றேடியோஸ்புதிர் 14- இந்தப் படத்துக்காக இசையமைக்காத அந்தப் பாட்டு எது?

கடந்த போட்டி ஒரே ஜுஜுபி என்று கும்மோ கும்மென்று கும்மியவர்களுக்காக இந்த வாரம் ஒரு சவால் கேள்வி 😉

அது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம், அந்த நிறுவனத்தின் தற்போதய தயாரிப்பாளர்களில் ஒருவர் அவரது நூலில் சொன்ன விஷயம் இது. எனவே ஆதாரம் கேட்பவர்களுக்கும் ஸ்கான் பண்ணிக் கொடுக்கலாம் 😉

விஷயம் இதுதான். ஒரு தெலுங்குப் படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். ஒப்பந்தமானவர் ஒரு பெரிய நாயகன். ஆரம்பத்தில் இதைத் தமிழில் எடுத்தால் எடுபடுமோ என்று தயங்கினார்கள். ஆனால் மூலக்கதையில் சிறு மாற்றங்கள் செய்து படத்தை எடுத்தார்கள். இந்தப் படத்திற்காக ஏற்கனவே பதிவு செய்த பாடல்களோடு இன்னொரு பாடலையும் சேர்த்தார்கள். அந்தப் பாடல் விசி.குகநாதனின் வேறொரு படத்திற்காக இசையமைக்கப்பட்டு ஆனால் பயன்படுத்தமுடியாத பாடல். வி.சி.குகநாதனிடன் நோ-அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வாங்கி இந்தப் படத்தில் இணைத்தார்கள். சொல்லப் போனால் இந்தப் படத்தில் வந்த பாடல்களில் மிகவும் கலக்கலான பாட்டு இது தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சொல்கின்றார் “இந்த நாயகனை வைத்து தயாரித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது”……. …..” என்று சொல்வேன்.

இனி இந்தப் புதிரைக் கண்டுபிடிக்க சில உபகுறிப்புக்கள்.
இந்தப் படத்தின் ஒரு பாதி இன்னொரு பிரபல நடிகரின் படத்தலைப்பைச் சொல்லும்.

இந்தப் பாடலைப் பாடிய ஆண்பாடகரோடு, இணைந்து பாடகிய பெண் பாடகி அவ்வளவு பிரபலம் இல்லாதவர். ஆனால் இவரின் பெயரில் ஒரு பிரபல நடிகை முன்னர் நடித்து வந்திருக்கிறார்.

இந்தப் பாடலின் ஒரு பகுதியை வைத்து சோகப் பாடலும் இந்தப் படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.

இதே படத்தில் இன்னொரு பிரபல நடிகரின் வாரிசு நடிகரும் நடித்திருக்கின்றார்.

32 thoughts on “றேடியோஸ்புதிர் 14- இந்தப் படத்துக்காக இசையமைக்காத அந்தப் பாட்டு எது?”

 1. ஆஹா என்ன அதிசயம்

  ஒருத்தர் சொல்லியிருக்காரே, ஆனா அவர் இவங்க ரெண்டு பேரும் இல்லை

  //நிஜமா நல்லவன் said…
  மீ த பர்ஸ்ட்டு?//

  //ஆயில்யன் said…
  மீ த 2//

 2. படம் நல்லவனுக்கு நல்லவன்.

  படத்தின் மறுபாதி நல்லவன் மற்றொரு பெரிய நடிகரான விஜயகாந்தின் படம்.

  உன்னைத்தானே தஞ்சம் என்று பாடலை ஜேசுதாசுடன் இணைந்து பாடிய மஞ்சுளா பெரிய பாடகி இல்லை. அவரின் பெயரில் மிகப் பிரபலமான நடிகை மஞ்சுளா இருக்கின்றார்.

  மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

  கண்டுபிடிச்சிட்டேன் ரொம்ப ஈஸியா:)

 3. //இந்தப் பாடலின் ஒரு பகுதியை வைத்து சோகப் பாடலும் இந்தப் படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.//

  இதையும் கடைசியில் ஒலி ஏற்றுங்கள். என்னிடம் இல்லை:(

 4. அண்ணே..

  படம் பெயர் உன்னால் முடியும் தம்பி.. கமல்
  இது ஏற்கனவே ருத்ரவீனா என்ற தெலுங்கு படம் ரீமேக்.

  தம்பிங்கிறது மாதவன் படம்

 5. இளைய தங்கச்சி மைபிரெண்ட்

  தப்போ தப்பு, அதில் வாரிசு நடிகர் யார்?

  ஜெமினியா?, கிடையாதே

 6. தம்பிக்கு எந்த ஊரு?

  பாடல்: காதலின் தீபம் ஒன்று

  //இந்தப் படத்தின் ஒரு பாதி இன்னொரு பிரபல நடிகரின் படத்தலைப்பைச் சொல்லும்.//

  மீண்டும்…. தம்பி – மாதவன் படம்… 😉

 7. மீண்டும் பிழை

  தம்பி என்று தானா தலைப்பு இருக்கோணும்?

 8. படம் ‘நல்லவனுக்கு நல்லவன்.

  பாடல் ‘உன்னைத்தானே’

  பாடியவர்கள் ‘ஏசுதாஸ், மஞ்சுளா’.

  நிறுவனம் ‘ஏவிஎம்’.

 9. நல்லவனுக்கு நல்லவன்

  AVM பேன்னர்

  ஜீவன சக்ரா என்ற ஹெலுங்கு படத்தின் ரீமேக்

  சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாடல்?

  அந்த வாரிசு நடிகர் கார்த்திக். 🙂

 10. கார்த்திக் ந‌டித்த‌, “கீரவானி” என்ற பாட‌ல் வ‌ரும் ப‌ட‌ம்?

  – Nakul

 11. நகுல்

  கீரவாணி பாடல் வரும் “பாடும் பறவைகள்” ரீமேக் அல்ல, டப்பிங் படம். அத்தோடு விடையும் தவறு

 12. பாடல்: உன்னைத்தானே ஹேய் தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே..

  இதே டியூனில் என்னைத்தானேன்னு ஒரு பாடல்..

  பாடகி: மஞ்சுளா
  அடடே நடிகர் விஜயகுமார் வைஃபும் மஞ்சுளா.. 😉

 13. முரளிக்கண்ணன்

  சரியான கணிப்பு

  தஞ்சாவூர்க்காரன்

  படம் சரி, பாடலையும் சொல்லுங்களேன்.

 14. அந்தப் பாடகி மஞ்சுளா (கன்னடக்காரர். கன்னடத்துல நெறைய பாடியிருக்காரு)

  அந்த வாரிசு நடிகர் கார்த்திக். அவருக்கு ஜோடியா நடிச்சவர் துளசி.

  கதாநாயகர் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடி ராதிகா.

  ஏ.வி.எம் திரைப்பட நிறுவனம்.

  இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

  பாட்டு – உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

  படம் – நல்லவனுக்கு “நல்லவன்”

 15. போட்டியில் பங்கெடுத்து வெற்றி வாகை சூடிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களும், பங்கெடுத்த அனைவருக்கும்

  நன்றி நன்றி நன்றி 😉

  பழிவாங்கிட்டேன் 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *