துபாயில் பாடிய நிலா பாலு

ஆறு தேசிய விருதுகள் வாங்கியிருக்கின்றார்,
23 மாநில விருதுகள் வாங்கியிருக்கின்றார்,
ஒரே நாளில் தமிழில் 18 பாட்டு பாடியிருக்கின்றார்,
ஒரே நாளில் ஹிந்தியில் 19 பாட்டு பாடியிருக்கின்றார்,
ஒரே நாளில் உபேந்திராவின் கன்னடப்படத்துக்காக கம்போஸ் பண்ணி
17 பாட்டு பாடியிருக்கின்றார்,

The Legend,
one and only
பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் துபாயில் நடந்த இளையராஜாவின் இசைப்படையெடுப்பில் பாட வந்தபோது நடிகர் ஜெயராம், மற்றும் நடிகை குஷ்பு வழங்கும் அறிமுகத்தோடு மேடையில் பாடிய பாடல்களான “இளையநிலா பொழிகிறது”, மற்றும் “பொத்தி வச்ச மல்லிக மொட்டு” பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
இவ் ஒலிப்பதிவைத் தந்துதவிய நண்பர் கோவை ரவிக்கும் இனிய நன்றிகள்.

Get this widget Track details eSnips Social DNA

8 thoughts on “துபாயில் பாடிய நிலா பாலு”

 1. தல

  கிட்ட இருந்து அனுபவிச்சிருக்கேன். என்ன சொல்லறதுன்னு தெரியல…சூப்பர் தொகுப்பு தல 😉

  நண்பர் கோவை ரவிக்கும் என்னோட நன்றிகள் 😉

 2. ரெண்டுமே அருமையான பாட்டுகள். இளையராஜா இசையில வந்த அருமையான பாட்டுகள். பாடலைப் பதிவு செய்து தந்த கோவை ரவிக்கும் பதிவு செய்து இட்ட பிரபாவிற்கும் நன்றி.

 3. பிரபா சார்,

  //இவ் ஒலிப்பதிவைத் தந்துதவிய நண்பர் கோவை ரவிக்கும் இனிய நன்றிகள்.//

  அடடா 18ஆம் தேதியே உடனே பதிவா போட்டுடீங்களா? உங்களூக்கு சுட்டி அனுப்பியது சுத்தமாக மறந்தே போச்சு சார். பாலுஜி பிப்ரவரி 17ஆம் தேதி வருகை தருவதால் அவருடைய அபிமான ரசிகர்களின் சாரிட்டியின் வருடாந்திர சந்திப்பு கோவையில் இந்த தடவை வைத்துள்ளார்கள். அந்த சந்திற்பிக்கான சில பொருப்புகள் என்னிடம் தந்திருக்கிறார்கள் அதனால் உடனே உங்கள் இந்த பதிவை பார்க்க முடியவில்லை இன்று ஞாயிற்றுகிழமை என் சகோதரரின் நிறுவனத்தின் கணக்குகள் பதியவேண்டியதில் இணையத்தில் இன்று தான் பார்க்க நேர்ந்தது முதலில் மேலோட்டமாக நீங்கள் ஏற்கெனவே போட்ட பதிவு என்று இருந்து விட்டேன் இருந்தாலும் உள்ளே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த பதிவை நான் சுந்தரின் பா.நி.பாலுவின் பதிவில் போடலாம். நீங்கள் இந்த ஒலிக்கோப்பை பதிவது தான் சிறப்பு என்று. உங்களூக்கு அனுப்பினேன் சுத்தமாக மறந்து விட்டது மன்னிக்கவும். முழுபதிவாக கோப்பை சேகரிக்க முடியவில்லை ஏனென்றால் ஏகப்பட்ட தடங்கள்கள் மின்சாரம் வீட்டில் விருந்தினர் அதனால் சிலது தான் என்னால் முடிந்தது. உடனே இந்த ஒலிக்கோப்பை பதிந்து ஆதரவு கொடுத்தற்க்கு மிக்க நன்றி. இந்த ஒலிக்கோப்பை கேட்டு அன்பை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இதில் அதிசயம் என்னவென்றால் இந்த தளத்திற்க்கு முதன் முதலாக இந்த பதிவில் தான் நுழைந்துள்ளேன்.

 4. ரவி சார் மற்றும் பனிமலர்

  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *