சிறப்பு நேயர் “அய்யனார்”“தனிமையின் சிறகுகளை

விடுவித்துக் கொண்டது

காலம்

பாலை மணலுதறி

பசுஞ்சமவெளியில் தடம் பதிக்கிறேன்

நெடுகிலும் நின்று கொண்டிருக்கும்

துளிர்க்காத மரங்களிலெல்லாம்

நேரடியாய்ப் பூக்களைப் பிரசவிக்கின்றன

நானொரு பெண்ணின் விரல்களை

இறுகப் பற்றிக்கொள்கிறேன்…….”

மேற்கண்ட கவிதையையே தன் திருமணச் செய்தியில் கொடுத்திருந்த நம்ம நண்பர் அய்யனார் விஸ்வநாதன் இன்று கல்பனாவை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கின்றார்.

இவர்கள் இருவரும் மணமேடையில் இருக்கும் இந்த நேரம் சரியாக இந்தப் பதிவும் போடப்படுகின்றது.

முதலில் அய்யனார் – கல்பனா தம்பதிகள் நீடூழி காலம் நிலைக்கும் இன்பம் பொங்கும் இல்லற வாழ்வில் இனிதாய்க் கழிக்க வாழ்த்துகின்றோம். இவர்களுக்காக நாம் தரும் சிறப்புப் பாடல்

“நூறு வருஷம் இந்த

மாப்பிளையும் பொண்ணுந்தான்

பேரு விளங்க இங்கு வாழணும்”

16 thoughts on “சிறப்பு நேயர் “அய்யனார்”

 • 1- புத்தம் புது காலை
  சூப்பர் சாங். எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும் ஒரு பாடல்

  2- தூரத்தில் நான் கண்ட உன் முகம்
  மறந்து விட்ட பாடல். ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி. 🙂

  3- கனா காணும் கண்கள்
  இந்த பாடல் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். கானா அண்ணா, இந்த பாடல் எனக்கு மின்னஞ்சல் மூலமா அனுப்பி வைக்கவும். 🙂

  5- நதியிலாடும் பூவனம்
  சூப்பர் சாங் அகேயின். 🙂

 • அய்யனார் கல்பனா ஜோடிக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்து(க்)கள்.

  நதியிலாடும் பூவனம்….

  ஹைய்யோ சூப்பர் பாட்டு. இதுக்காகவே காதல் ஓவியம் வாங்கிவந்தேன்.

 • அய்யனாருக்கும் கல்பனாவிற்கும் திருமண வாழ்த்துக்கள்..:)

  பாட்டுக்களும் அருமை:)

 • நண்பர் அய்யனார்,திருமதி.கல்பனா அய்யனார் ஆகிய இருவருக்கும் எனது இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

  அனைத்து செல்வங்களும் பெற்று,சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

  என்றும் அன்புடன்,
  எம்.ரிஷான் ஷெரீப்

 • அய்யனார் கல்பனா தம்பதியர்க்கு வாழ்த்துக்கள். பிரபா உங்கள் அன்பும் ஊடார்ந்த அக்கறையும் பிரமிக்க வைக்கிறது.

 • “புத்தம் புது காலை” மிக அருமையான பாடல். ஜானகியின் குரலில் மயக்கும்.

  கனா காணும் கண்கள் மெல்ல பாடலும், காட்சியும், வரிகளும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நதியிலாடும் பூவனம் கண் மூடி ரசிக்க மத்தது மறந்து போகும்.

  ஒரு வானவில் போல மிக அருமையான பாடல் தெஇரிவுகள்.

  இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்.

 • அய்யனார்-கல்பனா தம்பதியர்க்கு மனமார்ந்த இல்லற வாழ்த்துக்கள்! இசை பட வாழ, இசைப் பதிவில் தொடங்குதா உங்க திருமணக் கச்சேரி? :-)) கானா அண்ணாச்சிக்கு ஒரு ஓ! :-))

  //எங்களால் அக்கடையை தொடர்ந்து நடத்த இயலவில்லை.//

  அதான் கடையின் நினைவுகளை இன்றும் நடத்துகிறீர்களே அய்யனாரே! நினவோ ஒரு சுகந்தம் அல்லவா!
  என்னாலும் முன் போல் புதுஜெர்சி FM ஸ்டேஷனுக்குச் செல்ல முடிவதில்லை! ஆனா அங்கு தொகுத்து வழங்கிய ஒவ்வொரு பாட்டும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவேன்! 🙂

  புத்தும் புது காலை is a great morning refresher!
  பூவில் தோன்றும் வாசம்
  அதுதான் ராகமோ, இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
  அதுதான் தாளமோ-ன்னு பூவை, பூ வை-ன்னு வரிகள் வரும்! இனிய பாட்டு!
  ஜானகி-இளையராஜா கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று! லா-லல-லா லா-ன்னு முடியும்! இதை மட்டுமே பல நேரம் ஹம் பண்ணிக்கிட்டு இருப்பேன்!

  இன்னொரு சேதி! இதை இளையராஜா கிட்ட இருந்து காப்பி அடிச்சி, கிசான் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கிட்டாய்ங்க! ஜாகே ஜாகே தின் ஹை! ஜாகே ஜாகே மன் ஹை! -ன்னு வரும் அந்த Ad :-))

  //கனா காணும் கண்கள் மெல்ல
  உங்களுக்கு சுமாராய் பாட வருமெனில் அருகில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு பாடுவது கைமேல் பலன்களைத் தரலாம்.//

  அட, இப்படி எல்லாம் கெளப்பி விட்டா எப்படி மாப்ளே? 🙂
  சரி இருங்க! இந்தப் பாட்டு நம்ம மோஸ்ட் பேவரிட்! ஒரு வாய் பாடிட்டு, அப்பறம் வந்து மீதி பாட்டுக்குப் பின்னூட்டுகிறேன்!

 • அய்ஸ்க்கு இங்கையும் ஒரு வாழ்த்துக்கள் ;))

  அனைத்து பாடல்களும் அருமை அய்ஸ்….நீங்கள் பாடல்களை எந்த அளவிற்க்கு ரசித்திருக்கிறிர்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பாடலை கேட்கும் போது தெரிகிறது :))

 • 1. 1.புத்தம் புது காலை

  காலையில் வந்தவுடன் இந்த பாடலை கேட்கும் போது…ஆகா..ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை போங்க…அந்த புல்லாங்குழலின் ஒலி…அருமை…நல்ல ரசிகன்ய்யா நீ ;))

  2.தூரத்தில் நான் கண்ட உன் முகம்

  என்ன சொல்ல இந்த பாடலை பத்தி…இப்போது தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது…என்ன ஒரு அருமையான பாடல்.

  \அதிர்வுகளை ஏற்படுத்தும் பாடலென்று சொல்லலாம் தனிமையும் ஏக்கமும் காத்திருப்பும் ததும்பி வழியும் ஒரு மாதிரி பித்துப் பிடிக்க வைக்கும் பாடலிது.\

  உண்மை தான்…அய்ஸ் இசையும் குரலும்…ஆகா…உங்களுக்கும் தல கானாவுக்கும் ஒரு சிறப்பு நன்றி ;))

  3.ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்

  நல்ல பாடல்…;))

  4.கனா காணும் கண்கள் மெல்ல
  \தலைவன் மடியில் மகளின் வடிவில் உறங்கும் சேயோ எனும்போது இன்ம்புரியாத பரிவு மெல்ல வந்து படரும் . \

  மம்ம்ம்ம்…..அழகாக சொல்லியிருக்கிங்க…எனக்கு பிடித்த பாடலும் கூட ;))

  5.நதியிலாடும் பூவனம்
  காதல் ஓவியத்தில் அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும். பாடலுக்காவே ஓடிய படம் ஆச்சே அது ;))

  அனைத்து பாடல்களும் அழகு அய்ஸ்…ரசித்தேன் 😉
  தலைவருக்கு என்னோட நன்றிகள் 😉

 • அய்யனாருக்கு வாழ்த்தைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. கூடவே அவர் சிலாகித்திருக்கும் பாடல்களைப் பற்றியும் சொல்லலாம்லே 😉

  கண்ணபிரான்

  பார்ட் 2 கொடுக்கிறதுக்கு வருவீங்க என்று சொன்னீங்க, ஆளையே காணல

 • நதியில் ஆடும் பூவனம் நான் விரும்பி ரசிக்கிற பாடல்களில் ஒன்று… ராதா ஒரு தேவதை போல இருப்பார் அந்த பாடலில்…

 • புத்தம்புது காலை பாடலும் பிடித்துப்போன பாடல்… மற்றய பாடல்களோடு அவ்வளவாக பரிச்சயம் கிடையாது… இன்னொரு முறை கேட்டுவிட்டு சொல்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *