நீங்கள் கேட்டவை 25

மீண்டும் ஒரு நீங்கள் கேட்டவை தெரிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பாடல் தெரிவுகளும் இயன்றவரை அரிதான ஆனால் இனிமையான பாடல்களாகத் தருகின்றேன். கடந்த பாடல் தெரிவில் விருப்பத்தைக் கேட்ட நேயர்களில் சிறீகாந்த் இன் பாடல் தெரிவுகள் மட்டும் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. ஏனையோரில் ஐந்து பேரின் விருப்பப் பாடல்களோடு என் விருப்பமும் இணைந்து வருகின்றது.

முதலில் என் விருப்பமாக “அறுவடை நாள்” திரைக்காக இசைஞானியின் இசைமைத்துப் பின்னணி ஹோரஸ் கொடுக்க சித்ரா பாடும் “தேவனின் கோயில் மூடிய நேரம்” என்றதோர் இனிய பாடல். இந்தப் பாடலை எத்தனை முறையும் அலுக்காது கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் மேடைகளில் பாடப்படுவது வெகு அரிது.

அடுத்து ஒரு மலையாளப் பாடல். றேடியோஸ்பதியின் பெருமைக்குரிய கொ.ப.செ கோபியின் விருப்பமாக மல்லுவூட்டின் All time favourite ஆன “தும்பி வா, தும்பக் குளத்தே” என்று எஸ்.ஜானகி பாட இளையராஜா இசையமைப்பில் “ஓளங்கள்” திரைக்காக இடம்பெறுகின்றது.

காமிரா கவிஞர் சிவிஆர் விரும்பிக் கேட்ட “பாஞ்சாலங்குறிச்சி” திரைப்பாடல் சுவர்ணலதா குரலில் தேவா இசையமைப்பில் வருகின்றது. தன் விருப்பமாக மட்டுமன்றி இசைப்பிரியர்களுக்கும் இந்தப் பாடல் சென்றடைய வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் இந்த indoor & outdoor ஸ்பெஷலிஸ்ட் 😉

தங்கமலை ரகசியம் திரையில் இருந்து ஒரு தங்கபுதையலைக் கேட்டிருக்கின்றார் வசந்தன்.
பி.சுசீலா பாடும் “அமுதைப் பொழியும் நிலவே” என்ற அந்தப் பாடலை ரி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருக்கின்றார்.

இன்று தொடந்து ஒரே தனிப் பெண் குரல் பாடல்களாக ஒலிக்கிறதே என்று சலிப்பவர்களை ஆறுதல்படுத்த நிறைவாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் ஜோடிப்பாடல் ரிஷான் ஷெரிப் விருப்பமாக “அண்ணா நகர் முதல் தெரு” திரையில் இருந்து சந்திரபோஸ் இசையில் “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டாக” ஒலிக்கின்றது.

பாடல்களைக் கேட்பதோடு உங்கள் விருப்பப்பாடல்களையும் அறியத் தாருங்கள். இலகுவில் கிடைக்காத அரிய பாடல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேடித் தருகின்றேன். அவற்றுக்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படுவதையும் பொறுத்தருள வேண்டுகின்றேன்.

21 thoughts on “நீங்கள் கேட்டவை 25

 • என் விருப்பப்பாடலை பதிவிட்டதற்கு நன்றி அண்ணாச்சி!!
  எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு,இந்த பாஞ்சாலங்குறிச்சி பாட்டு!!
  அந்த படத்தில் வரும் “உன் உதட்டோர செவப்ப” என்ற பாடல் தான் எங்கு சென்றாலும் கிடைக்கும்,எல்லோருக்கும் தெரிந்த பாட்டு!!
  ஆனால் எனக்கு அந்த படத்தில் பிடித்த பாட்டு இதுதான்!!
  எங்கு தேடியும் கிடைக்கவில்லை!!
  தேடித்தந்ததற்கு நன்றி!! 🙂

 • தல

  ஏதே எதிர்கட்சி சதின்னு நினைக்கிறேன்…எனக்கு மட்டும் தெரியல…;((

  நம்ம பாட்டையும் போட்டதற்க்கு நன்றி தல …! ;))

 • வாங்க காமிரா கவிஞரே

  உங்க புண்ணியத்தில நல்ல பாட்டைக் கேட்போமே

 • கானா,

  “அமுதைப் பொழியும் நிலவே” அருமை!!
  அந்தப் பாடல் எங்களிடம் இல்லை. தங்கமணியும், நானும் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறோம். நன்றி!!

  “தும்பிக்குப்” பதில், “தேவனின் கோயில்தான்” மறுபடியும் கேக்குது 🙂

 • //கோபிநாத் said…
  தல

  ஏதே எதிர்கட்சி சதின்னு நினைக்கிறேன்…எனக்கு மட்டும் தெரியல…;((//

  தல

  என்ன கொடுமை கோபி இது அப்படினு சொல்ல வைக்காதீங்க, மீண்டும் முயற்சி பண்ணிப் பாருங்க.

 • //தஞ்சாவூரான் said…
  கானா,

  “தும்பிக்குப்” பதில், “தேவனின் கோயில்தான்” மறுபடியும் கேக்குது :)//

  வாங்க தஞ்சாவூர்காரரே

  சரியான பாட்டைப் போட்டாச்சு, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி 😉

 • அமுதைப் பொழியும் அருமை..

  என் பாட்டு ஒன்னு இன்னும் வரலைன்னு நினைக்கிறேன்… வந்து நான் தான் கவனிக்காம விட்டுட்டேனா.. ?

 • எல்லாமே நல்ல பாட்டுங்க.

  தேவனின் கோவில்….அருமையான பாட்டு…அதுல ப்ரேம ப்ரேம ப்ரேமாதி ப்ரேமம்னு வர்ரது எனக்குப் பிடிக்காது. ஆனா அடுத்து சித்ரா தேவனின் கோயில்னு தொடங்குனதுமே அள்ளிக்கிட்டுப் போகும். என்ன அருமையான மெலடி.

  தும்பி வா பாட்டும் அருமைதான். ஆனா அந்தப் பாட்டு வரலை. திரும்ப ப்ரேம ப்ரேம ப்ரேமாதி பாட்டுதான் வருது.

  ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டச் சொல்லி ஆசப்பட்டேன்……எவ்வளவு நாளாச்சு. அருமையான பாட்டுங்க. சொர்ணலதாவின் குரல்ல ரொம்ப அருமையா இருக்கு. நினைவு படுத்திய சிவியாருக்கும் பாட்டைக் குடுத்த உங்களுக்கும் நன்றி.

  அமரா மதுரா ப்ரேமா நீ பா பேக சந்த மாமா…என்ன பாக்குறீங்க? அமுதைப் பொழியும் நிலவேதான். கன்னடத்தில். ரத்னகிரி ரஹஸ்யா 🙂 அதே கதைதான். டி.ஜி.லிங்கப்பாதான். இசையரசியேதான்.

  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்….இளையராஜான்னு எழுதீட்டீங்க. மெல்லிசை மன்னரும் நல்ல பாட்டுங்க குடுத்திருக்காருங்க 🙂

  மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு….என்னோட ஆல் டைம் ஃபேவரிட்ல ஒன்னு. ஹாட்ஸ் ஆஃப் சந்திரபோஸ்.

 • ரொம்ப நன்றி மை பிரண்ட் 😉

  வணக்கம் முத்துலெட்சுமி

  உங்க பாட்டு அரியர்ஸ் வைக்கல போலிருக்கு, எதுக்கும் ஒருமுறை செக் பண்றேன். உன்னிடத்தில் பாட்டு மற்றும் தும்பி வா பாட்டை இன்னும் சில மணி நேரத்தில் மீள ஏற்றுகின்றேன்.

 • முதல் பாட்டு அருமை, பாடல்களுக்கு நன்றி கானா.

  உன்னிடத்தில் என்னை கொடுத்து 2 வரி தான் பாடியது.

 • முத்துலெட்சுமி, ராகவன், பனிமலர், மற்றும் சர்வேசன்

  தங்கள் வருகைக்கு நன்றிகள்.

  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற பாட்டை மீளவும் அடுத்த பதிவில் கொடுக்கின்றேன்.

  சர்வேசன், நீங்க கேட்ட பாட்டு வரும் 😉

  ராகவன், தும்பி வா பாட்ட இப்ப கேட்கலாம், விரிவான உங்கள் அலசல் வழக்கம் போல் சிறப்பு, மிக்க நன்றி

 • வாவ்..பிடித்த பாடகிகளின் பாடல்களாகப் போட்டு காது குளிர வைத்ததற்கு நன்றி!

 • வருகைக்கு நன்றி தங்க்ஸ்

  உங்க பாட்டை தொழில்நுட்பச் சிக்கலால் தரமுடியவில்லை, அடுத்த பதிவில் தருகின்றேன்.

 • எனது அடுத்த தெரிவுகள் :
  1.கங்கை நதியே கங்கை நதியே (படம்-காதலே நிம்மதி, எஸ்.பி.பி / ஸ்வர்ணலதா எந்தப்பாடலானாலும் ஓ.கே)

  2.வசந்தமே அருகில் வா…
  நெஞ்சமே உருக வா…
  (படம் என்னவென்று தெரியவில்லை.பாடியவர் எஸ்.பி.பி.
  ஒரு பௌர்ணமி நள்ளிரவில் தூரத்தில் எங்கேயோ மெல்லிசையாக இப்பாடல் கேட்டேன்.மிக ரம்மியமாக இருந்தது நண்பரே)

 • நண்பரே – மிக்க நன்றி – பதிவர்களின் நேயர் விருப்பத்தை நிறைவேற்றும் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்.

 • இமைகள் படத்திலிருந்து மாடப் புறாவோ மஞ்சள் நிலாவோ பாடல் அருமையான பாடல்

  நெஞ்சங்கள் என்ற படத்திலிருந்து ஒரு அருமையான பாடல் உள்ளது

  உறங்காத நினைவுகள் படத்திலிருந்து மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை பாடலும் அருமையான பாடல்

  தரவிறக்கம் கிடைக்குமா?
  தங்கள் தலத்தில் கேட்க வாய்ப்பு கிட்டுமா?

 • வணக்கம் நண்பா

  கூடிய சீக்கிரம் அந்தப் பாடல்களைத் தருகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *