80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1


இந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,

“அம்மா பிள்ளை” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “இனிய தென்றலே இரு கைகள் வீசி வா” என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.

வி.குமார் இசையில் “மங்கள நாயகி” திரைப்படத்தில் இருந்து “கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை ” என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது “உன்னிடம் மயங்குகிறேன்” பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.

ராம் லக்ஷ்மன் இசையமைக்க “காதல் ஒரு கவிதை” திரைப்படத்தில் இருந்து “காதல் பித்து பிடித்தது இன்று” என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉

7 thoughts on “80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1

 • ஆகா…எம்பதுகளின் அபூர்வ பாடல்களா…காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.

  அம்மா பிள்ளை பாட்டக் கேட்டதும் தோணுதே..அது சங்கர் கணேஷ்தான்னு. நல்ல பாட்டுங்க.

  நீங்க சொன்ன மாதிரி…உன்னிடம் மயங்குகிறேன் பாட்டை அப்படியே போட்டிருக்காரு குமார். ஏசுதாஸ் அதைச் சுட்டிக் காட்டலையா! ஆச்சரியந்தான்.

  தில்தீவானா…ஆகா..எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. ரொம்ப ரொம்ப.

 • இனிமையான பாடல்கள்,தூங்குவதற்கு முன் கேட்க மனது அமைதியானது.
  பதிவிட்டதற்கு நன்றி! 🙂

 • அதுவும் “மைனே பியார் கியா” படம் எனக்கு மிக பிடித்த பாடல்கள் நிறம்பிய படம். அந்த பாடலை அழகு தமிழில் கேட்க மேலும் இனிமை!! 🙂

 • ஆஹா..மனது ரொம்பவே லேசாக இருக்கிறது, இந்த மாதிரி சுகமான பாடல்களை கேட்க்கும் போது. இனிய தென்றலே பாடல் சங்கர்-கணேஷ் இசையில் வந்தது என்று இன்றுதான் தெரியும். இளையராஜா என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

 • //G.Ragavan said…
  ஆகா…எம்பதுகளின் அபூர்வ பாடல்களா…காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.//

  வணக்கம் ராகவன்

  வருகைக்கு நன்றி அடுத்த பகுதி விரைவில் வரும்.

  //CVR said…
  அதுவும் “மைனே பியார் கியா” படம் எனக்கு மிக பிடித்த பாடல்கள் நிறம்பிய படம். அந்த பாடலை அழகு தமிழில் கேட்க மேலும் இனிமை!! :-)//

  வாங்க சிவிஆர்

  நம்ம எஸ்.பி.பி சார் பாடினதாச்சே, எல்லாம் இனிமை.

 • //இசைப்பித்தன் said…
  ஆஹா..மனது ரொம்பவே லேசாக இருக்கிறது, இந்த மாதிரி சுகமான பாடல்களை கேட்க்கும் போது. இனிய தென்றலே பாடல் சங்கர்-கணேஷ் இசையில் வந்தது என்று இன்றுதான் தெரியும்.//

  வாஙக் இசைப்பித்தன்

  90களில் சென்னை வானொலி தான் எனக்கு இந்தப் பாட்டை அறிமுகப்படுத்தியது. நல்ல பாட்டு இல்லையா.

  //மாயா said…
  அருமையான பாடல் தொகுப்பு நன்றி//

  வருகைக்கு நன்றிகள் மாயா

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *