றேடியோஸ்புதிர் 7 – இந்தப் புல்லாங்குழல் இசை வரும் படம்?


கடந்த வாரம் நான் குறிப்பிட்டது போன்று திரையிசை அளவிற்கு பின்னணி இசை குறித்து அதிகம் நாம் கவனம் செலுத்தாது அதன் சிறப்பை ஒதுக்கிவிடுகின்றோம். இப்படியான புதிர்ப்போட்டிகள் மூலம் அவற்றின் சிறப்பைப் பகிர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். எனவே இன்றும் ஒரு பின்னணி இசை வரும் புதிர் ஒன்றைத் தருகின்றேன்.

இதுவும் இளையராஜாவின் இசையில் வந்த ஒரு திரைப்படமாகும். ஒரு பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் வந்த அரசியல் சாயம் கொண்ட கதைக்கரு கொண்டதாகும். இப்படத்தில் நடித்தவர்கள் நாயகன், நாயகி உட்பட புதுமுகங்களே. இப்படத்தின் நாயகன், இதே படத்தின் இயக்குனரின் உதவி இயக்குனராகவும் இருந்தவர். இப்படத்தின் கதை கல்கி வார இதழில் தொடராக வந்திருந்தது. இந்தப் படத்தின் மூலம் பரவலாகப் பேசப்பட்ட நாயகன் தொடர்ந்து பல படங்களில் நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் விதி யாரை விட்டது?

இப்படத்தில் காதற் காட்சிகளில் புல்லாங்குழலுக்கும் இடம் இருந்தது. அதனால் இசைஞானி புல்லாங்குழலை வைத்து ஒரு ராஜாங்கமே நடத்திவிட்டார். அந்தப் பின்னணி இசையில் ஒரு புல்லாங்குழல் ஒலித்துண்டத்தத் தருகின்றேன்.

சரி இனி இந்தப் படத்தைக் கண்டுபிடியுங்களேன்?

அல்லது இந்த இணைப்பு

16 thoughts on “றேடியோஸ்புதிர் 7 – இந்தப் புல்லாங்குழல் இசை வரும் படம்?

 • //பின்னணி இசை குறித்து அதிகம் நாம் கவனம் செலுத்தாது அதன் சிறப்பை ஒதுக்கிவிடுகின்றோம். இப்படியான புதிர்ப்போட்டிகள் மூலம் அவற்றின் சிறப்பைப் பகிர ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.//

  ரொம்ப நல்ல விசயம்:))

 • என் உயிர் தோழன்..

  கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்தப் படம் பார்த்ததில்ல. அதுவும் அரசியல் படம்ன்னு சொல்லிட்டீங்களா? சின்ன புள்ளைங்க அரசியல் பேசக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. அதான். 😛

  ஆனால், இசை ரொம்ப கேட்டதுபோல இருந்ததாலத்தான் முயற்சித்தேன். 😉

 • ////ஆயில்யன். said…
  //பின்னணி இசை குறித்து அதிகம் நாம் கவனம் செலுத்தாது அதன் சிறப்பை ஒதுக்கிவிடுகின்றோம். இப்படியான புதிர்ப்போட்டிகள் மூலம் அவற்றின் சிறப்பைப் பகிர ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.//

  ரொம்ப நல்ல விசயம்:))////

  ரிப்பீட்டேய்…..

 • ///ஆயில்யன். said…
  இதோ போட்டிக்கு பதில் சொல்ல ரெடியாகிக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கேன் :))//

  நானும் தான்..

 • ராகவன்

  எடுத்த எடுப்பிலேயே கண்டுபிடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்

  மைபிரண்ட்

  எதோ அப்படி இப்படி கண்ணாமூச்சி விளையாடி பிடிச்சிட்டீங்க 😉

  வாழ்த்துக்கள்

  ஆயில்யன்

  அட நீங்களும் பிடிச்சிட்டீங்களே 😉
  வாழ்த்துக்கள்.

  தமிழ்ப்பறவை

  சரியான விடை, உங்களுக்கும் வாழ்த்துக்கள்

 • தல

  நான் இன்னும் இசையை கேட்கவில்லை..ஆனா நீங்கள் சொல்லியிருப்பதை பார்க்கும் போது படம் பெயர் – என் உயிர் தோழன் 😉

 • தல

  மன்னிக்கணும், அமீரகப் பதிவர்களுக்கு ஐமீம் வராதுங்கிறதுக்காக ஸ்பெஷல் இணைப்பு அது, ஆனா மாறிக் கொடுத்திட்டேன். இப்போ சரி பண்ணியாச்சு. ஆனா என்ன நீங்க விடையைச் சரியா சொல்லீட்டீங்களே, வாழ்த்துக்கள் 😉

  நிஜமா நல்லவன்

  நீங்களும் பின்னீட்டீங்க, வாழ்த்துக்கள்

 • போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் இனிய நன்றிகள். அடுத்த வாரம் சமீபகாலப்படம் ஒன்றோடு சந்திக்கின்றேன்.

Leave a Reply to ஆயில்யன். Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *