சிறப்பு நேயர் – ஜீவ்ஸ்

இசைப் பிரியர்களுக்காக றேடியோஸ்பதியின் வலைப்பதிவு காலத்துக்குக் காலம் புதிய தொடர்களை அறிமுகப்படுத்தி வந்திருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் முயற்சியாக இன்று முதல் அறிமுகப் படுத்தப்படும் தொடர் ” றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர்”.

இந்தத் தொடரில் நீங்களும் பங்கேற்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியவற்றைக் கீழே தருகின்றேன்.

1. உங்கள் ஆயுசுக்கும் பிடிச்ச பாட்டுக்கள் ஐந்தைத் தேர்ந்தெடுங்கள்.
2. தேர்ந்தெடுத்த பாடல்களின் சிறப்பை உங்கள் எழுத்து நடையில் அவற்றைச் சிலாகித்து
எழுதுங்கள்.
3. பின்னர் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்.
4. அனுப்பப்படும் பதிவர் வரிசைப்படி இந்தப் பாடல் தொகுப்பு இடம்பெற இருக்கின்றது.

பாடல்கள் மீதான ரசனையை மேம்படுத்தும் விதத்தில் இந்தத் தொடர் உங்கள் ஆதரவோடு இடம்பெற இருக்கின்றது. அந்த வகையில் இந்த முதல் பதிவின் பிள்ளையார் சுழியாக
“றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராகச்” சிறப்பிக்கப்படுகின்றார் பதிவர், நண்பர் “ஜீவ்ஸ்“.
எண்ணங்கள் இனியவை, தமிழில் புகைப்படக்கலை, இயன்றவரையிலும் இனிய தமிழில் ஆகிய வலைப்பதிவுகளில் தன் கைவண்ணத்தைக் காட்டும் இவர் தேர்ந்தெடுத்த ஐந்து பாடல்களையும் பார்ப்போம் இனி. இப்பதிவைச் சிறப்பித்த ஜீவ்ஸ் இற்கு இனிய நன்றிகள்.

படம் நினைவெல்லாம் நித்தியா ..

இந்தப்பாடல் கேக்கும் போதெல்லாம்… மனசை அள்ளிட்டுப்போகும்.

இளையராஜாவின் இசையில் அற்புதமா வந்திருக்கும்.

” ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்.. பொன்மேகம்”…

இதில் எனக்குப் பிடித்த வரிகள்

” வசந்தங்கள் வாழ்த்தும் பொழுதில் உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் வரையில் மகிழ்ந்து உனக்கு வேராவேன்”

இன்பத்திலும் துன்பத்திலும் உனக்கு உறுதுணையா இருப்பேன்னு இதை விட
அழகா சொல்ல முடியுமா ?

Get this widget | Track details | eSnips Social DNA

******************

படம்: மன்னாதி மன்னன்
பப்பியம்மாவின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒண்ணுன்னு தான் சொல்லுவேன்.

காட்சியமைப்பும் நடிப்பும் அட்டகாசம். பாடல்வரிகள் கண்ணதாசன்.

கண்கள் இரண்டும் என்று
உன்னைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?

இதுல தனிப்பட்டு எந்த வரிகளைச் சொல்லறது. ? படத்தின் சில பகுதிகளைப் பாடலே நகர்த்திச் செல்லும்

” கணையாழி இங்கே.. மணவாளன் எங்கே.. காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே “

எல்லாத்தையும் விட இந்தப்பாட்டுல வசீகரம் செய்யறதுன்னா .. சுசீலாம்மாவோட குரல் தான்.

Get this widget | Track details | eSnips Social DNA

******************

“கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)”

பாவாடை காற்றோடு ஆட-ஆட
பருவங்கள் பந்தாட ஆட-ஆட “

விரசமே இல்லாமல் பருவத்தின் இளமையை அதன் அழகை சொல்லும் பாங்கு… கவியரசு கவியரசு தான்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு தமிழின் சுவையும் இனிமையும் நெஞ்சினுள்ளே இனிக்கும்.

இந்தப்பாடலிலே கவியரசர் செய்த சறுக்கல் என்று அவரே சொன்னதாகப் படித்தேன். அது பின் வரும் வரிகள் தாம்

“பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! “

பல்லாடுவது ஒன்று கிழவிக்கு அல்லது குழவிக்கு.. குமரிக்குப் பல்லாடலாமா?

Get this widget | Track details | eSnips Social DNA

***********************

ஓ மனமே.. ஓ மனமே..
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே.. ஓ மனமே..
சில்லு சில்லாய் உடைவது ஏன்

மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளியைத் தந்தது யார்
பூக்கள்தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்?

ஒரு வாரத்தில் கிட்ட தட்ட 15 முறை நான் பார்த்தப் படம் இது வரைக்கும் இது மட்டுமே

ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதே அந்தக் கல்லூரிச்சூழலில் நாம் இருப்பதைப் போல்
உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியலை. முக்கியமாய் இந்தப் பாடல்.

இரைச்சலில்லாத இசையை மீறி காதில் தெளிவாக கேட்கும் பாடல் வரிகளுக்காகவே இதை பலமுறைக் கேட்கலாம்.

ஜீவா – ஒரு அருமையான இயக்குனரைத் தமிழ் திரையுலகம் இழந்து நிற்கிறது.

” துளைகள் இன்றி நாயனமா ?”

Get this widget | Track details | eSnips Social DNA

***********************

குமுதம் படத்துல இருந்து.

” மாமா மாமா மாமா ..
ஏம்மா ஏம்மா ஏம்மா “

நடிகவேள் நடிச்சிருக்கும் படம். எவ்வளவு பழைசு.. இருந்தாலும்.. இன்னைக்கும் இந்தப் பாட்டுக் கேக்கும்போதே எழுந்து ஆடத்தோனும்.
இந்தப்பாட்டுல எம்.ஆர். ராதாவும் சில இடத்துல ஆடிருப்பார்.

இனிமையான இசை. இன்றைய சினிமாக்காரர்களின் வார்த்தையில்.. செமக் குத்தாட்டம். அதே நேரம் காதில் தெளிவாக விழும்
பாடல் வரிகள்.

ஹ்ம்ம்ம்… இன்றைய சினிமா எவ்வளவு தூரம் உச்சரிப்பிலும், பாடல் வரிகளில் இருந்தும் விலகி இரைச்சலுக்கு முக்கியம் கொடுத்துக்
கொண்டிருக்கிறது.

Get this widget | Track details | eSnips Social DNA

28 thoughts on “சிறப்பு நேயர் – ஜீவ்ஸ்

 • வெறும் 5 தானா?ஒரு 50 கேட்க வேண்டாமா?எங்க ரேஞ்சுக்கு இது எல்லாம் ரொம்ப கம்மி சொல்லிட்டேன்.

  புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

 • பிரபு,

  இலங்கை வானொலியில் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கிறேன்.

  திரும்பவும் ரேடியோஸ்பதியில்…..

  வாழ்த்துக்கள்! நண்பரே!

 • டம டம டம டம டம டம டம
  வலையுலக பதிவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த 5 திரைப்பட பாடல்களைத் தொகுத்து, பிடித்ததற்கான காரணத்தையும் ஒரு சிறு குறிப்பாக எழுதி அனுப்பினால், நண்பர் கானா பிரபா அப்பாடல்களை ஒலி பரப்பி உங்களுக்கு மகிழ்வூட்டுவார். நன்றி.

  பதிவும் பின்னூட்டமும் ஒரே மாதிரி இருக்கா – என்ன செய்யுறது

 • //புதுகைத் தென்றல் said…
  பாடல் தெரிவும், விளக்கமும் அருமை. மிக ரசித்தேன்.//

  வாங்க புதுகைத் தென்றல்

  அடுத்தது உங்களோட படைப்பு தான்

  //துர்கா said…
  வெறும் 5 தானா?ஒரு 50 கேட்க வேண்டாமா?எங்க ரேஞ்சுக்கு இது எல்லாம் ரொம்ப கம்மி சொல்லிட்டேன்.//

  சிஸ்டர்

  முதல்ல அஞ்சை அனுப்புங்க பார்க்கலாம் ;-0

 • // veyilaan said…
  பிரபு,

  இலங்கை வானொலியில் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கிறேன்.

  திரும்பவும் ரேடியோஸ்பதியில்…..//

  வாங்க நண்பா

  இலங்கை வானொலியில் இவ்வார நேயர் என்று இதே பாணியில் சிறப்பான நிகழ்ச்சி இருக்கும். உங்க படைப்பையும் எதிர்பார்க்கின்றேன்

  //cheena (சீனா) said…
  டம டம டம டம டம டம டம
  வலையுலக பதிவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.//

  மேலதிக விளம்பரத்துக்கு நன்றி சீனா சார் 😉

 • எல்லாமே அருமையான பாடல்கள். ஜீவ்சின் தேர்வும் அருமை. எந்தப் பாட்டும் பிடிக்காதுன்னு யாரும் சொல்ல முடியாத அளவுக்கு எடுத்துக் குடுத்திருக்காரு. நல்ல பாடல்கள். நல்ல முயற்சி.

 • தலைவரின் புதிய முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள் ;))

  ஜீவ்ஸ் அருமையான தொகுப்பு :))

  \பல்லாடுவது ஒன்று கிழவிக்கு அல்லது குழவிக்கு.. குமரிக்குப் பல்லாடலாமா? \

  அட ஆமால்ல !!!

  \ஒரு வாரத்தில் கிட்ட தட்ட 15 முறை நான் பார்த்தப் படம் இது வரைக்கும் இது மட்டுமே \

  ஜீவ்ஸ் நமக்கு அந்த அளவுக்கு வசதியில்லை அதான் டிவிடியே வாங்கிட்டேன்…:))

  அற்புதமான திரைகதை, அதை அழகாக எடுத்திருப்பாரு ஜீவா 😉

  \ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதே அந்தக் கல்லூரிச்சூழலில் நாம் இருப்பதைப் போல்
  உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியலை. முக்கியமாய் இந்தப் பாடல். \

  உண்மையிலும் உண்மை ;))

 • wow ..கண்டிப்பா இந்தவாய்ப்பை பயன்படுத்துவேன்… ஜீவ்ஸ் தேர்வுகள் பிரமாதம் .. ரெண்டுவரி எடுத்து அதுக்கு ஒருரென்டுவரி கமெண்ட் குடுத்துருக்காரே அதுவும் பிரமாதம்..

 • பிரபா அண்ணாச்சி.. ரொம்ப நன்றிங்க 🙂

  மொத்தம் அஞ்சுன்னு கையைக் கட்டிப் போட்டுட்டீங்க.. இல்லாட்டி நிறையப் பாடல்கள் இருக்கே. ஆயுசுக்கும் பிடிச்ச பாடல்கள் ஒரு 150க்கும் மேலே இருக்குமே 😉

 • ஐந்து பாடல்களும் அருமையான பாடல்கள்.
  இந்தப் பாடல்களோடு போட்டி போட வேண்டும் என்றால் கறுப்பும் வெள்ளையுமான படங்களைத்துணைக்கு அழைக்க வேண்டியதுதான்:)

 • //புதுகைத் தென்றல் said…

  பாடல் தெரிவும், விளக்கமும் அருமை. மிக ரசித்தேன்.//

  நன்றி புதுகைத் தென்றல்

  //G.Ragavan said…

  எல்லாமே அருமையான பாடல்கள். ஜீவ்சின் தேர்வும் அருமை. எந்தப் பாட்டும் பிடிக்காதுன்னு யாரும் சொல்ல முடியாத அளவுக்கு எடுத்துக் குடுத்திருக்காரு. நல்ல பாடல்கள். நல்ல முயற்சி.//

  நன்றி ராகவன். 🙂

  //
  ஜீவ்ஸ் நமக்கு அந்த அளவுக்கு வசதியில்லை அதான் டிவிடியே வாங்கிட்டேன்…:)) //

  அண்ணாச்சி — நமக்கும் அந்த வசதி இல்லீங்க.. ஃப்ரண்டு கிட்ட இருந்து வாங்கின சீடியே இத்தனை தடவை பாத்து .. இதுக்கு மேல பாத்தா தாங்காதுன்னு உடனடியா திருப்பிக் கொடுத்துட்டேன். 😉

  //முத்துலெட்சுமி said…

  wow ..கண்டிப்பா இந்தவாய்ப்பை பயன்படுத்துவேன்… ஜீவ்ஸ் தேர்வுகள் பிரமாதம் .. ரெண்டுவரி எடுத்து அதுக்கு ஒருரென்டுவரி கமெண்ட் குடுத்துருக்காரே அதுவும் பிரமாதம்..//

  நன்றி முத்துலட்சுமி 🙂

  //இலவசக்கொத்தனார் said…

  எல்லாம் நல்ல பாட்டுத்தான். ஆனா இப்படி பிளாக் அண்ட் வொயிட் பாட்டாப் போட்டு உம்ம வயசைக் காமிச்சுட்டீரே…//

  ஏங்கானும்.. உம்மோட நுண்ணரசியல இங்கேயும் ஆரம்பிக்காதீரும்.. பாட்டுக்கு எங்கவோய் கருப்பு வெள்ளை, கலருன்னு ? அருமையான பாட்டு எப்பவுமே அருமைதானே ஸ்வாமி 🙂

  என்னைக்கோ பாடின ” அலைபாயுதே ” இன்னைக்கும் கேக்கலையா.. அத கேக்கறவங்க எல்லாரும் வயசானவங்களா ?

  //குசும்பன் said…

  நீங்க சொல்லி இருக்கும் முதல் பாட்டு எனக்கும் பிடித்தது!!!//

  நன்றி குசும்பன்.. கூடிய விரைவில் உம்மோட லிஸ்டையும் போடுவீர் தானே

  அன்புடன்
  ஜீவ்ஸ்

 • அதெல்லாம் சரி போட்டோவிலே மங்கி குல்லாவும், பில்லா ஸ்டைல் கூலிங் கிளாஸ்’ம் போட்டுக்கிட்டு போஸ் கொடுக்கிற ஹீரோ யாரு சாமி???? 🙂

 • ரொம்ப நல்ல ஐடியா அண்ணாச்சி!!
  இந்த தொடர் மூலமாக நம் பதிவர்களிடமிருந்து அழகழகான பாடல்களை கேட்க பெறலாம் என் நம்புகிறேன்!!

  ஜீவ்ஸ் அண்ணாச்சியா இது???
  தெரியாம ஏதாச்சும் ஹீரோ போட்டோ போட்டுட்டீங்கன்னு நெனைச்சேன்!!
  😛

  அண்ணாச்சியின் தேர்வுகளும் அற்புதம்.

  வாழ்த்துக்கள்!! 🙂

 • //இப்படி பிளாக் அண்ட் வொயிட் பாட்டாப் போட்டு உம்ம வயசைக் காமிச்சுட்டீரே…//

  இதை நான் வழிமொழிகிறேன்.. 🙂

 • நல்ல முயற்சி பிரபா,

  பாடல்கள் பாடியோர், இசை போன்ற விவரங்களையும் தந்தால் நல்லது.

  எனது ஐந்து தெரிவுகளை விரைவில் அனுப்பி வைக்கிறேன். தேடிப்பிடிப்பது உங்கள் வேலை:)

 • //ஜீவ்ஸ் தேர்வுகள் பிரமாதம் .. ரெண்டுவரி எடுத்து அதுக்கு ஒருரென்டுவரி கமெண்ட் குடுத்துருக்காரே அதுவும் பிரமாதம்..//
  repeatu 🙂

  annanuku aana puthu paatu thaan onnum pidikaathu pola.. 😀

 • ////துர்கா said…
  வெறும் 5 தானா?ஒரு 50 கேட்க வேண்டாமா?எங்க ரேஞ்சுக்கு இது எல்லாம் ரொம்ப கம்மி சொல்லிட்டேன்.////

  தங்க்ஸ்க்கு ஒரு ரிப்பீட்டேய்…. 🙂

 • இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே! ஒருத்தர் எத்தனை தடவை அனுப்பலாம், ஒரு வாரத்துக்க்கு எத்தனை பதிவுன்னு சொல்லவே இல்லையே? 🙂

 • //காயத்ரி said…

  //இப்படி பிளாக் அண்ட் வொயிட் பாட்டாப் போட்டு உம்ம வயசைக் காமிச்சுட்டீரே…//

  இதை நான் வழிமொழிகிறேன்.. :)//

  கவிதாயினி அவர்களே.. இப்படிக் கலாய்த்தால் உங்களின் கவிதைக்கு எதிர் கவிதை போடவேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்.

  //Dreamzz said…

  //ஜீவ்ஸ் தேர்வுகள் பிரமாதம் .. ரெண்டுவரி எடுத்து அதுக்கு ஒருரென்டுவரி கமெண்ட் குடுத்துருக்காரே அதுவும் பிரமாதம்..//
  repeatu 🙂

  annanuku aana puthu paatu thaan onnum pidikaathu pola.. 😀

  // யூ டூ ட்ரீம்ஸ் 🙁

  சீ.வீ.ஆர். அன்ட் ராம் :

  ரொம்ப கலாய்ச்சா நான் அழுதுடுவேண் :((

  ஜீவ்ஸ்

 • ஆகா மூச்சு வாங்குறதுக்குள்ள இவ்வளவு பேர் வந்து போயிட்டீங்களா, நம்ம தல ஜீவ்ஸ் நாயகனாக நடிச்சா படம் சூப்பர் ஹிட்டு தான். பதிவை வாசித்துக் கருத்திட்ட அனைத்து உள்ளங்கலுக்கும் நன்றி. மறந்திடாமல் உங்கள் தெரிவுகளையும் அனுப்பி வையுங்கள்.

 • ஜீவ்ஸ் பாடல் தெரிவுகள் அந்தமாதிர!!

  ஓ மனமே அப்புறம் கட்டோட குழலாட எனக்குப் பிடிச்ச பாட்டு…அடுத்த நேயர் நான்தானே?

 • அடடா..என் லிஸ்ட்-ல இருந்து ஜீவ்ஸ் கொஞ்சம் திருடிட்டாரு..5ல் 4 எனக்கு ரொம்ப பிடிச்சுது…நன்றி ஜீவ்ஸ் & பிரபா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *