உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?


இந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.

இங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.

யுவன் சங்கர் ராஜா

பருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.

வித்யாசாகர்

இடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் “காற்றிற்கும் மொழி” கொடுத்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மான்

வித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று “சிவாஜி” படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.
விஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

சிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன்? என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.

மணிசர்மா

சென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.

விஜய் ஆண்டனி

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்
ஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.

தினா

“மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே” மறக்க முடியுமா? தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.

இளையராஜா

இப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா? இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.

பரத்வாஜ்

பழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.

டி.இமான்

நடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.

சபேஷ் முரளி

சபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது “அம்முவாகிய நான்”.

ஸ்ரீகாந்த் தேவா

“நாளைய பொழுதும் உன்னோடு” திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

ரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். “உன்னாலே உன்னாலே”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” மூலம் பரவசப்படுத்தியவர்.

சரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.
document.write(dispSurvey(/*survey title*/’2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?’, /*option values*/ ‘யுவன் சங்கர் ராஜா {வித்யாசாகர்{ஏ.ஆர்.ரஹ்மான் {ஜி.வி.பிரகாஷ்குமார் {மணிசர்மா {விஜய் ஆண்டனி {தினா {இளையராஜா{பரத்வாஜ்{டி.இமான்{சபேஷ் முரளி{ஸ்ரீகாந்த் தேவா{ஹாரிஸ் ஜெயராஜ்

40 thoughts on “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?

 • பிரபா,

  யுவனை முதலில் போட்டு போட்டி முடிவினை தொடக்கத்திலேயே அறிவிக்கும் உமது கருத்துத் திணிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்! ஹிஹி…

  யுவனுக்கு ஒரு குத்து குத்திட்டேன். ( ஒருதடவைதான் குத்தனுமா?! )

 • ஆகா

  தேர்தல் ஊழலை இவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிக்கிறீங்களே 😉

  ஆனா, தேர்தல் ஆணையரும் ஓட்டுப் போடலாம் தானே ;-))

  ஒரு குத்து தான் நியாயமா கொடுக்கணும், எத்தனை பேர் நம்பிக்கையைக் காப்பாத்துறாங்களோ தெரியல 🙁

 • இசை இளவரசன் யுவன் தான் இந்தவருடத்தின் ஹாட் இசையமைப்பாளர். தீபாவளிக்கு வெளிவந்த கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், வேல் என இவரின் கொடி பறக்கின்றது. பில்லா 2007 படம் வெளிவந்ததும் யுவனின் இடம் இன்னமும் உயரும்.

  சிவாஜியில் கொடிகட்டிய ரகுமான் அழகிய தமிழ்மகனில் கொஞ்சம் இறங்கிவிட்டார். மதுரைக்கு போகலாமடி பாடல் ராஜாவின் எங்கிட்டே மோதாதே பாடலை ஏனோ நினைவுக்கு கொண்டுவருகின்றது.

 • பிரபா,நான் நினைத்த சில விடயங்களைப் பற்றி நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள்…
  /அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும். /

  /ஹாரிஸ் ஜெயராஜ்
  …. ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார்/

  கற்றது தமிழில் படத்தோடு பாடல்களில் பரசவப்படுத்திய யுவனிற்கா அல்லது ஆம்பல் மெளவலில் கிறங்கடித்து diamond diamond gal…smiling smiling gal… என்று ரீமிகசையும் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கும் ஏஆர்ஆரிற்கா வாக்குப்போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

 • யுவனுக்கு நெறைய ஓட்டு விழும்னு தெரியும். ஆனா என்னோட ஓட்டு யுவனுக்கு இல்ல. இசைக்கோர்வைல இன்னும் பலபடி அவர் முன்னேற வேண்டியிருக்குங்குறது என்னோட கருத்து. அதே போல பாடகர் தெரிவும் சரியில்லைன்னோன்னு தோணல்.

  வித்யாசாகருக்குக் குடுக்கலாம். மொழி ஒன்னு போதும் அவருக்கு. யுவன் மாதிரி பத்து படம் குடுக்குறதுக்கு இவரு இப்பிடி ஒரு படம் குடுத்தாப் போதும்.

  ரகுமான் இந்தி ஆங்கிலம்னு எங்குட்டெங்குட்டோ போயிட்டாலும்….அவர் எடம் அவருக்குதான். ஆனா அவருக்கு ஏற்கனவே புகழ் கெடைச்சாச்சு.

  ஆகையால கொஞ்சம் ஒரிஜினாலிட்டி காட்டுற ஜி.வி.பிரகாஷுக்கு என்னுடைய வாக்கு.

 • தலைவா,

  யுவன் தான் நம்ம சாய்சும், ஆனால் இளையராஜா செய்த தவறையே இவரும் செய்கிறார் அதிகப்படங்கள் செய்ய வேண்டும் என மொக்கை படங்களுக்கும், அவசர கதியில் இசை அமைத்து பேரைக்கெடுத்துக்கொள்கிறார். ரஹ்மான் போல செலக்டிவாக செய்ய வேண்டும்.

  ரஹ்மான் இசை அமைத்த படங்கள் ஓட வில்லை , பாட்டு ஹிட் ஆக வில்லை என்றாலும் அவரே டாப் இசை அமைப்பாளர் ஆக இருக்க காரணம் செலக்டிவாக படங்களை ஒப்புக்கொள்வது தான்.

 • வோட்டு போடுறதெண்டால் சேலை வேட்டி வாங்கிக் கொண்டுதானே போடும் சும்மா போடச் சொல்லி எங்கள் வலைப்பதிவர்களை ஏமாற்ற பார்கிறீர்

  ஆனாலும் நான் அசின் அக்காவுக்கு இசை மீட்டிய சொறி பாட்டுக்கு இசை மீட்டிய மணி சர்மாவுக்கு பொட்டுட்டன்

 • எல்லா பெயர்களையும் பெயர்கள்/ப்டங்களை பார்த்தே ஒதுக்கிக்கொண்டே வந்தேன்!!
  கடைசியில் மிஞ்சியது ஹாரிஸ் மற்றும் வித்யாசாகர்!!
  நிறம்ப யோசித்து கடைசியில் வித்யாசாகருக்கு போனது என் ஓட்டு!!
  ஏனென்றால் ஹாரிஸின் பல பாடல்கள் இந்த வருடம் எனக்கு பிடித்திருந்தாலும் மொழி படத்தின் இசையமைப்பு இவற்றை விட சிறப்பாக தோன்றியது!!
  “காற்றின் மொழி” கேட்க ஆரம்பியுங்கள்!! லூப்பிள் போட்டு நிறுத்தவே முடியாது!!
  வித்யாசாகருக்கு என் ஓட்டை போட வைத்த பாடல் இதுதான்!! 🙂

 • யுவன் சங்கர் ராஜா தான். அவர் குத்தும் குத்து மனதையையும் மனதையும் குத்தி விட்டது.

 • இளவஞ்சிக்கு ரிப்பீட்டேய்

  தல
  மயிலு னு ஒரு படத்துக்கு இளையராசா பாடல் பதிவு செய்த காட்சியை டி.வி. ல பார்த்தேன்..யாத்தே ன்னு ஒரு பாட்டு போட்டிருக்கார்..பதிவு செய்யும்போதே ஹிட்டான பாட்டு இதுவாத்தான் இருக்கமுடியும் 🙂

 • //siva said…
  my vote will go to Immaan. . He delivered some good tunes this year. //

  வணக்கம் சிவா

  இமான் தனது தனித்துவமான இசையில் சில நல்ல பாடல்களை இந்த ஆண்டு கொடுத்திருக்கிருக்கின்றார்.
  இதுவரை வந்த வாக்குகளில் இமானுக்கு உங்கள் வாக்கு மட்டுமே உண்டு. பார்ப்போம் இன்னும் எத்தனை ரசிகர்கள் தேர்வு செய்கின்றார்கள் என்று.

  //வந்தியத்தேவன் said…
  இசை இளவரசன் யுவன் தான் இந்தவருடத்தின் ஹாட் இசையமைப்பாளர். தீபாவளிக்கு வெளிவந்த கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், வேல் என இவரின் கொடி பறக்கின்றது. பில்லா 2007 படம் வெளிவந்ததும் யுவனின் இடம் இன்னமும் உயரும். //

  வாங்கோ வந்தியத் தேவன்

  யுவனின் வராத பாட்டுக்கும் சேர்த்து (பில்லா) இப்போதே விளம்பரமா 😉
  யுவன் தான் இதுவரை வந்த வாக்குகளில் முன்னணி.

  //மை ஃபிரண்ட் ::. said…
  ஒருத்தருக்கு ஒரே ஒரு ஓட்டுதானா?

  இது நியாயமே இல்லை பிரபாண்ணா.//

  சிஸ்டர், எந்த நாட்டிலும் ஒருத்தருக்கு ஒரு ஓட்டு தான். அதிகமா கோபப்படுற ஆணும், அதிகமா ஆசப்படுற….மீதியை சொல்ல பயமாயிருக்கு 😉

  //DJ said…
  கற்றது தமிழில் படத்தோடு பாடல்களில் பரசவப்படுத்திய யுவனிற்கா அல்லது ஆம்பல் மெளவலில் கிறங்கடித்து diamond diamond gal…smiling smiling gal… என்று ரீமிகசையும் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கும் ஏஆர்ஆரிற்கா வாக்குப்போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.//

  டிஜே

  போட்டி முடிபயிறதுக்குள்ள கெதியா யோசிச்சு ஒரு முடிவை எடுங்கோ 😉

 • யுவன் இந்தவருடம் அதிகமா இசை அமைத்தது என்னமோ சரிதான்..ஆனா, அதில்
  எத்தனை மனதில் நின்றது? நாலு நாட்கள் மட்டும் கேட்க முடியும் பாட்டெல்லாம் சிறந்த பாட்டுன்னும் சொல்ல முடியாது? அந்த மெட்டை போட்டவரை சிறந்த இசை அமைப்பாளர் என்றும் சொல்ல முடியாது. அதிகமான படங்கள் பண்ணவேண்டும் என்னும் ஆர்வத்தில்,தன் திறமையை வீனடிக்கிராறோன்னு தோணுது. வித்யாசாகர் வித்தியாசமாத்தான் பண்ணுகிறார், ஆனாலும் சொற்ப படங்களில் வந்தாலும் தன் கொடியை ஆழமாகவே பதிக்கும் ரஹ்மானுக்கே என் வாக்கு. அந்த..”சகானா” மறக்க முடியுமா???

  என் வாக்கை பலமாகவே ரஹ்மானுக்கு போட்டுட்டேனுங்கோ…….

 • //கோபிநாத் said…
  நான் ஒட்டு போட்டுட்டேன்..;))

  யாருக்கு சொல்லமாட்டேன் அது உங்களுக்கே தெரியும் ;)//

  ஆகா, எனக்கு மட்டுமா? ஊரே அறிஞ்ச ரகசியமே தல 😉

  //G.Ragavan said…
  ஆகையால கொஞ்சம் ஒரிஜினாலிட்டி காட்டுற ஜி.வி.பிரகாஷுக்கு என்னுடைய வாக்கு.//

  வணக்கம் ராகவன்

  ஜீ.வி.பிரகாஷுக்கு உங்களோடு சேர்த்து தற்போதைக்கு 3 ஓட்டு வந்திருக்கு

 • //வவ்வால் said…
  தலைவா,

  யுவன் தான் நம்ம சாய்சும், ஆனால் இளையராஜா செய்த தவறையே இவரும் செய்கிறார் //

  வாங்க தல, யுவனுக்கு குட்டு கொடுத்திட்டு ஓட்டும் போட்டுட்டீங்க 😉
  ரஹ்மான் முன்னரும் செலக்டிவா தானே படம் பண்ணினார். ஆனால் அலைபாயுதே படத்துக்குப் பிறகு இவரது இசையில் ஒரு வீழ்ச்சி தெரியிற மாதிரி இல்ல?

  //துளசி கோபால் said…
  அதெல்லாம் ஓட்டுப் போட்டுட்டோம்.

  செகண்ட் பெஸ்ட்க்கு ஒரு ச்சான்ஸ் கொடுக்கக்கூடாதா?//

  வாங்க துளசிம்மா

  உங்க ஓட்டு யாருக்கு என்பது ரகசியமாவே இருக்கு ;-). இபோதைக்கு ஒரு ச்சாய்ஸ் தான். அடுத்த போட்டியில் பார்ப்போம்.

 • //தமிழ்பித்தன் said…

  ஆனாலும் நான் அசின் அக்காவுக்கு இசை மீட்டிய சொறி பாட்டுக்கு இசை மீட்டிய மணி சர்மாவுக்கு பொட்டுட்டன்//

  தம்பி, உமக்கு வோட்டு போடுற வயசே காணும், சரி சரி மணிசர்மாவுக்கே போடுங்கோ

  //Boston Bala said…
  வித்யாசாகர்//

  பாபா,
  மொழி தான் வித்யாசாகருக்கு ஓட்டுப் போட வச்சதாக்கும் 😉

 • //CVR said…
  எல்லா பெயர்களையும் பெயர்கள்/ப்டங்களை பார்த்தே ஒதுக்கிக்கொண்டே வந்தேன்!!
  கடைசியில் மிஞ்சியது ஹாரிஸ் மற்றும் வித்யாசாகர்!!//

  வாங்கய்யா காமிரா கவிஞரே

  கர்ம சிரத்தையோடு நீங்கள் ஓட்டுப் போட்ட விதமே அழகு

  //தாசன் said…
  யுவன் சங்கர் ராஜா தான். அவர் குத்தும் குத்து மனதையையும் மனதையும் குத்தி விட்டது.//

  கவனமப்பு, இதயம் குத்துப்பட்டால் தாங்காது 😉

 • //அய்யனார் said…
  இளவஞ்சிக்கு ரிப்பீட்டேய்

  தல
  மயிலு னு ஒரு படத்துக்கு இளையராசா பாடல் பதிவு செய்த காட்சியை டி.வி. ல பார்த்தேன்..யாத்தே ன்னு ஒரு பாட்டு போட்டிருக்கார்..பதிவு செய்யும்போதே ஹிட்டான பாட்டு இதுவாத்தான் இருக்கமுடியும் :)//

  தல

  எந்த சானலில் வந்தது என்று சொன்னால் நாங்களும் யூடிபில் தேடுவோம்ல

 • //குசும்பன் said…
  யுவன் தான் என் ஜாய்ஸ்:)//

  குசும்பா

  உங்க ஜாய்ஸ் லீட் பண்ணுது 😉

  //இசைப்பித்தன் said…
  என் வாக்கை பலமாகவே ரஹ்மானுக்கு போட்டுட்டேனுங்கோ…….//

  வாங்க இசைப்பித்தன்

  நன்றாக ஆய்ந்து தான் முடிவெடுத்திருக்கீங்க, உங்க தெரிவு முதலிடம் பெற வாழ்த்துக்கள்

 • //SurveySan said…
  undoubtedly YUVAN for 2007 🙂

  “Iyyayo Iyyayo” from Paruthi Veeran, paattu onne podhum.//

  வாங்க சர்வேசரே

  உங்க வேலைய நான் பண்ணீட்டிருக்கேன் 😉 என்னது வலைப்பக்கம் ஆளையே காணோமே?

 • /பிரபா,

  யுவனை முதலில் போட்டு போட்டி முடிவினை தொடக்கத்திலேயே அறிவிக்கும் உமது கருத்துத் திணிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்! ஹிஹி…//

  ரீப்பிட்டே…

  ஆனாலும் ரொம்ப செலக்டிவா செஞ்சாலும் சூப்பரா பண்ணுற ARR’க்கு தான் என்னோட ஓட்டு… 🙂

 • வாங்கய்யா இராமு

  (தம்பி பட மாதவன் பாணியில் இப்ப நான் என்ன செய்ய 😉

  யுவனை முதலில் போட்டது எதேச்சையாக நிகழ்ந்தது. அதில் எந்த வித உள் நோக்கமும் கிடையாது.

  ரஹ்மான் நெருங்குகிறார். பார்ப்போம்.

 • //நன்றாக ஆய்ந்து தான் முடிவெடுத்திருக்கீங்க, உங்க தெரிவு முதலிடம் பெற வாழ்த்துக்கள்//

  தல..வெற்றி, தோல்வி,..அது எப்படி இருந்தாலும் கவலையில்லை. ஆனால், இசையை ஆளும் தகுதியான ஒருவருக்குத்தான் நம்ம ஓட்டு போய் சேர்ந்த திருப்தி, அது போதும் தலைவா.

  ஆமா, ஓட்டுப்பதிவு எப்ப முடியும்?

 • வணக்கம்.. நான் இந்த பகுதிக்கு புதிய வரவு. ரொம்ப வித்தியாசமான,அருமையான பகுதி. உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.

  சரி..இப்போ வோட்டு விஷயத்துக்கு வருவோம். நான் இசைப்பிரியனின் கருத்தோடு முழுமையாக ஒத்து போகிறேன். யுவன் சமீபகாலங்களில் அதிக படங்களுக்கு இசையமைப்பதால் மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் என்று ஒத்துக்கொள்ள முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் நம் தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு சென்றிருக்கிறார். நாட்டுப்பற்றையும் தன் இசைமூலம் கௌரவப்படுத்தி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தியில் கூட, நாமெல்லாம் கர்வப்பட்டுகொள்ளும் அளவு அவரின் முதல் படமான “ரோஜா” படத்தின் பாடல் இன்றைய தேதியில் டாப் 10 இடத்தில் இடம் பிடித்திருக்கிறது.

  http://tamil.cinesouth.com/masala/hotnews/new/13112007-3.shtml

  இவ்வளவு பெருமையையும் தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கும் ரஹ்மான்தான் என் பார்வையில் சிறந்த இசையமைப்பாளர். நானும் என் வாக்கை ரஹ்மானுக்கே போட்டுவிட்டேன்.

 • //இசைப்பித்தன் said…
  இசையை ஆளும் தகுதியான ஒருவருக்குத்தான் நம்ம ஓட்டு போய் சேர்ந்த திருப்தி, அது போதும் தலைவா.

  ஆமா, ஓட்டுப்பதிவு எப்ப முடியும்?//

  வாங்க தல

  போட்டியை இன்னும் 3 வாரத்திற்கு நீடித்து டிசெம்பர் இறுதி வாரத்தில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்னு நினைக்கிறேன்.

  //கண்மணி பாப்பா said…
  வணக்கம்.. நான் இந்த பகுதிக்கு புதிய வரவு. ரொம்ப வித்தியாசமான,அருமையான பகுதி. உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.//

  வாங்க கண்மணி பாப்பா

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கீங்க 😉

  ரஹ்மானை டைம் சஞ்சிகை தேர்வு செய்தது வரவேற்புக்குரியது. அதே சமயம் இசைஞானி செய்யாத சாதனையா? அவருக்கும் இந்த அங்கீரம் கிடைத்திருக்கணுமில்லியா?

 • பிரபா,

  சுருக்கமா நீங்க கொடுத்த இசையமைப்பாளர்களின் முன்னுரைபடி.. ஓட்டு யுவன்..இல்லனா வித்யாசாகர் நினைச்சிருந்தேன்..

  கடைசியில யோசிச்சி…. (கேட்டதல) பார்த்ததுல என் ஓட்டு வித்யாசாகருக்குதான்!வைரமுத்து வரிகளால் கூடுதல் வெற்றியும்கூட..!!

 • வாங்க தென்றல்

  நான் கொடுத்த அறிமுகத்தில் யுவனைப் பற்றிக் கொஞ்சம் அதிகமே சொல்லிவைத்து விட்டேன். ஆனால் வித்யாசாகர் மட்டும் சளைத்தவரா என்ன? மொழி படத்தில் தான் இதுவரை கொடுத்த பாணியில் இருந்து வித்யாசாகர் இசையினைக் கொடுத்திருக்கின்றார் என்பது என் அபிப்பிராயம். அப்படத்தில் இன்னொரு நல்முத்து “செவ்வானம் சேலை கட்டி”.

 • வாங்க வெங்கட்ராமன்

  ஓட்டுப் போட்டதுக்கு நன்றி, போட்டி பலமா இருக்கு 😉

 • கூத்தநல்லூர்க்காரரே

  இது 2007, ரோஜா வந்தது 92 இல்
  சஹாரா பூக்கள் காலமிது 😉

  ஓட்டு போட்டதுக்கு நன்றி

 • இன்றைய தமிழக இளைஞர்கள் மர்றும் கல்லூரி மாணவமாணவியரைக் கேட்டால் பட்டென்று ஹாரிஸ் ஜெயராஜைத்தான் சொல்கிரார்கள். நான் இளையராஜாவைச் சொன்னால் என்னை ‘ஓல்ட்’ என்கிறார்கள். ‘ஓல்டையெல்லாம் ஓரங்கட்டு’ன்னு ஒருத்தர் பாடிட்டு வேற போயிட்டார்; பேசாமல் நானும், ஹாரிஸிற்கே போட்டுவிடுகிறேன்.

  நான் இதை டைப் அடிக்கும்போதே, எக்கோ அடிக்கிறது: Who’s the man on the land that can stand now
  Who’s the man on the land that can stand down

  Who’s the man on the land that can stand now
  Who’s the man on the land that can stand down

  Who’s the man on the land that can stand now
  Who’s the man on the land that can stand down!

 • வாங்க பாரதீய நவீன இளவரசே

  ஆக உங்கள் ஓட்டு ஹாரிஸுக்கே முடிவாகிப் போச்சு 😉 அவரும் இந்த ஆண்டில் நல்ல பாடல்க்ள் பலவற்றைக் கொடுத்திருக்கார்.

 • Pingback: 80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *