தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்

மலையாளத்தின் இரு முன்னணி நாயகர்களான மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்க பாசில் இயக்கிய “ஹரிகிருஷ்ணன்” திரைப்படம் தமிழுக்குத் தாவிய போது தான் “அவுசப்பச்சன்” என்ற இசையமைப்பாளர் குறித்த அறிமுகம் எனக்கு கிட்டியது, அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதில் இருந்து. எண்பதுகளில் இளையராஜாவின் சாஸ்திரிய இசைப் பின்னணியில் வந்த படங்களில் வரும் இசையும், இன்னொரு மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் பாதிப்பும் இருப்பதாகவே அவுசப்பச்சனின் பாடல்களைக் கேட்கும் போது எனக்குத் தோன்றும். எண்பதுகளில் மலையாளத்தில் கொடி கட்டிப் பறந்த ரவீந்திரனின் சாயல் கலந்து கொடுப்பது தன்னை நிலை நிறுத்தும் என்று ஒரு காரணமும் ஆக அவுசப்பச்சன் நினைத்திருக்கலாம். அவுசப்பச்சனின் சில பாடல்களை அவர் இசையமைக்காதது தெரியாமல் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இது ரவீந்திரன் பாட்டு என்று சொல்லும் அளவுக்கும் இருந்திருக்கின்றன அவை. இதற்கு இன்னொரு காரணம் பெரும்பாலான மலையாளப் படங்கள் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த போது ரவீந்திரன் அவற்றுக்குத் தனியானதொரு இலக்கணத்தை மலையாள சினிமாவில் போட்டிருந்தார் எனலாம்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் “வடக்கும் நாதன்” திரைப்படம் வெளிவரத் தயாராகி பின்னணி இசை மட்டும் போட வேண்டிய நிலையில் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்து விட, அந்தப் படத்திற்குப் பின்னணி இசை கொடுத்தவர் அவுசப்பச்சன்.

உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்குனர்கள் படங்கள் என்று சொல்வது போலவும், சில நடிகர்களை இயக்குனர்களின் நாயகன் என்பது போல இசையமைப்பாளர்களைக் கூட இயக்குனர்களின் இசையமைப்பாளர் என்று வட்டம் போட்டு விடலாம். உதாரணமாக பாரதிராஜாவோடு கூட்டுச் சேர்ந்த தேவேந்திரன் வேதம் புதிது வில் என்னமாய் இசையமைத்தார். ஒரு நல்ல பாடல் வருவதற்கோ அல்லது ஒரு நல்ல இசையமைப்பாளனாகப் புடம் போடப்படுவதற்கோ ஒரு திறமையான இயக்குனரின் வேலைவாங்கு திறனும் முக்கியமானது என்பது சினிமா வரலாறு கண்ட உண்மை.

அது போலவே ஒசப்பச்சனுக்கும் இயக்குனர்கள் சிலரின் கடைக்கண் பார்வை கிட்டியிருக்கிறது.
“உன்னிகளே ஒரு கத பறயான்” போன்ற பிரபல இயக்குனர் கமல் இயக்கிய படங்களும், “அனியத்தி பிறாவு” (தமிழில் காதலுக்கு மரியாதை” போன்ற பாசில் இயக்கிய படங்களும் அவுசப்பச்சனுக்கு பெரும் பலமாக இருந்தவை என்றால் மிகையில்லை. அந்த வரிசையில் இப்போது “ஒரே கடல்” திரைப்படமும் சேர்ந்திருக்கின்றது. தமிழ், தெலுங்கு மசாலா வைரஸ் பரவி “அண்ணன் தம்பி” என்று மம்முட்டியும், “சோட்டா மும்பை” என்று லாலேட்டனும் பயணப்பட, 80 கள் விளைவித்த நல்ல மலையாள சினிமாவை மீண்டும் கையகப்படுத்த வந்திருக்கும் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் கடைக்கண் பார்வையும் ஒசப்பச்சன் மேல் வந்திருக்கின்றது.

இந்தப் படத்தின் பாடலை வெறுமனே கேட்பதை விட “ஒரே கடல்” படத்தோடு அனுபவித்துப் பார்க்கும் போது தெரியும் இயக்குனரும் , இசையமைப்பாளரும் ஒரே கடலில் பயணித்து ஒரே அலைவரிசையில் சிந்தித்திருக்கின்றார்கள் என்று. அவுசப்பச்சனின் பாடல்களில் இருந்து விலகிய தனித்துவமான இசையையும் அங்கே காட்டியிருக்கிறார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கும் அவுசப்பச்சனை வாழ்த்துவதோடு ஏஷியா நெட்டின் Idea Star Singer இன் நீதிபதியாக இன்னும் தொடர்ந்து தன் இசைப்பணியை மழுங்கடிக்காமல் இசையில் முழுமையாக அர்ப்பணித்து இன்னும் விருதுகள் வாங்க வாழ்த்துவோம்.

ஒரே கடல் குறித்து என் பதிவு

“ஒரே கடல்” படத்தில் வரும் “நகரம் விதுரம்”

“ஒரே கடல்” படத்தில் “ஜமுனா வருதே” பாடகி சுஜாதா மகள் ஸ்வேதா பாடித் தோன்றும் காட்சி

தொடர்ந்து அவுசப்பச்சனின் சில இனிய மெட்டுக்கள்

“உள்ளடக்கம்” படத்தில் இருந்து “அந்தி வெயில் பொன்னுதிரும்”. எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் பாடல்கள் பட்டியலில் விடுபட முடியாதது. தேவாவின் 90 களின் ஆரம்ப இசைப் பாணி இதில் இருக்கும்.

“உன்னிகளே ஒரு கத பறயான்” படத்திலிருந்து “பொன்னாம்பல்”

“ஹரிகிருஷ்ணன்” படத்தில் இருந்து “சமயமிதாபூர்வ சாயானம்”

12 thoughts on “தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்”

 1. உடனடிப் பதிவுக்கு நன்றி கானா பிரபா 🙂

  சுஜாதா மகள் அச்சு அசல் அம்மாமாதிரியே இருக்காங்க – தமிழும் சரி, மலையாளமும் சரி, ரொம்ப சுத்தமா உச்சரிச்சுப் பாடறாங்க, வாழ்க!

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 2. //தமிழும் சரி, மலையாளமும் சரி, ரொம்ப சுத்தமா உச்சரிச்சுப் பாடறாங்க, வாழ்க!//

  ம்ம் கரீக்ட்டு!

  🙂

  வாழ்த்துக்கள் அவுசப்பச்சன்!

  வாழ்த்துக்கள் கானா பிரபா டக்குன்னு அழகாக அரங்கேற்றிய பதிவுக்கு :))

 3. Dear Mr.Prabha,
  I have been a reader of Tamilmanam for last several years and regularly enjoy reading your blog especially on Ilayaraja's music.
  A new website http://www.Ragasurabhi.com has been launched recently with a view to familiarise Karnatic music to those who are interested and focussing on developing the skill of identifying ragas.
  If you could pay a visit to this site and post your coments and/or write about this website in your blog if you find it interesting, I feel many will be benefitted.
  This is not with an intention to campaign, but out of interest to share with fellow music lovers.

  Regards

  K.G.SUbbramanian

 4. அட்டகாசமான தொகுப்பு தல ;))

  ஒவ்வொரு பாடல்களும் (ஒரே கடல் தவிர) கேட்க கேட்க அருமையாக இருக்கு.

  நேத்தைக்கு தான் ராசாவோட மலையாள பாடல்களை எல்லாம் தேடி பார்த்துக்கிட்டு இருந்தேன்.

 5. You right Kana. Some directors are capable of pulling out good music from composers even if their directorial venture is failed. Directors Vasanth and Karu Palaniyappan are couple of them.

 6. வருகைக்கு ந்ன்றி சொக்கா ;‍)

  சொற்பிழை கண்ட நக்கீரன் டொன்லீக்கு நன்றி, திருத்தி விட்டேன் 😉

  ஆயில்ஸ்

  வருகைக்கு நன்றி

 7. மிக்க நன்றி நாஞ்சில் பிரதாப்

  வணக்கம் சுப்ரமணியம்

  இந்த அரிய இணைப்பைத் தந்தமைக்கு மிக்க நன்றி, முழுமையாகப் பார்த்து விரிவாக என் கருத்தை எழுதுகின்றேன்.

  தல கோபி

  வருகைக்கு நன்றி

  ஜேகே

  மிக்க நன்றி

  இயற்கை

  😉 நன்றி

 8. nice.

  harikrishnans songs juperaa irukkum. யேசண்ணா ரெண்டு கொரல்ல ஒரு பாட்டு பாடியிருப்பாரு.

 9. 'ஹரிகிருஷ்ணன்ஸ்' (தமிழில்) பார்த்த பின்புதான் எனக்கும் அவுசப்பச்சன் என்ற பெயர் பரிச்சயமானது. பாடல் இறுவட்டில்(Pyramid) இசை துசா பச்சன் என்று போட்டிருந்தார்கள்.
  மலையாள வாசனை வீசும்
  'தமிழிசை மழை தரும் சந்தோஷம்…' (கே.ஜே.ஜேசுதாஸ்,உன்னிகிருஷ்ணன்,சித்ரா) எனை மறந்து இரசிக்கும் பாடல்களிலொன்று. அதன் மலையாள வடிவத்தினைத் தந்தமைக்கு நன்றி பிரபா.
  பேபி ஷாம்லியும் நினைவில் நிற்கின்றார்.
  VHS வைத்திருந்தேன்… சுட்டுவிட்டார்கள்.
  DVDதேடுகின்றேன்.

  கமலும் ரஜினியும்/அஜித்தும் விஜயும் இணைந்து இந்தமாதிரியான கண்ணியமான நகைச்சுவைப்
  படம் வந்தால்……

  கனவு காண்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *