அந்தப் பாட்டு: பாரிஜாதப் பூவே அந்த தேவலோக தேனேநேற்றுக் கேட்டிருந்த பாடல் புதிருக்குப் பல நேயர்கள் சரியான விடையளித்திருக்கின்றீர்கள்.

இதோ விளக்கத்துடன் கூட விடை.

அந்தப் பாடல் “பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே”

பாடல் இடம்பெற்ற திரைப்படம்: என் ராசாவின் மனசிலே

வெளிவந்த ஆண்டு: 1991

இப்பாடலைப் பாடியவர்கள் சுரேந்தர் மற்றும் சித்ரா.

பாடகர் சுரேந்தர் பாடகராகப் புகழடைந்ததை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் ராஜ்கிரண் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இயக்கியிருந்தவர் கஸ்தூரி ராஜா. இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது. படம் வெற்றியடையும் போது வரும் சர்ச்சை போல இந்தப் பட நாயகன் ராஜ்கிரணுக்கும் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும் டூ விட்டுக் கொண்டு போய்விட்டார்கள். அண்மையில் கூட ஒரு பேட்டியில் இன்றைய காலகட்டத்துக்கு “என் ராசாவின் மனசிலே” படத்தை எடுத்தால் ஊத்திக் கொண்டுவிடும் என்று பேட்டி கொடுத்து வெறுப்பேற்றினார் கஸ்தூரிராஜா

இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. இப்படத்தின் அறிமுக நடிகர் ராஜ்சந்தரும், இரண்டாவது நாயகியாக நடித்த சாரதா ப்ரீதாவும் படத்தில் பாடி ஆடியிருக்கின்றார்கள். (பாரதிய நவீன இளவரசே விளக்கம் தந்தாச்சு).

கைப்புள்ள சொன்னது போல் இந்த ராஜ்சந்தர் வால்டர் வெற்றிவேலில் சத்யராஜ் தம்பியாக நடித்திருப்பார். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள் 😉

பாடலைக் கேட்க

8 thoughts on “அந்தப் பாட்டு: பாரிஜாதப் பூவே அந்த தேவலோக தேனே

 • நன்றி. நல்ல பாடல்.
  S.N.சுரேந்தர் பாடி பிரச்சித்திபெற்ற இந்தப் பாடலைப் பல முறை கேட்டிருக்கிறேன்; என்றாலும், இதுவரை பார்த்ததில்லை.

 • முத்து லெச்சுமி அக்கா.. பாடல்கள் பழையவையாக இருந்தாலும் இனிமையா இருக்கு:)

 • நடிகர் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்றதும் ராஜ்கிரணின் எதோ ஒரு படம் என்று தெரிந்தது. பாட்டை தான் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று உங்கள் பதிவில் பார்த்துவிட்டேன்.
  சகாதேவன்

 • Dear Sir,

  In today’s world, every song from
  every movie is played in every satellite channel and FM radio.

  During my childhood days, 1980’s timeperiod, I used to listen to
  these songs in Vivithbharathi and
  also the 8PM or 9PM, sponsored
  programs (the so-called vilambara
  tharar valungum nigalchigal).

  Your collection of songs reminded
  me of those golden-olden days..
  Thanks.
  Sudharsan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *