றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்


வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.

இந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக “கட்டிய” படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் 😉

சரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).

சரியான பதில்:
படம்: சின்ன வீடு
நடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)

போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி 😉

24 thoughts on “றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *