்பகாலத்தில் அவசரமாக படங்களை ஒப்புக்கொண்டு சூடு போட்டுக் கொண்ட அனுபவம் இந்தப் படத்தையும் சேர்த்து ஒரு பட்டியல் இருக்கு. ராஜாவின் அழகான மெட்டும், இசையும் இப்பாடலை இன்னொரு தனித்துவமான கீதமாகக் காட்டினாலும் படம் பிரபலமில்லாத வகையில் பாடலின் உழைப்பும் வீணாகி விட்டது. ஆனால் வருஷங்கள் பல கடந்தும் இன்றும் கேட்க இதமான ராகம் இது.

33 thoughts on “என்றோ கேட்ட இதமான ராகங்கள்

 • //அடுத்தாத்து ஆல்பட்" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது///

  ஊருக்கு தெரியாத விசயம் உமக்கு மட்டும் ……

  நீர் ஒரு ப்ளாக்கர் பாட்டு கோவிந்தனய்யா ! – பிலிம்நீயுஸ் ஆனந்தனுக்கு ஆப்போசிட்டு :))))

 • //கலக்ஷன்ஸ்///

  எச்சுஸ்மீ பாஸ் இதுல கல” “ன்ஸ் நடுவுல ஒரு வார்த்தை வருதே அதை எப்படி டைப் செஞ்சீங்க ? எங்களுக்கெல்லாம் டைப்புனா கலெக்‌ஷன்ஸ்ன்னுத்தான் வருது :((

 • நான் வாழ‌வைப்பேன் ப‌ட‌ பாட‌ல் என‌க்கும் பிடித்த‌ பாட‌ல்க‌ளில் ஒன்று அதே போல் ப‌ட்டாக்க‌த்தி பைர‌வ‌ன் ப‌ட‌த்தில் "எங்க‌ங்கோ செல்லும்" பாட‌லும் அருமையாக‌ இருக்கும்.இந்த‌ இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் ஊத்திக்கிட்டாலும் பாட‌ல்க‌ள் அருமையாக‌வே அமைந்துவிட்டிருந்த‌து.

 • அடுத்தாத்து ஆல்பட் நான் சிறுவனாக இருந்த போது பார்த்ததாக ஞாபகம். இதில் வருகின்ற மலேசியாவாசுதேவனின் சோகம் கலந்த தத்துவம் நிறைந்த பாடலான ‘சொந்தங்களே சொர்க்கங்களே சோகம் என்ன சொல்லுங்களே… எனும் பாடல் என் அம்மாவுக்குப் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை இதயமே பாடலை விட இந்த மலேசியாவாசுதேவனின் பாடல் நன்றாகப் பிடிக்கும்.

  பகிர்வுக்கு நன்றிகள் நண்பா.

 • முதல் ரெண்டு பாட்டையும் ரொம்ப நாள் கழிச்சு கேட்கிறேன் பாஸ்… கடைசி பாட்டு நினைவில் இல்லை.. பகிர்வுக்கு நன்றி!

 • பாஸ் 3ம் சூப்பர் பாட்டு.

  அடுதாத்து ஆல்பர் படம் ரொம்ப நல்லா இருக்கும். ஊர்வசி, பிரபு, தேங்காய் சீனிவாசன், செந்தாமரைன்னு நடிப்பு மன்னர்கள் கலக்கியிருந்த படம்.

 • நல்ல பாடல் தொகுப்பு அண்ணா…அதிலயும் அந்த முதல் பாட்டில கண்ணதாசனின் பாடல் வரிகள் கூட நல்லாயிருக்கும் ….

 • வடுவூர் குமார்

  எங்கெங்கோ செல்லும் அருமையான பாடல் தான்

  வருகைக்கு நன்றி கமல்

  வருகைக்கு நன்றி தமிழ்ப்பிரியன்

  மிக்க நன்றி பத்மா

 • "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்" இந்த பாடல்தான் spb ராஜாவின் இசையில் பாடிய முதல் பாடல்..
  \என்றோ கேட்ட இதமான ராகங்கள்//
  இன்றும் நினைவில் நிற்க்கும் சுகமான கீதங்கள் ..

 • //"ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்" //

  beautiful song.

  my all time favorite is 'ஒரே நாள் உனை நான்'

 • இப்படி எல்லாம் கூட படமும் பாட்டும் வந்திருக்கா!!! ;)))

  இப்பதான் முதல் முதலில் கேட்குகிறேன் நன்றி தல 😉

 • முத்துலெட்சுமி, துபாய் ராஜா, புதுகைத் தென்றல், ரதாருகாசினி

  மிக்க நன்றி

  மயில்ராவணன்

  உங்களையும் கேபிளையும் சிட்னி வரவேற்கின்றது

  மணி

  இன்று தான் அந்தத் தகவல் தெரியும் மிக்க நன்றி

  ரிஷான், சர்வேசன், மகராஜன், மலர், தல கோபி

  மிக்க நன்றி

  வாய்ப்பாடி குமார்

  சில சிக்கல்களால் டவுண்லோட் லிங் கொடுக்கப்படவில்லை 😉

  பனித்துளி சங்கர் மிக்க நன்றி

 • அன்புடன் கானா, உறவாடும் நெஞசம் படப்பாடலை வலையில் தேடியபோது சீன தமிழ் வனொலியில் கிடைத்தது. ஒரு காதலின் நினைவுகளோடு!!! மீண்டும் கண்ணீருடன். i am sure Kaana you like tourcharing people but diffrent way. hear is the chineese radio link. very intersting annoncement. please listen. http://tamil.cri.cn/1/2007/01/15/61@47094.htm
  நன்றிகள்.
  லிங்கம்.

  உன்னிடம் நான் கண்ட
  பெருமைகள் பல உண்டு
  கோபம் வேதம் மாறாதோ
  மாறும் நன்னாள்
  என்னால் காண்பேனோ
  புன்னகையாலே என்னை மாற்று
  பொன்னழகே நீ பூங்காற்று

 • இதயமே பாட்டை ஒரு இருபது முறை கேட்டுவிட்டேன் இன்று! சிறு வயதில் கேட்ட நியாபகம் அனால் இப்போது தான் நுணுக்கமாக ரசிக்க முடிந்தது.

  //இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் //
  இப்படி "Intricate Percussion Arrangement " மேஸ்ட்ரோ பாடல்களில் தான் காண முடியும். பாடலில் வயலின் கோரசும் மிக அருமை. இன்னும் எத்தனை ராஜா பாடல்கள் இந்த மாதிரி ஒளிஞ்சிருக்கோ! ஒரு ஆயுசு பத்தாது போல இருக்கு…

  நன்றி பிரபா!

 • மிக்க நன்றி சின்ன அம்மிணி

  அன்பின் லிங்கம்

  அரிய இணைப்புக்கு நன்றி, உங்களை இவ்வளவு தூரம் இந்தப் பாடல் பாதித்திருக்கின்றதென்றால் ராஜாவின் இசையின் மகத்துவத்தை என்னவென்பது

  வணக்கம் மீனாட்சி சுந்தரம்

  நீங்க சொன்னது போல ராஜாவின் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஓராயிரம் மந்திரக்கூடு ஒளிந்திருக்கும்.

 • தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  http://www.bogy.in

 • ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் — இந்த பாடலை கேக்க குடுத்தமைக்கு மிக்க நன்றி பிரபா

  இன்று மதியம் முழுவதும் தொடர் ஓட்டமாக எனது கணினியில் கேட்டுக்கொண்டு இருந்தேன்.ஏனோ சந்தோசமும் கொஞ்சம் வருத்தமுமாக ஒரு உணர்வை தூண்டி கொண்டே இருக்கிறது இந்த பாடல்.சொல்ல தெரியவில்லை .

  மிக்க நன்றி.

 • பிரபா சார்… இளையராஜா இசையில் எஸ்.பி.பியின் முதல் பாடல் எது? ஒரு நாள் உன்னோடு ஒரு நாள், முதல் முதலாக, பாலூட்டி வளர்த்த கிளியில் ஒரு பாடல். எதுன்னு இணையதள அன்பர்கள் கேட்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள் எந்த பாடல் என்று?

 • ரவி சார் பாலூட்டி வளர்த்த கிளியில் நான் பேச வந்தேன் உறவாடும் நெஞ்சம் படத்தில் ஒரு நாள் இரு பாடல்களும் சம காலத்தில் வந்தவை எனவே எது முதலில் எனச் சரிவரத் தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *