எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் – ஒலிச்சித்திரம்

தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த, ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் நாளில் இருந்து தொடங்குகின்றது.

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட இவர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டில் பிறந்து நம்பர் 1, 1959 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர்.
சரஸ்வதியின் அருட்கடாட்சத்தினால் தான் கொண்ட பாடற் திறனால் நாடக நடிகனாக உருவாகி, திரையுலகில் பிரவேசித்த இவர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனி அத்தியாயத்தை ஏற்படுத்திச் சென்றவர்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தன் பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவர். அந்தப் புகழை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் எடுத்துச் சென்று கொண்டு வந்திருக்கின்றது அவரின் இறவா வரம் கொண்ட பாடல்கள்.

அந்த வகையில் தினமணி இதழில் இரா.செழியன் எழுதிய “ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்! ” என்ற கட்டுரையை ஒலிச்சித்திரமாக்கி அவுஸ்திரேலியாவின் பண்பலை வானொலியான “தமிழ் முழக்கம்” வானொலியில் வழங்கியிருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.

அடுத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய முத்தான சில பாடல்கள் செவிக்கினிமை தர

ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து “மன்மத லீலையை வென்றார் உண்டோ”

சிவகவி திரைப்படத்தில் இருந்து “கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே”

ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து “கிருஷ்ணா முகுந்தா முராரே’

சிவகவி திரைப்படத்தில் இருந்து “சொப்பன வாழ்வில்”

திருநீலகண்டர் திரைப்படத்தில் இருந்து “தீன கருணாகரனே”

சிவகவி திரைப்படத்தில் இருந்து “வதனமே சந்த்ரவிம்பமோ”

8 thoughts on “எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் – ஒலிச்சித்திரம்

 • அதிகம் கேட்டு ரசித்த பாடல்கள் !

  மீண்டும் ஒருங்கே கேட்டு ரசிக்க வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகள்!

 • //"கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே"//

  இந்த ஒரு பாடலை தவிர மற்ற
  பாடல்கள் நெறைய தடவை கேட்ட பாடல்கள்

  மறக்க (கேட்க)முடியாத பாடலை மீட்டு தந்தமைக்கு நன்றி தல..

 • கிடைப்பதற்கு அரிதான தொகுப்பு …தொகுத்து தந்ததுக்கு நன்றிகள் அண்ணா.இந்தப்பாட்டெல்லாம் பெரிசா கேட்டதில்லை….இருந்தாலும் இனிய பாடல்கள். குறிப்பா "கிருஸ்ணா முகுந்தா…","சொப்பன வாழ்வில் …." பாட்டுகள் நல்லாயிருக்கு….

 • பிரபா!
  இலங்கையில் கலாரா பரவியபோது (வருடம் நினைவில்லை)யாழ்பாணத்துடன்,வெளிமாகாணத் தொடர்பு துண்டித்தபோது, புதிய படச்சுருள் வராததால் யாழ் வின்சரில்
  தங்களிடம் சொந்தமாக இருந்த பழைய படச் சுருள்களைத் திரையிட்டபோது, சிவகவி, ஹரிதாஸ் பார்த்துரசித்தேன்.
  அன்று அரங்கில் என் பயதையொட்டியோர் எவருமே இல்லை. சுருட்டுப் பத்தவைத்துக் கொண்டு பார்ப்பவர்களே பலர்.
  அதை மறக்கமுடியாது.
  சிவகவியில் இடம்பெற்ற 'அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்'
  மிக உருக்கமான பாடல்.
  இப்பாடல்களில் சில யூருயூப்பில் பார்த்து மகிழ்வேன்.
  திருநீலகண்டரில் இடம் பெற்ற ' மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் என்ன' மிக இனிய பொருட்சுவை மிக்க பாடல்.
  இவருக்கு பாபநாசம் சிவன் பாட்டெழுத, யீ.ராமநாதன் பெரும்பான்மையான படத்துக்கு இசையமைத்தார்.
  உண்மையான தமிழ் சுப்பர் ஸ்ரார் இவரே!
  நூற்றாண்டுத் தொகுப்பு வழமைபோல் அருமை.

 • வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன், மகராஜன், தாருகாசினி, கார்த்திகேயன்

  யோகன் அண்ணா

  பழைய நினைவுகளை ரசித்தேன்

  தல கோபி, M.S.E.R.K.

  மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *