நீங்கள் கேட்டவை 1 – காற்றினிலே வரும் கீதம்

கடந்த பதிவில் அறிவித்தது போன்று, உங்கள் விருப்பப்பாடல்களைப் பூர்த்தி செய்யும் நீங்கள் கேட்டவை பகுதியில் உங்கள் தெரிவுகளைப் பின்னூட்டமாக அனுப்பி வைத்தால் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தேர்ந்தெடுத்த ஐந்து பாடல்கள் உங்கள் விருப்பமாக இடம்பெறும் என்ற அறிவித்தலுக்கு அமைய முதலாவது பதிவு அமைகின்றது.

இந்த வாரம் பாடல் கேட்ட நேயர்களில், யோகன், மலைநாடான், ஜி.ராகவனுடைய தெரிவுகள் கிடைக்கும் பட்சத்தில் காலக்கிரமத்தில் எதிர்வரும் நீங்கள் கேட்டவை பகுதிகளில் இடம் பெறும். தமிழ்ப்பித்தன், மங்கை கேட்ட பாடல்கள் வரும் வெள்ளிக்கிழமை வலம் வர இருக்கும் நீங்கள் கேட்டவை 2 பகுதியில் இடம்பெறும். அன்பர்கள் தொடர்ந்தும் உங்கள் பாடற் தெரிவுகளை அனுப்பி வைக்கலாம். தேடற்கரிய பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவை என் பாடல் களஞ்சியத்திலிருந்து இடம்பெறவிருக்கின்றன.

இந்த வாரம் சாதாரணன் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக இசைஞானி இளையராஜா இசையில் “காற்றினிலே வரும் கீதம்” படப் பாடல்கள் ஒருபடப்பாடல்களாக அரங்கேறுகின்றன. கேட்டு மகிழுங்கள்

இந்த வார நீங்கள் கேட்டவை அறிமுகம்

பாடல்களைக் கேட்க

6 thoughts on “நீங்கள் கேட்டவை 1 – காற்றினிலே வரும் கீதம்

 • எல்லாப் பாடல்களை கேட்டுவிட்டு பின்னூட்டம் போட நேரம் இல்லை.
  அதனால் கேட்டுக்கொண்டே போடுகிறேன்.
  நல்ல பாடல்கள்.
  பகிர்ந்தமைக்கு நன்றி

 • வணக்கம் வடுவூர் குமார்

  20 மணி நேரத்துக்கு முன் போட்ட பதிவுக்கு ஒரு பதிலையும் காணவில்லையே என்று காத்திருந்தேன். (ஆனாலும் 11 பேர் பாடல்களைக் கேட்டிருக்கிறார்கள்)

  உங்கள் பதில் உற்சாகமூட்டுகின்றது. அடுத்த வார நீங்கள் கேட்டவை பகுதியில் உங்கள் விருப்பமான மூன்று முடிச்சு பாடல்கள் மற்றைய நேயர்களுடைய பாடல் தெரிவுகளோடு கட்டாயம் வரும்.

  இளமை ஊஞ்சலாடுகிறது, சிப்பிக்குள் முத்து பாடல்கள் தொடர்ந்த வாரங்களில் வரும்.

 • //சாதாரணன் said…
  பிரபா

  கேட்டேன் மகிழ்ந்தேன்.

  நன்றி.//

  வணக்கம் நண்பரே

  நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் இவ் இனிமையான பாடல்களைக் கேட்டு இன்புற்றது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்தும் நீங்கள் தேடும் பாடல்களைக் குறிப்பிட்டால் எதிர்வரும் வாரங்களில் அவை பதிவாக இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *