மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1

பிரபல பத்திரிகையாளர்
ராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தருகின்றேன்.

இப்பகுதியில் மெல்லிசை மன்னரோடு இயக்குனர் ஸ்ரீதர், பந்துலு, பீம்சிங் இணைந்து பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்களோடு நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து “நெஞ்சம் மறப்பதில்லை”, கர்ணன் படத்திலிருந்து “ஆயிரம் கரங்கள்”, பாவமன்னிப்பு படத்திலிருந்து “வந்த நாள் முதல்” ஆகிய பாடல்கள் பிறந்த கதையும் இடம்பெறுகின்றது.

தகவற் குறிப்புக்கள் நன்றி : ராணி மைந்தன்
புகைப்படம் நன்றி: MSV Times

14 thoughts on “மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1

 • பிரபா, இந்தப் புத்தகத்தை நானும் வாங்கியிருந்தேன். நிறைய சுவையான சம்பவங்கள் நிறைந்தது. இதே போல ஆனந்த விகடனின் “நானும் ஒரு ரசிகன்” என்ற தலைப்பில் மெல்லிசை மன்னர் எழுதிய தொடரும் சிறப்பு. முன்பு சென்னைத் தொலைக்காட்சியில் மெல்லிசை மன்னர் ஒரு இசைத் தொடர் நிகழ்ச்சி நடத்தினார். அந்தத் தொடரின் வீசிடி, அல்லது டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை. 🙁

 • வருகைக்கு நன்றிகள் சின்னக்குட்டி, மற்றும் ராகவன்

  ராகவன்

  பொதுவாகவே சின்னத்திரையில் வரும் இசை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக வரும் இவர் போன்ற கலைஞர்களின் அனுபவப் பகிர்வை உள்வாங்கிக்கொள்வேன். அதுவே புத்தமாக அல்லது வீ சி டி ஆகக் கிடைத்தால் பொக்கிஷம் தான். நீங்கள் சொன்னது போல் இப்படியான பல நிகழ்ச்சிகள் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டன.

 • கானா பிரபா,
  பதிவுக்கு நன்றி. மெல்லிசை மன்னர் என் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு மீண்டும் என் நன்றிகள்.

  /* ராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை */

  மெல்லிசை மன்னர் பற்றிப் புத்தகமா? இதுவரை கேள்விப்படவில்லை.தகவலுக்கு நன்றி. கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

  இராகவன்,
  /*ஒரு இசைத் தொடர் நிகழ்ச்சி நடத்தினார். அந்தத் தொடரின் வீசிடி, அல்லது டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை. 🙁 */
  இந் நிகழ்ச்சி DVD,CVD கிடைக்குமாயின் தயவு செய்து எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

 • வருகைக்கு நன்றிகள் சினேகிதி, யோகன் அண்ணா, மற்றும் செல்லி

  சினேகிதி

  போன வருசம் கனடாவுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வந்தவர், நேரேயே பார்த்திருக்கலாம். அது சரி உங்கட றேஞ்சே ஏ.ஆர்.ரகுமான் காலம் தானே 😉

  யோகன் அண்ணா

  இயக்குனர்களோடு எம்.எஸ்.வி பணியாற்றிய தொகுப்புத்தான் இது. அடுத்த பாகத்தில் பாலசந்தர், சங்கர் போன்றோர் இடம்பெறுகின்றார்கள்.

 • கானா பிரபா said…
  //வெற்றி said…
  மெல்லிசை மன்னர் பற்றிப் புத்தகமா? இதுவரை கேள்விப்படவில்லை.தகவலுக்கு நன்றி. கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.//

  வணக்கம் வெற்றி
  இப்படிப் பல நல்ல சுவையான அனுபவத்தொகுப்ப்போடு வந்திருக்கின்றன. ஆனால் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். கருத்துக்கு நன்றிகள்

 • ரொமப நீளமாக இருக்கு..
  அலுவலகத்தில் திட்டுகிறார்கள்.:-))
  முதலில் வருகிற இசையின் அளவை உங்கள் குரலில் அளவோடு வைத்திருந்தால் சீராக கேட்பதற்கு நன்றாக இருக்கும்.

 • வணக்கம் வடுவூர் குமார்

  அடுத்தமுறை 15 நிமிட அளவுக்குக் குறைந்த ஒலித்தொகுப்பைத் தருகின்றேன். கணினி ஒலிப்பதிவை இப்பொழுது தான் கற்றுக்கொண்டிருக்கின்றேன், கூடிய சீக்கிரமே இதைச் சீர்செய்துவிடுகின்றேன்.

  தங்கள் மேலான கருத்துக்கு நன்றிகள்.

 • thiru gana praba avargale,

  thangalin “neengal ketavai” parthen rasithen. aanal munborumurai kooriyapadi, engum
  kidaikkum azhagan, nandu pondra
  pada paadalgalai vida athikam kidaikatha miga nalla padalgalana manthoppu kiliye, mariya my darling pondra padalgalai oli parappinal thangalin thanithuvam melum pesappadum

  muyarchi seiyavum.

  nandri

  srikanth

 • வணக்கம் srikanth

  நீங்கள் கேட்டவை பகுதியில் பெரும்பாலும் இலகுவில் கிடைக்கும் பாடல்கள் இருந்தாலும் கேட்பவர்களுடைய விருப்பம் என்பதால் போடுகின்றேன்.

  நீங்கள் கேட்ட அரிய பாடல் தொகுப்புக்கு என ஒரு தனியான பகுதியை வெகுவிரைவில் தருகின்றேன்.

 • Pingback: மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *