றேடியோஸ்புதிர் 47 – “ராஜாதி ராஜா” படத்தில் வராத பாட்டு

“ராஜாதி ராஜா” படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.

படத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த “டவுசர் பாண்டி” ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த “பெத்தவமனசு” என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் ‘பெத்தவமனசு’ படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.

போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

இந்தப் படத்தில் வராத பாடல் “உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா” பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

அந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்

30 thoughts on “றேடியோஸ்புதிர் 47 – “ராஜாதி ராஜா” படத்தில் வராத பாட்டு

 • உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு, என் ராசா, … என் மேல் ஆசை இல்லையா? 🙂 கே. எஸ். சித்ராவும் பி. சுசீலாவும் பாடிய பாட்டு 😉

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • சொக்கரே சரியான பதில் தான், பாட்டாவே படிச்சிட்டீங்களா 😉

  பெயர் குறிப்பிட விரும்பாத அன்பரே

  அதுதான் பதில்

 • உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா
  என்மேல் ஆசை இல்லையா….

  சரியா?

 • நல்ல போட்டி

  இதுதான் நான் பங்கேற்கும் முதல் போட்டி என்பதும் ஒரு சிறப்பு

  தலைவர் படம் இல்லையா அதிலும் சூப்பர் படம்

  பாடல்: உன் நெஞ்சத்தொட்டு சொல்லு என் ராஜா என் மேல் ஆசை இல்லையா

  பாடல் இன்னும் காதில் ஒலிக்க கூடிய அழகிய பாடல்
  இசைஞானி இளையராஜா கலக்கி இருப்பார் படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர்

  விடை சரியா

 • வாசுகி, தமிழ்ப்பறவை, குட்டிப்பிசாசு, ரெஜோலன், பாலா

  கலக்கீட்டீங்க, சரியான பதில் தான்

 • திரு பிரபா அவர்களுக்கு

  சூப்பர் ஸ்டார் ரஜினி இன் ராஜாதி ராஜா படத்தில்
  இடம் பெறாத
  அந்த பாடல்

  "உன்
  நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா" சரியா

  இதே பாடல் பின்பு ராமராஜன் படத்தில் இசைஞானி அவர்கள் சேர்த்தார் என்று கேள்வி பட்டதுண்டு
  அதே போல் வீரா படத்திலும் இடம் பெறாத "முந்தி முந்தி " என்ற பாடலையும் வனஜா கிரிஜா படத்திலும் ராஜா பயன் படுத்தி இருபார்

  அடியேனின் கருத்து சரியா பிரபா அவர்களே

  அன்புடன்
  சு மகாராஜன்
  அமீரகம்

 • உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க கானா சார் எங்க மேல உங்களுக்கு ஆசையே இல்லையா என்ன ?

  ~ரவிசங்கர் ஆனந்த்

 • ரிஷான், சம்பத் மற்றும் NN

  தவறான பதில்கள்

  தல கோபி

  இதானே வேணாங்கிறது

  ரவிசங்கர் ஆனந்த்

  அதே தான் 😉

  பெயர்குறிப்பிட விரும்பாத நண்பரே

  சரியான பதில்

 • போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

  இந்தப் படத்தில் வராத பாடல் "உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

  போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

 • Status Liker, Autoliker, auto liker, Auto Liker, Autolike, auto like, Auto Like, Autolike International, Autoliker, Increase Likes, Status Auto Liker, Photo Auto Liker, autoliker, ZFN Liker, Photo Liker, autolike, Working Auto Liker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *