சிறப்பு நேயர் “சின்ன அம்மிணி”


இந்த வாரம் றேடியோஸ்பதி சிறப்பு நேயராக அமர்க்களப்படுத்த இருப்பவர் நாம் வாழும் எங்கள் கங்காரு தேசத்தில் இருந்து “சின்ன அம்மிணி” என்பதில் பெருமையடைகிறோம். கிவி தேசம் நியூசிலாந்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த சின்ன அம்மணி தொடர்ந்தும் இடைவிடாது பதிவுலகில் இடைவிடாத பதிவுப்பணியை ஆற்றி வருபவர் என்று நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை. ஆனால் அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் சுனாமியாக வந்த வலைப்பதிவர்கள், பதிவுகள் ஓய்ந்து போன நிலையில் தொடர்ந்து எழுதி வரும் வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் சின்ன அம்மிணி இருப்பதை இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

நாட்டு நடப்பு, நகைச்சுவை, சினிமா, சமூகம் என்று கலக்கும் சின்ன அம்மணியின் நகைச்சுவைக் கலக்கலுக்கு லேட்டஸ்ட் உதாரணம் அவர் படைத்த “நீதிபதி” விமர்சனம்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் கலக்கிய இனிய மெல்லிசை மெட்டுக்கள் சின்ன அம்மணியின் தேர்வாக முத்தான ஐந்து பாடல்களாக வந்து உங்களுக்கு இன்னிசை விருந்து படைக்க இருக்கின்றன. கேட்டு மகிழுங்கள்.

1. நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே.

உமாரமணன், இளையராஜா பாடின பாட்டு. நில்லாமல் பதில் சொல்லாமல் அன்பேன்னு பாடும் உமா ரமணன் குரல் அருமை. பாட்டு பாடவா படம் வெளிவந்தபோது நான் ஈரோடில் பணியில் இருந்தேன். என் மேலதிகாரி ஒரு ஒரியாக்காரர். ‘கொஞ்சம் கொஞ்சம்’ தமிழ் பேசவும் படிக்கவும் தொடங்கியிருந்தார். தமிழின் சுலப எழுத்துக்களான ப,வ,ட மட்டுமே வைத்து வந்த இந்தப்படப்பெயரை படிக்கச்சொன்னதும் பட்டு புடவா என்று படித்தார். நான் விழுந்து விழுந்து சிரித்து வயறு வலித்தது. இந்தப்படத்தில் வந்த ‘வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்’ எனக்கு பிடித்தமான மற்றொரு பாடல்.

2. இசையில் தொடங்குதம்மா

இந்தப்பாட்டு Full of Music. டம் டம்னு தொடங்கற இசை ஆகட்டும். பின்னாடி இந்துஸ்தானில அருவி மாதிரி இசை கொட்டும் குரல் கொண்ட அஜய் சக்ரபர்த்தி ஆகட்டும். So rich in Music. இளையராஜாவோட இசையில் இன்னொரு காவியம். இந்தப்படம் நியூஸியில் நான் திரையங்கில் பார்த்த படம். சென்சார் செய்யப்படாத காட்சிகளோடு பார்த்தேன். பின்னர் குறுந்தகட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தபோது பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்தது. முழு படம் பார்த்த உணர்வை அது தரவில்லை. ராஜாவின் இசையில் கமல் பாடிய பாடல்களில் அவருக்கு தோதான குரல் ஜானகிதான். அதற்குப்பின் கமல் குரலுக்கு இசைந்த பெண்குரல்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். சுந்தரி நீயும், கண்மணி அன்போடு போன்ற பாடல்கள். மற்ற பாடல்கள் யாருக்காவது நினைவு வந்தால் பின்னூட்டம் போடுங்க.

3. காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு, வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

சேரன் பாண்டியன் படத்தில தேன் குரலில் ஸ்வர்ணலதா பாடும் பாட்டு. என்னோட பேவரைட்களுல் ஒண்ணு. இசை செளந்தர்யன். கேக்க சலிக்காத பாட்டு. பாடல் பிடிக்க காரணம் ஸ்வர்ணலதா. பாடல்களுக்கு அழகு சேர்க்கும் குரல் இவருக்கு. லதா மங்கேஷ்கர் மாதிரி. படம் கிடைத்தால் மறுபடியும் பார்க்கவேண்டும்.

வந்ததா வந்ததான்னு கேட்டுக்கிட்டே ஷிரிஜாவை சுத்தி ஸ்டைலா ஆனந்த்பாபு நடப்பார். அழகா இருக்கும். (கானா – ஒளிப்படம் கிடைச்சா போடுங்க)

4. நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல்ல.
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடிங்கி போன பின்னும் இப்படி போகும்
யேசுதாஸ் , ஸ்வர்ணலதா – படம் சின்னத்தாயி . மறுபடியும் இளையராஜா, ஸ்வர்ணலதா. இந்தப்பாட்டு கேட்கும்போது ‘கூண்டுக்குள்ள உன்னைவச்சு கூடி நின்ன ஓரை விட்டு ‘ பாடல் நினைவுக்கு வரும். ஒரே ராகமாய் இருக்குமோ.

இந்தப்பாட்டு அவ்வளவா பிரபலமாகலை. ஆனா பாடகர்கள் இரண்டு பேரும் பாடியிருக்கறதை கேளுங்க. சொக்கிப்போயிடுவீங்க.

5. சோலைகள் எல்லாம் பூக்களைத்தூவ சுகம் சுகம் ஆஅ..
குயில்களின் கூட்டம் பாக்களைப்பாட இதம் இதம் ஆஅ
காதல் ஊர்வலம் இங்கே

இசை டி.ராஜேந்தர். படம் – பூக்களைத்தான் பறிக்காதீங்க – எஸ் பிபி, சித்ரா

இந்தப்படத்துல அத்தனை பாடல்களும் சூப்பர். இந்தப்படம் திரையரங்கள் அண்டை வீட்டுக்காரர்களுடன் பார்த்தேன் – நதியாவுக்காக. படம் ஓடவில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை.

33 thoughts on “சிறப்பு நேயர் “சின்ன அம்மிணி”

 • //இசையில் தொடங்குதம்மா//

  இந்த பாட்டு அதிகம் கேட்டதே இல்ல இன்னிக்குத்தான் நான் கேக்குறேனே!!!

 • //நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல்ல///

  இந்த பாட்டெல்லாம் கேக்கறதுக்குன்னே ஒரு லொக்கேஷன் செட் பண்ணனும்!

  நைட்டு பத்து மணிக்கு மேல தெருவுல நாலு சேரை போட்டுக்கிட்டு,நண்பர்களை கூப்பிட்டு வைச்சுக்கிட்டு, ஸ்பீக்கர அலறவுட்டுக்கிட்டு ப்ச் அந்த மாதிரி பாட்டு கேக்குறதே ஒரு தனி சுகம் தான் 🙂

 • சின்ன அம்மிணி கலெக்‌ஷன் எல்லாம் ஓஹோ! பட் ஒரு கரெக்‌ஷன் இவுங்க சின்ன அம்மிணி இல்ல இல்ல!

  பெரிய அம்மிணித்தான் ! :))

 • கடைசி பாட்டை தவிர மீதி 4 நாலு பாட்டும் என் ஃபேவட்ரைட்டு :))))

  கடைசி பாட்டு கேட்டுட்டு சொல்றேன் 😀

 • // ஆயில்யன் said…

  //இசையில் தொடங்குதம்மா//

  இந்த பாட்டு அதிகம் கேட்டதே இல்ல இன்னிக்குத்தான் நான் கேக்குறேனே!!!//

  விஜய் டீவில பாடும் ஆபீஸ் போட்டில ஒரு பொண்ணு இந்த பாட்ட சூப்பரா பாடுச்சு பாஸ். அப்போ தான் இந்த பாட்டை முதல்ல நான் கேட்டேன் 🙂

 • //ஆயில்யன் said…

  சின்ன அம்மிணி கலெக்‌ஷன் எல்லாம் ஓஹோ! பட் ஒரு கரெக்‌ஷன் இவுங்க சின்ன அம்மிணி இல்ல இல்ல!

  பெரிய அம்மிணித்தான் ! :))//

  பாஸ் சொன்னத அப்படியே வழிமொழியறேன் :))))

 • அஞ்சுல மூணு என் தலைவர் பாட்டு, அது எல்லாமே எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் தான்.. கலக்கல் போங்க…

  குறிப்பாக இசையில் தொடங்குதம்மா பாடலை எழுதியதும் ராஜா சார் தான். இந்த பாடல் சாரங்கதரங்கிணி என்ற ராகத்தை அடிபடையாக கொண்டது.. கொஞ்சம் ஹம்சா நாதம் போலவும் இருக்கும்.

  சாரங்கதரங்கிணி ராகத்தில் அமைய பெற்ற சில பாடல்கள் ரொம்ப ஹிட்டானவைகள் உம்: சொர்கமே என்றாலும் அது நம்மூர போலவருமா? , தென்றல் வந்து என்னை தொடும், இவை மட்டும் தான் இப்போதைக்கி என் நினைவுக்கு வருகிறது

  இந்த பாடலின் ரெகார்டிங் வீடியோ யூ டியூபில் இருக்கும், அதில் கமல் இசையை ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த லிங்கில் அதையும் பாருங்களேன்.
  http://www.youtube.com/watch?v=YQWy_CjLfKI

  ~ரவிசங்கர் ஆனந்த்

 • //நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல்ல //

  அக்கா சொன்னா நம்புவீங்களா? இந்தப் பாடல் வெளிவந்த நாளில் இருந்து இந்த நொடிவரை நான் தினமும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் முணுமுணுக்கும் பாடல் இது.அப்ப நான் +1 படிச்சுக்கிட்டு இருந்தேன்.இந்தப் பாடல் எப்படி இந்த அளவிற்கு என்னைக் கவர்ந்ததுன்னு சொல்லத்தெரியல.

  🙂

 • அனைத்து பாடல்களும் அருமை கானா…..சின்னத்தாயி படப்பாடல்கள் அனைத்தும் ஹிட்தான்……… படம் முழுவதும் எங்க ஊரில் ( திருநெல்வேலி) எடுக்கப்பட்டது..இந்த பாடல் காட்சி முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் படமாக்கப்பட்டது……………..

 • // G3 said…

  விஜய் டீவில பாடும் ஆபீஸ் போட்டில ஒரு பொண்ணு இந்த பாட்ட சூப்பரா பாடுச்சு பாஸ். அப்போ தான் இந்த பாட்டை முதல்ல நான் கேட்டேன் :)///

  அட ஆமாம் பாஸ் சூப்பரா பாடியிருக்காங்களே!!!!

  ம்ம் இங்க வந்து நிறைய மிஸ் பண்றேன் 🙁

  இசையில் தொடங்குதம்மா

 • யக்கா…இந்த வாஆஆஆஆரம் நீங்களா? ஜூப்பரு! 🙂

  //நாட்டு நடப்பு, நகைச்சுவை, சினிமா, சமூகம் என்று கலக்கும் சின்ன அம்மணியின் //

  ஆன்மீகம் என்பதை லிஸ்ட்டில் விட்ட காபி அண்ணாச்சியைக் காபி போட்டுக் கண்டிக்கறேன்! யக்கா ஆன்மீகத்திலும், கவிதையிலும் கூடக் கலக்கறவங்க! அதுக்கு கந்தா கடம்பா கதிர்வேலாவே சாட்சி 🙂

 • //அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் சுனாமியாக வந்த வலைப்பதிவர்கள், பதிவுகள் ஓய்ந்து போன நிலையில் தொடர்ந்து எழுதி வரும் வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் சின்ன அம்மிணி இருப்பதை இங்கே சொல்லி வைக்க வேண்டும்//

  சந்தடி சாக்குல, அந்த விரல் வித்டு எண்ணக் கூடிய பதிவர்களில் கானா பிரபாவும் ஒருவர்-ன்னு தானே சொல்ல வந்தீக? 🙂

 • //ராஜாவின் இசையில் கமல் பாடிய பாடல்களில் அவருக்கு தோதான குரல் ஜானகிதான். அதற்குப்பின் கமல் குரலுக்கு இசைந்த பெண்குரல்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்//

  ரிப்பீட்டே! 🙂
  கமலோட "ஒரு மாதிரியான" குரலுக்கு, ஜானகி தான் சரி!

  சுசீலாம்மாவின் மென்மையான வருடும் குரல், கமலுக்குச் சரி வராது! 🙂

  //சுந்தரி நீயும், கண்மணி அன்போடு போன்ற பாடல்கள். மற்ற பாடல்கள் யாருக்காவது நினைவு வந்தால் பின்னூட்டம் போடுங்க.//

  என்ன இப்படிச் சொல்லிட்டீங்க-க்கா?
  இஞ்சி இடுப்பழகா-வை நீங்க எப்படி மறக்கலாம்? 🙂

  நினைவோ ஒரு பறவை – அதுலயும் கமல், ஜானகி தான்! என்ன, கமல் நடு நடு-ல ஆ, ஊ-ன்னு எல்லாம் கலந்தடிப்பாரு! 🙂

 • சின்ன அம்மிணி கலக்கிட்டீங்களே யாப்போவ்.. 🙂

  அதும் அந்த ஸ்ரீசாவை சுத்திட்டு தலையாட்டற ஆனந்த்பாபு சூப்பருதான்.. அந்த படம் எனக்கு ரொம்பபிடிக்கும் .. ஸ்ரீசாவையும்.. 🙂

 • //நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே.
  உமாரமணன், இளையராஜா பாடின பாட்டு//

  கலக்கல் பாட்டு-க்கா!
  மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன்!
  ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன்-ன்னு வரும்! வாவ்!
  உமா அதுல கிளாசிக்கல் கலக்காம நல்லாப் பாடுவாங்க! நில் நில் நில் -ன்னு அந்த Shrill நல்லா இருக்கும்!

  உமா ரமணனை ஏன் தமிழ் சினிமா ரொம்ப பயன்படுத்திக்கலை-ன்னு தெரியலை! ராஜா தான் ரொம்ப பயன்படுத்தி இருப்பாரு! அவிங்களும் அவங்க் கணவர் ரமணனோடு, மேடைக் கச்சேரிகளில் செட்டில் ஆயிட்டாங்க!

  * பூங்கதவே தாழ் திறவாய்!
  * கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!
  * கஸ்தூரி மானே கல்யாணத் தேனே!
  * நீ பாதி நான் பாதி கண்ணே!-ன்னு உமா தந்த ஹிட்டுகள் அத்தனையும் மெலடி!

  காபி அண்ணாச்சி:
  என்னோட நேயர் விருப்பமா ஒன்னு கேக்குறேன்! உமா ரமணன் பத்திய ஒரு சிறப்புப் பதிவு போடுங்களேன் றேடியோஸ்பதில!

 • //நான் திரையங்கில் பார்த்த படம். சென்சார் செய்யப்படாத காட்சிகளோடு பார்த்தேன்//

  ஜூப்பரு! 🙂

  //பின்னர் குறுந்தகட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தபோது பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்தது//

  ச்சே! குறுந்தகட்டு ஆளுங்க குறுகிய மனப்பான்மை கொண்டவய்ங்க! 🙂

  //இசையில் தொடங்குதம்மா – இந்தப் பாட்டு Full of Music. டம் டம்னு தொடங்கற இசை ஆகட்டும். பின்னாடி இந்துஸ்தானில//

  மொதல்ல ஹம்சாநந்தம் ராகத்துல தொடங்கும்-க்கா! அப்பறம் இந்துஸ்தானிக்கு மாறிடும்! தாளம் தான் பாட்டோட உயிர் நாடி, பாட்டு முழுமைக்கும்! ஷெனாய், தில்ருபா, புல்லாங்குழல்-ன்னு பிச்சிக்கிட்டு போகும்! 🙂 பண்டிட் அஜய் சக்ரவர்த்தி குரலும் கணீர்!

  ஆனாலும் ஹே ராம்-இல் இந்தப் பாட்டை விட எனக்குப் பிடிச்ச பாட்டு…
  நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
  நமை சேர்த்த இரவுக்கு ஒரு நன்றி! 🙂

 • //காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு, வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா//

  ஸ்வர்ணலதா பாடும் பாட்டு! உம்..இப்ப தான் உன்னிப்பாக் கேட்டேன்!

  /வந்ததா வந்ததான்னு கேட்டுக்கிட்டே ஷிரிஜாவை சுத்தி ஸ்டைலா ஆனந்த்பாபு நடப்பார். அழகா இருக்கும்.//

  ஹிஹி! ரொம்ப ரசிச்சி இருக்கீக போல அந்த டான்ஸை! ஆனா ஆனந்த்பாபு "நடப்பார்"-ன்னு சொல்லீட்டீகளே! :)) காபி, காணொளியைப் போடுங்க! 🙂

  //நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து //

  நல்லா இருக்கு!
  கோரஸா பாடுற மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து குரல் கூட பிடிச்சி இருக்கு! 🙂

  ஸ்வர்ணலதா-ன்னா எங்களுக்கு ஒன்னு மாசி மாசம் ஆளான பொண்ணு ஸ்டைல்ல கும்மணும், இல்லீன்னா, மாலையில் யாரோ மனதோடு பேச-ன்னு கொஞ்சணும்! :))
  ஆனா கொஞ்சம் கொஞ்சம் தான் லதா மங்கேஷ்கர் ஸ்டைல்-க்கா! எப்பமே இல்ல! :))

 • அந்தக் கடைசி பாட்டு…அந்தக் கடைசிப் படம்..ஹைய்யோ…மை childhood nostalgia! அந்தப் பாடம் பார்த்து தான் எனக்கு காதலே வந்துச்சி-ன்னு நினைக்கிறேன்! :)))

  பூக்களைப் பறிக்காதீர்கள் படம் இப்ப பார்த்தா கூட அழுதுருவேன்! என்னமோ தெரியலை, அப்படி ஒரு நெஞ்சுக்கு நெருக்கம், both songs & the movie! சுரேஷ்,நதியா-வா எல்லாம் கற்பனை பறக்கும், மொளைச்சி மூனு இலை விடும் முன்னாடியே!

  இந்தப் பாட்டைக் கொடுத்ததுக்காகவே, பந்தலை ஒங்க பேர்ல எழுதி வச்சிறட்டுமா சின்ன அம்மிணி-க்கா? 🙂
  இது டி.ராஜேந்தர் பாட்டு-ன்னு அப்போ தெரியாது! தெரிஞ்ச பின்னால, டி.ராஜேந்தரோட பல லூசுத்தனங்களையும் இந்த ஒரே பாட்டுக்காக மன்னிச்சி விட்டுட்டேன்! :))

  காதல் ஊர்வலம் இங்கே
  கன்னி மாதுளம் இங்கே

  சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ-ன்னு இழுக்க…
  குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆஆ…ன்னு அப்படியே சுண்டி இழுக்கும்!

  மன்னவன் உந்தன் அணைப்பிலே
  மான்-என நானும் துவள்கிறேன்
  வாழை இலை போல ஜொலிக்கிறாய்
  தாழை விருந்துக்கு அழைக்கிறாய்

  காதல் ஊர்வலம் இங்கே
  கன்னி மாதுளம் இங்கே

  காதலி… அருகிலே
  இருப்பதே… ஆனந்தம்
  காதலன்… மடியிலே
  கிடப்பதே… பரவசம்

  புத்தகத்துள் தமிழைச் சுமக்கிறாய்
  பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

  நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்-ன்னு எஸ்.பி.பி கொஞ்சம் மொறைப்பாய் ஏக்கமாய்ப் பாட…

  நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்-ன்னு சித்ரா கேலிக் குரல்-லலலல…அச்சோ…மனப்பாடமே ஆயிரிச்சி!

  நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
  நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
  காதல் ஊர்வலம் இங்கே
  கன்னி மாதுளம் இங்கே…

 • ஆயிலு, G3, தமிழ்ப்பறவை, டி.வி.ராதாகிருஷ்ணன், ரவிசங்கர் ஆனந்த், அப்துல்லா, அத்திரி , முத்தக்கா எல்லாருக்கும் நன்றி.

  //இந்தப் பாட்டைக் கொடுத்ததுக்காகவே, பந்தலை ஒங்க பேர்ல எழுதி வச்சிறட்டுமா சின்ன அம்மிணி-க்கா? :)//

  கேஆரேஸ், பந்தல் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா 🙂

  //ரொம்ப ரசிச்சி இருக்கீக போல அந்த டான்ஸை! ஆனா ஆனந்த்பாபு "நடப்பார்"-ன்னு சொல்லீட்டீகளே! ://

  சுத்தி சுத்தி வருவார்னு இருந்திருக்கணுமோ.:) கானா , காணொளி போடுங்க கேஆரெஸ் கேட்டதுக்கு

 • சூப்பர் கலெக்‌ஷன்.. சஞ்சய்க்கு அக்கா எனபதை நிரூபித்து விட்டார் கோவை குயில் சி.அம்மிணி :))

 • ஆகா..இந்த வாரம் அக்காவா!!! நான் தான் லேட்டா! 😉

  எல்லா பாட்டும் கலக்கல்…தலைவர் பாட்டு வேற கூடுதல் 😉

  கடைசி டி.ஆர் பாட்டு இப்பதான் கேட்கிறேன்.

  இசையில் தொடங்குதம்மா மற்றும் ஹோராம் படத்தின் இசையை பற்றி தனியாகவே பேச வேண்டும். அந்த பாடலை கேட்டு கமலின் அண்ணன் திரு. சாருகஹசன் அழுதுவிட்டராம்.

  😉

 • எல்லா பாடல்களுமே அருமை.
  நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் மட்டும் ஏனோ தெரியாது அடிக்கடி பார்த்தும்/கேட்டும் கொண்டே இருக்கிறேன் இதுநாள் வரை. சின்னத்தாயி படமும் கூட நன்றாக இருக்கும்.

  நல்லதொரு இசைத்தொகுப்பிற்கு நன்றி கானா பிரபா மற்றும் சின்னாம்மிணி.

 • அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு…..
  நேரம் இருக்கும் போது வாங்க… எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
  mail adress konjam anuppunga.

  prapaslbc@gmail.com

 • //இசையில் தொடங்குதம்மா மற்றும் ஹோராம் படத்தின் இசையை பற்றி தனியாகவே பேச வேண்டும்.//

  கோபி, இதோ உங்களோட அடுத்த பதிவுக்கு டாபிக் கிடைச்சாச்சு.
  நன்றி நாடோடி இலக்கியன்

  நன்றி முல்லை, எனக்குப்பிடித்த பாடல் அது உங்களுக்கும் பிடிக்குமே 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *