றேடியோஸ்புதிர் 48 – யாரவர்….யாரவர்?

கடந்த ரேடியோஸ்புதிர் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நண்பர்கள் பலர் சிக் லீவ் எடுத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு களம் இறங்குகின்றேன்.

ஒரு ஹிந்திப் பிரபலம் தான் சேமித்த காசையெல்லாம் கரைக்கவேண்டும் என்ற விதிப்பயன் காரணமாக சினிமாப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஹிந்தி, தமிழ் என்று படங்களைத் தயாரித்து சேமித்த காசையெல்லாம் கரைத்தார். அப்படியாக அவர் தயாரித்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இயக்கம் பிரபல விளம்பர இரட்டை இயக்குனர்கள். ராசியில்லாத அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகனோடு அன்றைய ராசியில்லாத நாயகனும் நடித்திருந்தார். அந்த ராசியில்லா நாயகன் படத்திலே ஆமையை நண்பனாக “இமையவர்மன்” என்று பெயர் சூட்டி தன் காதலை எல்லாம் சொல்வாரே.

புதிரில் சொன்ன விஷயங்களை வைத்து படத்தையோ அல்லது அந்த இசையமைப்பாளரையோ ஊகிக்க முடிகிறதா? இல்லாவிட்டால் இந்த ஒலித்துண்டத்தையாவது கேட்டுப் பாருங்களேன் கண்டுபிடித்தால் உற்சாகம் தான் 😉

Get this widget | Track details | eSnips Social DNA

கேட்ட கேள்விக்கான சரியான பதில்

படம்: உல்லாசம்

நடிகர்கள்: அஜித், விக்ரம்

தயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்

இசை: கார்த்திக் ராஜா

இயக்கம்: ஜேடி – ஜெரி

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

32 thoughts on “றேடியோஸ்புதிர் 48 – யாரவர்….யாரவர்?

 • ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா…. முடியலை 🙂

  இதுக்கு நீங்க கஷ்டமாவே கேட்டிருக்கலாம். உல்லாசம்

 • ஹிந்திப் பிரபலம் – அமிதாப் பச்சன்
  இயக்கம் – ஜேடி & ஜெர்ரி
  இசை – கார்த்திக் ராஜா
  முன்னணி நாயகன் – அஜித்
  (அன்றைய) ராசியில்லாத நாயகன் – விக்ரம்
  படம் – உல்லாசம்

  யாரோ யார் யாரோ, யாரோடு யாரு, எவர் நெஞ்சினில்தான் யாரோ!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • தல…

  படம் – உல்லாசம்

  இசை – கார்த்திக்ராஜா

  கலைஞானி ஒரு பாடல் பாடியிருப்பார் அதுல.

  இசைஞானியும் ஒரு பாடல் பாடியிருப்பார்.

 • \அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. \

  உண்மை…ம்ம்ம் இப்போ ஒரு படம் வருது ரெட்டை சூழின்னு அதாச்சும் இவருக்கு நல்லா நிலையை கொடுக்குத்தான்னு பார்ப்போம்.

 • படம் ;உல்லாசம் ;தயாரிப்பு ; அமிதாப் ; நடிப்பு ;அஜீத் ,விக்ரம் ;இசை ;கார்திக்ராஜா

 • ஆயில்யன்

  சரியான கணிப்பு இந்த முறை பாஸ் மார்க் 😉

  சென்ஷி

  வாங்க 😉 இப்படிக் கேட்டாத்தானே வரீக

  சொக்கரே

  சரியான பதில் மேலதிக தகவல்களும்

  பிரகாஷ்

  சரியான பதில் தான்

  தல கோபி

  சரியான கணிப்பு

 • இப்ப அந்த இசையமைப்பாளரும் ராசியில்லாதவர் ஆகிட்டாருன்க்க. ஒரு பிரபல பாடகர் கூட ராசியில்லாத நடிகருக்கு அப்பாவா இருப்பாரு. உல்லாசமா இருக்க வேண்டிய அந்த நடிகை பாவம் 🙁

 • அநாமோதய நண்பரே

  சரியான கணிப்பு

  வாங்க இளா

  புதிருக்குள் புதிரா 😉

 • ஏன் இவ்வளவு இலகுவான கேள்வியாக் கொடுக்குறீங்க? 🙁

  யாரோ யார் யாரோ..யாரோடு யாரோ..

  இளையராஜாவும் பாடியிருக்கிறார்..கதாநாயகிக்கு நடிகை ரேவதி குரல் கொடுக்க, அஜித்குமார், அன்றைய ராசியில்லாத நடிகர் விக்ரம் தன் ஆமையோடு நடித்திருப்பார். 🙂
  பவதாரிணியும் பாடியிருப்பார்.

  கொஞ்சும் மஞ்சள் பூக்கள்.. ஹரிஹரன்..எனது விருப்பப்பாடல்களில் ஒன்று..
  அந்தப் படத்துப் பாடல்கள் எல்லாம் போல நல்லா இருக்கும்.. விபரம் போதும்னு நினைக்கிறேன்..

  படம் பெயர் உல்லாசம் !

  செக்கை அனுப்பிவைங்க பாஸ் !!!

 • படம்> உல்லாசம்

  இசையமைப்பாளர்> கார்த்திக்ராஜா

  இந்தப் படத்தின் கதை Robert deniro இயக்கி நடித்த A Bronx tale என்ற படத்துடைய அப்பட்டமான தழுவல்.

  அமிதாப்'ன் paa படத்தின் பாடல்களை கேட்டாச்சா! இளையராஜா இசை. பாட்டு எல்லாம் சூப்பர். அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்க.

 • உல்லாசம்,கார்த்திக்ராஜா…
  (பாவம் அவர் இசைப்பயணம்தான் உல்லாசமில்லாமப் போகுது. talented guy…)
  அவரோட ‘ஆல்பம்’ பாடல்கள் எல்லாமே என் ஃபேவரைட்…

 • ஹா ஹா ஹா ஹா

  படம்: உல்லாசம்
  அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகன்: அஜித்
  அன்றைய ராசியில்லா நாயகன்: விக்ரம்
  இயக்குனர்கள்: ஜே.டி, ஜெர்ரி
  ராசியில்லாத் திறமைசாலி இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
  படம் தயாரித்த இந்திப் பிரபலம்: அமிதாப்

  சரியா????

 • மீன் துள்ளியான், ரிஷான், குட்டிப்பிசாசு, தமிழ்ப்பறவை, சுப்பராமன், அரவிந்த், அருண், கிருத்திகன்

  சரியான பதில்கள் தான் 😉

  குட்டிப்பிசாசு

  பா படம் வரும் வரை வெயிட்டிங் 😉

  புதுகைத் தென்றல்

  இன்னொரு வாட்டி ட்ரை பண்ணுங்க

  சின்ன அம்மிணி

  என்னது இது கேள்வி சுலபமாச்சே

 • கேட்ட கேள்விக்கான சரியான பதில்

  படம்: உல்லாசம்

  நடிகர்கள்: அஜித், விக்ரம்

  தயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்

  இசை: கார்த்திக் ராஜா

  இயக்கம்: ஜேடி – ஜெரி

  பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Leave a Reply to தமிழ்ப்பறவை Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *