றேடியோஸ்புதிர் 53 – நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு

ஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி பின்னர் இசையமைக்கும் போது உயிர்கொடுக்கும் மந்திரவித்தைக்காரன் எங்கள் இசைஞானி என்று சொல்லவா வேண்டும்.
அவரோ இயக்குனர்களில் எவரெஸ்ட், நாயகனோ புதுமையைத் தேடித் தீர்ப்போம் வா என்னும் ஜாதி. இந்தக் கூட்டணியில் வந்ததொரு படம். தெலுங்கில் அதே இயக்குனர் எடுத்துப் புகழ் மட்டும் கொடுத்தது கல்லாவை நிரப்பவில்லை. ஆனாலும் வீம்பாக தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார்.

படத்தின் நாயகியோ லலிதா ராகத்தில் அமைந்த பெயர். ஆனால் நாயகனைச் சீண்ட எ.கே.மலம் என்று தன்னை அடையாளப்படுத்துவாள். பொய் அவிழ்ந்து உண்மை தெரியும் அந்த நேரம் நாயகி லலிதாவுக்கும் நாயகன் சத்தியமூர்த்திக்கும் காதல் வரும் காட்சி. காதல் உணர்வுகளுக்கு மெட்டமைக்க யாருமே சீண்டாத லலிதா ராகத்தை எடுத்தார் இசைஞானி போட்டார் ஒரு மெட்டு. எல்லோர் இதழும் உச்சரித்தது அந்த லலிதா ராக மெட்டை. இதோ அந்த இசைக்கலவையை வித்துவான் கணேஷ் இசைக்கும் வீடியோ துண்டத்தை ஒலிப்பதிவாக்கித் தந்திருக்கின்றேன். கண்டுபிடியுங்களேன் அந்த லலிதா ராகத்தில் வந்த பாட்டை.

சரியான பதில்:

இதழில் கதை எழுதும் நேரமிது
படம் : உன்னால் முடியும் தம்பி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்

32 thoughts on “றேடியோஸ்புதிர் 53 – நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு

 • தமிழில் ’உன்னால் முடியும் தம்பி’ தெலுங்கில் ’ருத்ரவீணா’ – தமிழில் கமல் தெலுங்கில் சிரஞ்சீவி – தமிழில் ‘இதழில் கதை எழுதும் நேரம் இது’ தெலுங்கில் ‘லலித ப்ரிய கமலம்’ 😉

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார். //

  உன்னால் முடியும் தம்பி

  பாட்டு செம செம செம ஃபேமஸான

  இதழில் கதை எழுதும் நேரமிது
  இன்பங்கள் அழைக்குது ஆ
  மனதில் சுகம் மலரும் மாலையிது
  மான் விழி மயங்குது ஆ

  இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
  இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
  இரு கரம் துடிக்குது தனிமையும்
  நெருங்கிட இனிமையும் பிறக்குது
  (இதழில்..)

  காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
  ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
  நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
  நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
  இனிய பருவமுள்ள இளங்குயிலே
  ஏன் இன்னும் தாமதம்
  மன்மதக் காவியம் என்னுடன் எழுத

  நானும் எழுதிட இளமையும் துடிக்குது
  நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
  ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
  ஏக்க தனிந்திட ஒரு முறை தழுவடி
  காலம் வரும் வரை பொருத்திருந்தால்
  கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
  காலம் என்றைக்குக் கனிந்திருமோ
  காலை மனம் அதுவரை பொருத்திடுமோ
  மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
  தேகம் இது விருதுகள் படைத்திடும்
  (இதழில்..)

  தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
  கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
  பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
  மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
  அழகாஇச் சுமந்து வரும் அழகரசி
  ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
  சுந்தர நிலவோ

  நாளும் நிலவது தேயுது மறையுது
  நங்கை முகமென யாரடைச் சொன்னது
  மங்கை உன் பதில் மனதினைக் கவருது
  மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
  காமன் கனைகளைத் தடுத்திடவே
  காதல் மயில் துணை என வருகிறது
  மையல் தந்திடும் வார்த்தைகளே
  மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
  மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
  ஜீவ நதி அருகினில் இருக்குது
  (இதழில்..)

 • சொக்கர்

  பின்னீட்டிங்

  அவ்வ் சின்னப்பாண்டி பாட்டாவே படிச்சிட்டீரே

  புதுகைத் தென்றல்

  தெலுங்குப் பாட்டும் அத்துப்படி போல 😉

 • நாளும் நிலவது தேயுது வளருது
  நங்கை முகமென யாரதை சொன்னது 😉

  என்ன பாஸ் இம்புட்டு சிம்பிளாவா ?

  இதழில் கதை எழுதும் நேரமிது..

 • அப்துல்லா

  இந்த ரவுண்டில் சேர்க்கப்படுகிறீர்கள் 😉

  ஜீவ்ஸ்

  உமக்கு இதெல்லாம் ஜீஜீபி தானே 😉

 • தமிழ்ப்பிரியன்

  அதே தான் 😉

  பாசமலர்

  நீண்ட நாள் கழிச்சு வந்திருக்கிறீர்கள், சரியான பதிலோடு

  நிஜம்ஸ்

  ஆங்கிலத்தில் எழுதினாலும் சரியான பதில் தான் 😉

 • உன்னால் முடியும் தம்பி 😉

  தெலுங்கில் ருத்ரா வீணை…தெய்வத்துக்கு விருது வாங்கி கொடுத்த படம் 😉

  சீதா கலைஞானி கூட எல்லாம் நடிச்சிருக்காருன்னு அப்பதான் தெரியும் ;))

 • இதழில் கதை எழுதும் நேரமிது..
  வர வர நீங்க ரொம்ப கஸ்டமா கேள்வி கேட்கறீங்க?

 • நிறைய க்ளு! எனக்கே தெரிஞ்சுடுச்சே!

  இதழில் கவி எழுதும் நேரம் இது – உன்னாம் முடியும் தம்ப்பீ!

  டைனோ

 • மிக்க நன்றி துபாய் ராஜ்

  சுந்தரி, தல கோபி, வெயிலான்

  சரியான பதில் தான்

  ஆளவந்தான்

  ஒரு வார்த்தை பிழையா போட்டுட்டீங்க 😉

  G3

  அதே தானெ

  சுப்பராமன்

  😉 குசும்பு, சரியான பதில்

  டைனோ

  😉 அதே தான்

 • அட அன்றைக்குத்தானே கதைத்தோம்! 🙂
  தெலுங்கில் சிரஞ்சீவியும் சோபனாவும் எண்டு நினைக்கிறேன் – பாட்டு, லலித பிரிய கமலம் என்று தொடங்கும்.

 • கறுப்பி

  அதே தான் 😉

  சரவணன்

  படமே காட்டிக்கொடுத்து விட்டதா :0

 • உன்னால் முடியும் தம்பி. இதழில் கதை எழுதும் நேரமிது..
  கொஞ்சம் கஷ்டமா குடுங்க மாம்ஸ், உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்

 • படம் :உன்னால் முடியும் தம்பி
  பாடல் :இதழில் கதை எழுதும் நேரம் இது

  சரியாய் தல!

 • சரியான பதில்:

  இதழில் கதை எழுதும் நேரமிது
  படம் : உன்னால் முடியும் தம்பி
  இயக்கம்: கே.பாலசந்தர்
  நடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்

 • அண்ணா! உங்க புதிர் எப்பவுமே நான் வாசிக்க முதலே விடுபட்டுபோயிடுது….ஆனா இந்தப்பாட்டுக்கு அந்த ஒலிப்பதிவுத்துண்டம் ஒண்டே போதுமே கண்டுபிடிக்க….;)

 • வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  Visit our website for more information http://www.thalaivan.com

Leave a Reply to G3 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *