உருவங்கள் மாறலாம்


கடந்த றேடியோஸ்புதிருக்கான பதிலாக வந்தவர், வானொலி, தொலைக்காட்சி கலைஞர் எஸ்.வி.ரமணன்.

வானொலி விளம்பரங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமான எஸ்.வி.ரமணன். இவர் பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். எஸ்.வி.ரமணனின் சகோதரி பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மற்றும் சகோதரன் ராம்ஜி, அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமானவர்.

எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் “உருவங்கள் மாறலாம்” திரைப்படம் வை.ஜி.மகேந்திரா, சுஹாசினி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க சிறப்பு வேடங்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்க வெளிவந்திருந்தது. கடவுள் எந்த ரூபத்திலும் வரலாம் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரஜினிகாந்த் ராகவேந்திரராகவே நடித்திருப்பார். கமலுக்கேற்ற ஆட்டத்தோடு “காமனுக்கு காமன் பாடல் உண்டு. இப்பாடலின் ஆரம்ப குரலாக எஸ்.வி.ரமணனின் குரல் அமைந்திருக்கும்.

அத்தோடு எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் என்ற இனிமையான பாடலும் இருக்கும்.

இந்தப் படத்தின் இசையும் படத்தை இயக்கிய எஸ்.வி.ரமணனே வழங்கியிருந்தார். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிமையான பாடல்களை இங்கே தருகின்றேன். “வானில் வாழும் தேவதை” என்ற அந்தப் பாடலைப் பாடுகின்றார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்.

VaanilVaazhum. – SPB, Vani Jeyaram

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.வி.ரமணன் பாடும் “காமனுக்கு காமன்”

Kamannaku Kaman – – SPB

எஸ்.வி.ரமணன் குறித்த மேலதிக செய்திகளுக்கு http://jaishreepictures.com

7 thoughts on “உருவங்கள் மாறலாம்

 • அடடே! போட்டி முடிஞ்சே போச்சா… ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது… படக்குன்னு வடை சுட்டிருப்பேனே.

  உருவங்கள் மாறலாம் படமும் நல்லா விறுவிறுப்பா இருக்கும். கிட்டத்தட்ட எல்லாப் பெரிய நடிகர்களும் இருப்பாங்க. நடிகர்திலகம், கமல், ரஜினி, மனோரமா, ஜெய்சங்கர், …. அடுக்கிக்கிட்டே போகலாம்.

  பாடல்களும் நல்லாருக்கும். நீங்க கொடுத்த வானில் வாழும் தேவதை, காமனுக்குக் காமன் பாட்டும் சூப்பர். ஆண்டவனே உன்னை இன்று பாட்டும் நல்லாருக்கும். அப்புறம் ஏதோ சாமியாருங்க பாட்டு வருமே… சில்க்கேஸ்வரான்னு பாட்டு… அந்தப் பாட்டையும் கொடுத்தீங்கன்னா… சந்தோசமாக் கேப்பேன். 😀

 • //வண்ணத்துபூச்சியார் said…
  அருமையான மலரும் நினைவுகள். தொடருங்கள்.

  வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே

 • //கோபிநாத் said…

  உள்ளேன் அய்யா ;)//
  வாங்க தல 😉

  // G.Ragavan said…

  அடடே! போட்டி முடிஞ்சே போச்சா… ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது… படக்குன்னு வடை சுட்டிருப்பேனே.//

  ஆகா, அடுத்த முறை மயிலை அனுப்புறேன் ஜி.ரா

  நீங்க சொன்ன பாட்டும் கலக்கல் தான் ப்ரேமாமிர்தம் என்றெல்லாம் போகும் பாட்டு. கைவசம் இல்லை, எங்காவது கிடைத்தால் நிச்சயம் போடுகின்றேன்.

 • வணக்கம் நண்பரே

  ஆண்டவனே உன்னை வந்து பாடலை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைக்கும் போது நிச்சயம் தருவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *