வருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்புநேற்று றேடியோஸ்புதிரில் ஒரு படத்தின் ஆரம்ப இசையை ஒலிபரப்பி சில தகவல்களையும் கொடுத்து அது என்ன திரைப்படம் என்று கேட்டிருந்தேன். வருஷம் 16 என்று சரியான விடையைப் பலர் அளித்திருந்தீர்கள்.

இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் “என்னென்னும் கன்னெட்டானே” (Ennennum Kannettante) என்ற பெயரில் 1986 இல் வெளிவந்து கேரள அரசின் “Best Film With Popular Appeal and Aesthetic Value” என்ற விருதைப் பெற்ற படமே பின்னர் தமிழில் “வருஷம் 16” என்று 1989 இல் வெளிவந்திருந்தது. மலையாளப்பதிப்பில் கதாநாயக நாயகிப் பாத்திரம் ஏற்றவர்கள் மிக இளம் வயது நடிகர்களாக இருந்தார்கள். மலையாளத்தில் இசை ஜெர்ரி அமல்தேவ்.அந்தப் படத்தையும் பாத்திருக்கின்றேன்.வருஷம் 16 திரையில் கார்த்திக் நாயகனாகவும், குஷ்பு நாயகியாகவும் நடித்திருந்தார்கள். குஷ்புவிற்கு ஒரு திருப்புமுனை இப்படத்தின் மூலம் கிடைத்தது. புதிரில் நான் கேட்டது போன்று பூர்ணம் விஸ்வநாதன் பெரிய தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

பாசில் படங்களுக்கு இளையராஜாவின் தனிக்கவனிப்பு இருப்பது போல் இந்தப் படத்திலும் உண்டு. பாடல்கள் மட்டுமன்றி இப்படத்தின் பின்னணி இசையும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள்.

படத்தின் ஆரம்ப இசைக்கோர்ப்பு

15 thoughts on “வருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு

 • அண்ணை புதுப்பாட்டுகளின்ர மியூசிக் தாங்கோ – கண்டு பிடிக்கிறம் – நாங்க பிறக்க முதலே வந்த பாடல்களை தந்தால் எப்பிடி ?
  அது உங்கட வயசுக்காரர்களாலதான் முடியும். எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாங்களேன். உதாரணமா நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது வந்த குருவி தசாவதாரம் பாட்டுக்களை தந்தால் கண்டுபிடிக்கலாம்

 • கார்த்திக்குன்னு கண்டுபிடிச்சுட்டேன் அண்ணா! ஆனா அப்புறம் யோசனை வரலை!

  ஆனா சூப்பரா…மண்டைய உடைச்சுக்கிட்டேன். மேலும் ரேடியோவில் இருந்து என்ன பிரயோசனம்னு கவலை வேற வந்துடுச்சு! 🙁

 • நல்லா இருய்யா.. ஒரு நாள் முழுக்க மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம். ஆனா ஒன்னு இனிமே இது எங்கே கேட்டாலும் சலார்னு பதில் சொல்லிருவேன்.

  இதே மாதிரி நிறைய முயற்சி செய்யவும்.

 • சயந்தன் அங்கிள் கூறியதை வழிமொழிகிறேன்

 • ச்ச்ச…ஒரு நாள் லீவு போட்டா என்னென்னமே நடந்திருக்கு…ம்ம்ம்…வெற்றி பெற்ற மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))

  தல
  நீங்க எப்போதும் புதுசு புதுசு செய்யுறதுல கில்லி ;))
  கலக்கிட்டிங்க…..மகிழ்ச்சி…நன்றி ;))

 • \ரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள். \

  நேத்து வுட்டுல லீவு போட்டு உட்காந்துயிருக்கும் போது தேவர் மகன் படத்தை பார்த்தேன்…ஆகா..ஆகா…சிவாஜி சார், கலைஞானி இவை எல்லாத்தையும் மீறி ராஜா ஒவ்வொரு காட்சி களிலும் உயிரோட்டமாக இசை அமைச்சிருக்காரு பாருங்க…ராஜா…ராஜா…தான் ;))

  அதுவும் அந்த சிவாஜியும் கமலும் மழை பெய்யும் பேசிக்கிட்டு இருப்பாங்க அந்த பின்னனி இசை இருக்கே…..அசத்தல் ;))

 • பிரபா இசைஞானியின் ராஜாங்கம் சைட்டில் சில‌ பின்னனி இசைகள் இருக்கின்றது அதனை தரவிறக்கம் செய்யலாம். குறிப்பாக தளபதி நாயகன் மற்றும் பாசில் படங்களில் ராஜா ராஜங்கமே நடத்தியிருப்பார்.

 • மைபிரண்டு

  தட்டாதவங்க தோள தட்டிடுங்க 😉

  முத்துலெட்சுமி

  மிக்க நன்றி கேட்டுக் கருத்தளித்ததற்கு

  கோகுலன்

  வருஷம் 16 மறக்க முடியுமா இதை

  சயந்தன்

  குருவியெல்லாம் உங்கட காலத்துக்கு முற்பட்டது, ரோபோ பாட்டு வரட்டும் தாறன்

  சுரேகா

  இதுக்காகவெல்லாம் மனம் தளரக்கூடாது

  இளா

  என்னது இது, இந்தச் சுலபமான படத்தையே சொல்லமுடியலப்பா

  ஒரு குழந்தை

  பெரியாக்களுக்கு வாய் காட்டக் கூடாது 😉

  நிஜமா நல்லவன்

  ஓவர் பீலிங்ஸ் உடம்புக்கு ஆகாதுப்பா 😉

  தல கோபி

  தேவர் மகனையும் ஒருமுறை தருவேன். மிக்க நன்றி தல

  வந்தியத்தேவன்

  ஆமாம் நானும் பார்த்திருந்தேன், கலக்கல் தொகுப்பு அது

 • நானும் பாதி கிணறு தாண்டி பாசில் படங்கறவரை மண்டைய பிச்சுகிட்டு யோச்சிசேன். அப்புறம் ம்முடியல.

  நல்லா மண்டை காய வெச்சீங்க பிரபா.

  ஆனாலும் நல்ல பாட்டைக் கொடுத்திருக்கீங்க

  நன்றி.

 • கலக்கல் காபி அண்ணாச்சி!
  கோபி சொன்னா மாதிரி அடிக்கடி ஆபீசுக்கு லீவு போடுங்க! நல்லாவே யோசிக்கறீங்க 🙂

  இதே போல், என்னைத் தாலாட்ட வருவாளா பாட்டும் கொடுங்க! ராஜா இதைச் சுகமாகவும் சோகமாகவும் மாறி மாறி கொடுத்திருப்பாரு படம் முழுக்க!
  ஜீவாவும் மினியும் அந்த வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் சீனில் வரும் பின்னணி இசை…இன்னும் என் மனசுக்குள் பட்டர்பிளை தான்! 🙂

 • புதுகைத் தென்றல்

  என்ன கொடுமை இது? உங்க காலத்துப் பாடலையுமா கண்டுபிடிக்க முடியவில்லை?

  கண்ணபிரான்

  காதலுக்கு மரியாதை மறக்கக்கூடிய இசையா அது? சர்வேசன் போல உங்களுக்கும் ப்ளாஷ்பேக் இருக்கு போல 😉
  கொசுறு: லீவு போட்டது நானல்ல தல கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *