றேடியோஸ்புதிர் 46 – இயக்குனரான பாடகர்

இவர் இயக்குனராக எல்லாம் வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்,80 களில் பிரபலமாக விளங்கிய பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தப் பாடகர் ஒரு படத்திற்கு இசையமைத்தும் இருக்கின்றார். அந்தப் படத்தில் நடித்த பிரபல நாயகி படம் முடிவதற்குள் இறந்தது துரதிஷ்டம் கூட. பாடகர், பின்னர் ஒரு படத்திற்கு இசை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களில் கலக்கிய இவர் மகனும் தந்தை வழியொற்றி பாடகர், நடிகர், ஏன் இசையமைப்பாளராகக் கூட வந்திருக்கின்றார்.

மேலே கலவையாகவே உபகுறிப்புக்களைக் கொடுத்துவிட்டேன், இனிக் கேள்விக்கு வருகின்றேன். குறித்த அந்த 80களில் பிரபல பாடகராக இருந்தவர் ஒரு படத்திற்கு இயக்குனராகவும் இருந்திருக்கின்றார். அந்தப் படத்தின் தலைப்பு, நாயகன் படத்தில் வரும் பாடல்களில் ஒன்றின் ஆரம்ப வரிகளில் ஒளிந்திருக்கின்றது, அந்த ஆரம்ப வரிகளில் முதல் சொல்லை மட்டும் “நீ” ஆக்கினால் போதும் பதில் பொத்தென்று விழுந்து விடுமே. படம் பெயரையும் அந்தப் பாடகர் சக இயக்குனர் பெயரையும் கண்டு பிடியுங்களேன் 😉

31 thoughts on “றேடியோஸ்புதிர் 46 – இயக்குனரான பாடகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *